Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › நாற்பது என்ற எண்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் நாற்பது என்ற எண்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 31 பகுதிகள், வரி வரியாக.

நாற்பது நாட்கள்

  • நாற்பது பகலும் நாற்பது இரவும் பூமியின்மேல் மழை பெய்ததுஆதி 7:4, ஆதி 7:12, ஆதி 7:17
    வசனங்கள்
    ஆதி 7:4இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார்.
    ஆதி 7:12நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
    ஆதி 7:17வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
  • நாற்பது நாட்களுக்குப் பின் நோவா பேழையின் ஜன்னலைத் திறந்தான்ஆதி 8:6
    வசனங்கள்
    ஆதி 8:640 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
  • யாக்கோபுக்குச் சுகந்தவர்க்கமிட நாற்பது நாட்கள் ஆனதுஆதி 50:3
    வசனங்கள்
    ஆதி 50:3பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.
  • மோசே நாற்பது பகலும் நாற்பது இரவும் மலையில் இருந்தான்யாத் 24:18, யாத் 34:28, உபா 9:9
    வசனங்கள்
    யாத் 24:18மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
    யாத் 34:28அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் யெகோவாவோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
    உபா 9:9யெகோவா உங்களுடன்செய்த உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாட்கள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன்.
  • வேவுகாரர் நாற்பது நாட்களுக்குப் பின் திரும்பினார்கள்எண் 13:25
    வசனங்கள்
    எண் 13:25அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
  • கோலியாத் நாற்பது நாட்கள் காலையிலும் மாலையிலும் வெளியே வந்தான்1 சாமு 17:16
    வசனங்கள்
    1 சாமு 17:16அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான்.
  • எலியா நாற்பது பகலும் இரவும் ஓரேப்வரை நடந்தான்1 இராஜா 19:8
    வசனங்கள்
    1 இராஜா 19:8அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான்.
  • யோனா: இன்னும் நாற்பது நாட்களில் நினிவே கவிழ்க்கப்படும்யோனா 3:4
    வசனங்கள்
    யோனா 3:4யோனா நகரத்தில் நுழைந்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
  • இயேசு நாற்பது பகலும் நாற்பது இரவும் உபவாசித்தார்மத் 4:2
    வசனங்கள்
    மத் 4:2அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
  • உயிர்த்தெழுந்தபின் இயேசு நாற்பது நாட்கள் காட்சியளித்தார்அப் 1:3
    வசனங்கள்
    அப் 1:3அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

நாற்பது வருடங்கள்

  • இஸ்ரவேல் வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் மன்னாவை உண்டதுயாத் 16:35
    வசனங்கள்
    யாத் 16:35இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.
  • வேவுபார்த்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வருடமாக நாற்பது வருடங்கள் அலைந்து திரிதல்எண் 14:34
    வசனங்கள்
    எண் 14:34நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
  • ஈசாக்கு நாற்பது வயதில் ரெபெக்காளை மணந்தான்ஆதி 25:20
    வசனங்கள்
    ஆதி 25:20ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது 40 வயதாயிருந்தான்; இவள் பதான் அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
  • மோசே நாற்பது வயதில் தன் மக்களைப் பார்க்கப்போனான்; நாற்பது வருடங்களுக்குப் பின் முட்செடிஅப் 7:23, அப் 7:30
    வசனங்கள்
    அப் 7:23அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
    அப் 7:30நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
  • பல நியாயாதிபதிகளின் காலத்தில் தேசம் நாற்பது வருடங்கள் அமைதியாக இருந்ததுநியா 3:11, நியா 5:31, நியா 8:28
    வசனங்கள்
    நியா 3:11தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான்.
    நியா 5:31யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.
    நியா 8:28இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருடங்கள் அமைதியாக இருந்தது.
  • பெலிஸ்தர் இஸ்ரவேலை நாற்பது வருடங்கள் ஆண்டார்கள்நியா 13:1
    வசனங்கள்
    நியா 13:1இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், யெகோவா அவர்களை 40 வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
  • ஏலி இஸ்ரவேலை நாற்பது வருடங்கள் நியாயம் விசாரித்தான்1 சாமு 4:18
    வசனங்கள்
    1 சாமு 4:18அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி இருக்கையிலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாந்து விழுந்தான்; அவன் முதிர்வயதானவனும் அதிக பருமனானவனுமாக இருந்தபடியால், அவன் பிடரி முறிந்து இறந்துபோனான். அவன் இஸ்ரவேலை 40 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
  • சவுலின் கீழ் நாற்பது வருடங்கள் என்று பவுல் சொல்கிறான்அப் 13:21
    வசனங்கள்
    அப் 13:21அதற்குப்பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாக அவர்களுக்குக் கொடுத்தார்.
  • தாவீது நாற்பது வருடங்கள் அரசாண்டான்: எப்ரோனில் ஏழு, எருசலேமில் முப்பத்துமூன்று2 சாமு 5:4, 1 இராஜா 2:11
    வசனங்கள்
    2 சாமு 5:4தாவீது ராஜாவாகும்போது, 30 வயதாக இருந்தான்; அவன் 40 வருடங்கள் ஆட்சி செய்தான்.
    1 இராஜா 2:11தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்; அவன் எப்ரோனில் 7 வருடங்களும், எருசலேமில் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான்.
  • சாலொமோன் நாற்பது வருடங்கள் அரசாண்டான்1 இராஜா 11:42
    வசனங்கள்
    1 இராஜா 11:42சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலர்களையெல்லாம் அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்.
  • யோவாஸ் எருசலேமில் நாற்பது வருடங்கள் அரசாண்டான்2 இராஜா 12:1
    வசனங்கள்
    2 இராஜா 12:1யெகூவின் ஏழாம் வருட ஆட்சியில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள்.

நாற்பது அடிகள்

  • நியாயப்பிரமாணம் நாற்பது அடிகளுக்கு மேல் அனுமதிக்கவில்லைஉபா 25:3
    வசனங்கள்
    உபா 25:3அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.
  • பவுல் ஐந்து முறை ஒன்று குறைய நாற்பது அடிகள் பெற்றான்2 கொரி 11:24
    வசனங்கள்
    2 கொரி 11:24யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்;

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்