Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › துருத்திகளும் ஜாடிகளும் குப்பிகளும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் துருத்திகளும் ஜாடிகளும் குப்பிகளும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 31 பகுதிகள், வரி வரியாக.

தண்ணீர், திராட்சைரசம், பாலுக்கான துருத்திகள்

  • ஆபிரகாம் ஆகாருக்கு அப்பமும் ஒரு துருத்தி தண்ணீரும் கொடுத்தான்ஆதி 21:14
    வசனங்கள்
    ஆதி 21:14ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள்.
  • துருத்தி வெறுமையானபோது அவள் ஒரு கிணற்றைக் கண்டு அதை நிரப்பினாள்ஆதி 21:15, ஆதி 21:19
    வசனங்கள்
    ஆதி 21:15தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு,
    ஆதி 21:19தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
  • யாகேல் சிசெராவுக்குப் பால் துருத்தியிலிருந்து குடிக்கக் கொடுத்தாள்நியா 4:19
    வசனங்கள்
    நியா 4:19அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக இருக்கிறேன் என்றான்; அவள் பால் இருக்கும் தோல்பையை திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.
  • கிபியோனியர் கிழிந்து தைக்கப்பட்ட பழைய திராட்சைரசத் துருத்திகளைக் காட்டினார்கள்யோசு 9:4, யோசு 9:13
    வசனங்கள்
    யோசு 9:4ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் தேச பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து,
    யோசு 9:13நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
  • அன்னாள் ஒரு காளையோடும் மாவோடும் ஒரு துருத்தி திராட்சைரசத்தோடும் சாமுவேலைச் சீலோவுக்குக் கொண்டுவந்தாள்1 சாமு 1:24
    வசனங்கள்
    1 சாமு 1:24அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.
  • பெத்தேலுக்குப் போகும் மூன்று பேர்: ஆட்டுக்குட்டிகள், மூன்று அப்பங்கள், ஒரு துருத்தி திராட்சைரசம்1 சாமு 10:3
    வசனங்கள்
    1 சாமு 10:3நீ அந்த இடத்தைவிட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனிதர்கள் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சை ரசமுள்ள ஒரு தோல்பையும் கொண்டுவந்து,
  • ஈசாய் அப்பத்தோடும் ஒரு துருத்தி திராட்சைரசத்தோடும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியோடும் தாவீதைச் சவுலிடம் அனுப்பினான்1 சாமு 16:20
    வசனங்கள்
    1 சாமு 16:20அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான்.
  • அபிகாயில் தாவீதுக்கு இரண்டு துருத்தி திராட்சைரசமும் அதிக உணவும் கொண்டுவந்தாள்1 சாமு 25:18
    வசனங்கள்
    1 சாமு 25:18அப்பொழுது அபிகாயில் வேகமாக 200 அப்பங்களையும் இரண்டு தோல்பை திராட்சை ரசத்தையும், சமையல்செய்யப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயிற்றையும், வற்றலாக்கப்பட்ட 100 திராட்சை குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
  • சுமை ஏற்றிய கழுதைகளோடும் ஒரு துருத்தி திராட்சைரசத்தோடும் சீபா தாவீதைச் சந்தித்தான்2 சாமு 16:1
    வசனங்கள்
    2 சாமு 16:1தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது.
  • இயேசு: பழைய துருத்திகளில் புதிய திராட்சைரசத்தை ஒருவனும் வார்ப்பதில்லைமத் 9:17, மாற் 2:22, லூக் 5:37–38
    வசனங்கள்
    மத் 9:17புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
    மாற் 2:22ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
    லூக் 5:37–38ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும். புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.
  • எலிகூ: புதிய துருத்தியைப்போல என் வயிறு வெடிக்கப்போகிறதுயோபு 32:19
    வசனங்கள்
    யோபு 32:19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
  • ஒரு சங்கீதக்காரன்: புகையில் காய்ந்த துருத்தியைப்போலசங் 119:83
    வசனங்கள்
    சங் 119:83புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
  • ஒரு சங்கீதக்காரன்: என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்சங் 56:8
    வசனங்கள்
    சங் 56:8என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?

ஜாடிகளும் குப்பிகளும்

  • ரெபெக்காள் தன் குடத்தைத் தோளின்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்ஆதி 24:15
    வசனங்கள்
    ஆதி 24:15அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்.
  • கிதியோனின் ஆட்கள் பானைகளுக்குள் தீவட்டிகளைச் சுமந்து, பானைகளை உடைத்தார்கள்நியா 7:16, நியா 7:19–20
    வசனங்கள்
    நியா 7:16அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
    நியா 7:19–20நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த 100 பேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
  • சாமுவேல் ஒரு குப்பி எண்ணெயைச் சவுலின் தலையின்மேல் ஊற்றினான்1 சாமு 10:1
    வசனங்கள்
    1 சாமு 10:1அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா?
  • தூங்கும் சவுலின் தலைமாட்டிலிருந்து தாவீது ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்தான்1 சாமு 26:12
    வசனங்கள்
    1 சாமு 26:12தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; யெகோவா அவர்களுக்கு அயர்ந்த தூக்கத்தை வரச்செய்ததால், அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள்.
  • சாரிபாத் விதவையிடம் பானையில் ஒரு பிடி மாவும் கொஞ்சம் எண்ணெயும் இருந்தன1 இராஜா 17:12
    வசனங்கள்
    1 இராஜா 17:12அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தவிர, என்னிடத்தில் ஒரு அப்பமும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என்னுடைய மகனும் சாப்பிட்டு, சாப்பிட ஒன்றுமில்லாமையால் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்த இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
  • ஒரு விதவை பாத்திரங்கள் தீரும்வரை எண்ணெயை ஊற்றினாள்2 இராஜா 4:2–6
    வசனங்கள்
    2 இராஜா 4:2–6எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெயைத் தவிர உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, நீயும் உன் பிள்ளைகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்றி, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின்பு, அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறு பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோனது.
  • எலிசா ஒரு குப்பி எண்ணெயோடு ஒரு இளம் தீர்க்கதரிசியை ராமோத் கீலேயாத்துக்கு அனுப்பினான்2 இராஜா 9:1
    வசனங்கள்
    2 இராஜா 9:1அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஒருவனை அழைத்து: நீ பயணத்திற்கான உடையணிந்துகொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
  • எரேமியா குயவனின் மண்பானையை வாங்கி மூப்பர்களுக்கு முன்பாக அதை உடைத்தான்எரே 19:1, எரே 19:10
    வசனங்கள்
    எரே 19:1யெகோவா சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
    எரே 19:10உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
  • கானாவில் ஆறு கற்ஜாடிகள், ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும், விளிம்புவரை நிரப்பப்பட்டனயோவா 2:6–7
    வசனங்கள்
    யோவா 2:6–7யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள்.
  • தண்ணீர்க்குடம் சுமந்துபோகும் ஒருவன் சீடர்களை வழிநடத்துவான்மாற் 14:13
    வசனங்கள்
    மாற் 14:13அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்;
  • சமாரியப் பெண் தன் தண்ணீர்க்குடத்தை வைத்துவிட்டுப் பட்டணத்திற்குள் போனாள்யோவா 4:28
    வசனங்கள்
    யோவா 4:28அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:
  • ஒரு பெண் நளதத் தைலமுள்ள வெள்ளைக்கல் குப்பியை உடைத்து இயேசுவின் தலையின்மேல் ஊற்றினாள்மாற் 14:3
    வசனங்கள்
    மாற் 14:3அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்