Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › புதிய பெயர்கள்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் புதிய பெயர்கள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 16 பகுதிகள், வரி வரியாக.

  • திரளான செல்வத்தைவிட நற்பெயரே தெரிந்துகொள்ளத்தக்கதுநீதி 22:1
    வசனங்கள்
    நீதி 22:1திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம்.

எடுத்துக்காட்டுகள்

  • ஆபிராம் ஆபிரகாம் ஆனான்ஆதி 17:5
    வசனங்கள்
    ஆதி 17:5இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும்.
  • சாராய் சாராள் ஆனாள்ஆதி 17:15
    வசனங்கள்
    ஆதி 17:15பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும்.
  • யாக்கோபு இஸ்ரவேல் ஆனான்ஆதி 32:28
    வசனங்கள்
    ஆதி 32:28அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.
  • ராகேல் தன் மகனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பன் அவனை பென்யமீன் என்றான்ஆதி 35:18
    வசனங்கள்
    ஆதி 35:18மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.
  • பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்று பெயரிட்டான்ஆதி 41:45
    வசனங்கள்
    ஆதி 41:45மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படிப் புறப்பட்டான்.
  • மோசே நூனின் மகனாகிய ஓசெயாவுக்கு யோசுவா என்று பெயரிட்டான்எண் 13:16
    வசனங்கள்
    எண் 13:16தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
  • நகோமி: என்னை நகோமி என்று அல்ல, மாராள் என்று சொல்லுங்கள்ரூத் 1:20
    வசனங்கள்
    ரூத் 1:20அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
  • சாலொமோனுக்கு யெதிதியா என்ற பெயரும் இடப்பட்டது2 சாமு 12:24–25
    வசனங்கள்
    2 சாமு 12:24–25பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார். அவர் தீர்க்கதரிசியான நாத்தானை அனுப்ப, அவன் யெகோவாவுக்காக அவனுக்கு யெதிதியா என்று பெயரிட்டான்.
  • பார்வோனாகிய நேகோ எலியாக்கீமுக்கு யோயாக்கீம் என்று பெயர் மாற்றினான்2 இராஜா 23:34
    வசனங்கள்
    2 இராஜா 23:34யோசியாவின் மகனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் இடத்தில் ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திற்குப் போய் அங்கே மரணமடைந்தான்.
  • பாபிலோன் ராஜா மத்தனியாவுக்கு சிதேக்கியா என்று பெயர் மாற்றினான்2 இராஜா 24:17
    வசனங்கள்
    2 இராஜா 24:17அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவனுடைய சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக ஏற்படுத்தி, அவனுக்கு சிதேக்கியா என்று வேறுபெயரிட்டான்.
  • தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா: பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோதானி 1:7
    வசனங்கள்
    தானி 1:7அதிகாரிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவிற்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவிற்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
  • சீமோன் கேபா என்று அழைக்கப்பட்டான்; அதற்குப் பேதுரு என்று அர்த்தம்யோவா 1:42
    வசனங்கள்
    யோவா 1:42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
  • யாக்கோபுக்கும் யோவானுக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தமுள்ள பொவனெர்கேஸ் என்ற பெயர் இடப்பட்டதுமாற் 3:17
    வசனங்கள்
    மாற் 3:17செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
  • சீப்புருதீவானாகிய யோசே ஆறுதலின் மகன் என்று அர்த்தமுள்ள பர்னபா என்று அழைக்கப்பட்டான்அப் 4:36
    வசனங்கள்
    அப் 4:36சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
  • பவுல் என்றும் அழைக்கப்பட்ட சவுல்அப் 13:9
    வசனங்கள்
    அப் 13:9அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து:

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்