ஆராயுங்கள் › தலைப்புகள் › இரட்டையர்கள்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் இரட்டையர்கள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 8 பகுதிகள், வரி வரியாக.
ஏசாவும் யாக்கோபும்
- ரெபெக்காளின் இரட்டைப் பிள்ளைகள் அவள் வயிற்றில் ஒன்றோடொன்று மோதினஆதி 25:22
வசனங்கள்
ஆதி 25:22அவளது கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: “இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ” என்று சொல்லி, யெகோவாவிடத்தில் விசாரிக்கப் போனாள்.
- ஏசா சிவப்பாகவும் ரோமம் மூடியவனாகவும் முதலில் வெளிப்பட்டான்ஆதி 25:24–25
வசனங்கள்
ஆதி 25:24–25பிரசவநேரம் பூரணமானபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாகவும் உடல்முழுவதும் ரோமத்தாலான அங்கியைப் போர்த்தவன் போலவும் பிறந்தான்; அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள்.
- யாக்கோபு ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்ஆதி 25:26
வசனங்கள்
ஆதி 25:26பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான்.
- இரட்டையர்கள் பிறந்தபோது ஈசாக்குக்கு அறுபது வயதுஆதி 25:26
வசனங்கள்
ஆதி 25:26பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான்.
பாரேசும் சேராவும்
- தாமார் இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்; ஒருவனின் கையில் சிவப்பு நூல் கட்டப்பட்டதுஆதி 38:27–28
வசனங்கள்
ஆதி 38:27–28அவளுக்குப் பிரசவநேரம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, “இது முதலாவது வெளிப்பட்டது” என்றாள்.
- ஆனால் அவனுடைய சகோதரன் முதலில் வெளிப்பட்டான்; அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டதுஆதி 38:29
வசனங்கள்
ஆதி 38:29அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: “நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும்” என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது.
- பின்பு கையில் சிவப்பு நூலோடு சேரா வெளிப்பட்டான்ஆதி 38:30
வசனங்கள்
ஆதி 38:30பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.
மேலும்
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்