ஆராயுங்கள் › தலைப்புகள் › வேவுகாரர்களும் ஒற்றர்களும்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் வேவுகாரர்களும் ஒற்றர்களும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 34 பகுதிகள், வரி வரியாக.
- யோசேப்பு தன் சகோதரர்களைக் குற்றம்சாட்டுகிறான்: நீங்கள் வேவுகாரர்கள்!ஆதி 42:9, ஆதி 42:14
- சகோதரர்கள் பதில் சொல்கிறார்கள்: உமது அடியார்கள் நேர்மையானவர்கள், வேவுகாரர்கள் அல்லஆதி 42:11
வசனங்கள்
ஆதி 42:11நாங்கள் எல்லோரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நேர்மையானவர்கள்; உமது அடியார் உளவாளிகள் அல்ல” என்றார்கள்.
பன்னிரண்டு வேவுகாரர்கள்
- கானானை வேவுபார்க்க மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தலைவனை அனுப்புகிறான்எண் 13:2, உபா 1:23
வசனங்கள்
எண் 13:2“நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார்.
உபா 1:23அது எனக்கு நன்றாகக்கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.
- அவர்களுக்குக் கட்டளை: மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சமோ அதிகமோ என்று பாருங்கள்எண் 13:17–18
வசனங்கள்
எண் 13:17–18அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
- சீன் வனாந்திரம்முதல் ரேகொப்வரை போனார்கள்எண் 13:21
வசனங்கள்
எண் 13:21அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
- எஸ்கோலில் இரண்டு பேர் ஒரே திராட்சைக்குலையை ஒரு தடியில் சுமந்தார்கள்எண் 13:23
வசனங்கள்
எண் 13:23பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
- நாற்பது நாட்களுக்குப் பின் திரும்பினார்கள்எண் 13:25
வசனங்கள்
எண் 13:25அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
- அவர்களுடைய அறிக்கை: பாலும் தேனும் ஓடுகிற தேசம், ஆனால் அரணான பட்டணங்கள்எண் 13:27–28
வசனங்கள்
எண் 13:27–28அவர்கள் மோசேயை நோக்கி: “நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம்.
- காலேப்: நாம் நிச்சயமாக அதை வெல்லமுடியும்! மற்றவர்கள் மறுத்தார்கள்எண் 13:30–31
வசனங்கள்
எண் 13:30–31அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான். அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: “நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள்.
- எங்கள் பார்வைக்கு நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போலத் தோன்றினோம்எண் 13:33
வசனங்கள்
எண் 13:33அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
- வேவுபார்த்த நாற்பது நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு வருடமாக, வனாந்திரத்தில் நாற்பது வருடங்களாயினஎண் 14:34
வசனங்கள்
எண் 14:34நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாட்கள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருடமாக, நீங்கள் நாற்பது வருடங்கள் உங்களுடைய அக்கிரமங்களைச் சுமந்து, என்னுடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
- வேவுகாரர்களில் யோசுவாவும் காலேபும் மட்டுமே உயிரோடிருந்தார்கள்எண் 14:36–38
வசனங்கள்
எண் 14:36–38அந்தத் தேசத்தைச் சோதித்துப் பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்தத் தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள்.
எரிகோவும் ராகாபும்
- யோசுவா சித்தீமிலிருந்து இரகசியமாக இரண்டு வேவுகாரரை அனுப்புகிறான்; அவர்கள் ராகாபிடம் தங்குகிறார்கள்யோசு 2:1
வசனங்கள்
யோசு 2:1நூனின் மகனாகிய யோசுவா சித்தீம் பாளையத்திலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள்.
- ராகாப் அவர்களைத் தன் மேல்தளத்தில் சணல்தட்டைகளின் கீழ் மறைக்கிறாள்யோசு 2:4–6
வசனங்கள்
யோசு 2:4–6அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
- பட்டணத்தின் மதிலிலுள்ள தன் வீட்டிலிருந்து அவள் அவர்களைக் கயிற்றால் இறக்குகிறாள்யோசு 2:15
வசனங்கள்
யோசு 2:15அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள்.
- ஒப்புக்கொண்ட அடையாளம்: ஜன்னலில் கட்டிய சிவப்பு நூல் கயிறுயோசு 2:18
வசனங்கள்
யோசு 2:18இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம்.
- அவர்கள் மூன்று நாட்கள் மலைகளில் ஒளிந்திருந்து, பின்பு யோசுவாவிடம் அறிவிக்கிறார்கள்யோசு 2:16, யோசு 2:22–23
வசனங்கள்
யோசு 2:16அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைப் பார்க்காதபடி, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவரும்வரைக்கும் அங்கே மூன்றுநாட்கள் ஒளிந்திருந்து, பின்பு உங்களுடைய வழியிலே போங்கள் என்றாள்.
யோசு 2:22–23அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவரும்வரைக்கும், மூன்றுநாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழிகளிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணமுடியாமல்போனார்கள். அந்த இரண்டு மனிதர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அவனுக்குத் தெரிவித்து;
- இரண்டு வேவுகாரர்களும் ராகாபையும் அவளுடைய முழுக் குடும்பத்தையும் வெளியே கொண்டுவருகிறார்கள்யோசு 6:22–23
வசனங்கள்
யோசு 6:22–23யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள்.
- வேவுகாரரை ஏற்றுக்கொண்டதற்காக எபிரெயர் நிருபமும் யாக்கோபும் ராகாபை நினைவுகூருகிறார்கள்எபி 11:31, யாக் 2:25
வேறு வேவுகாரர்கள்
- வேவுகாரர் யாசேருக்குப் போனபின் இஸ்ரவேல் அதன் கிராமங்களைப் பிடித்ததுஎண் 21:32
வசனங்கள்
எண் 21:32பின்பு, மோசே யாசேர் பட்டணத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கைப்பற்றி, அங்கே இருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
- ஆயிக்கு அனுப்பப்பட்ட வேவுகாரர்: இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போதும்யோசு 7:2–3
வசனங்கள்
யோசு 7:2–3யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து, யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
- ஐந்து தாணியர் லாயீசை வேவுபார்க்கிறார்கள்: துணையில்லாத அமைதியான மக்கள்நியா 18:2, நியா 18:7
வசனங்கள்
நியா 18:2ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் மக்கள் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனிதர்களாகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுவரை போய், அங்கே இரவு தங்கினார்கள்.
நியா 18:7அப்பொழுது அந்த ஐந்து மனிதர்களும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற மக்கள் சீதோனியர்களுடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமைதியாகவும் எந்த குறையில்லாமலும் சுகமாக இருக்கிறதையும், அவர்கள் சீதோனியர்களுக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் இல்லை என்பதையும் பார்த்து,
- சவுல் வந்துவிட்டான் என்று உறுதிப்படுத்த தாவீது வேவுகாரரை அனுப்புகிறான்1 சாமு 26:4
வசனங்கள்
1 சாமு 26:4தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.
- தாவீதின் ஆறுதல் சொல்லும் தூதர்கள் வேவுகாரர் என்று அம்மோனியப் பிரபுக்கள் சந்தேகிக்கிறார்கள்2 சாமு 10:3
வசனங்கள்
2 சாமு 10:3அம்மோன் மக்களின் பிரபுக்கள் தங்களுடைய ஆண்டவனான ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனிற்கு மரியாதைக் கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன்னுடைய வேலைக்கரர்களை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
- அப்சலோம் கோத்திரங்களுக்குள் வேவுகாரரை அனுப்புகிறான்: எக்காளம் கேட்டதும் அப்சலோம் ராஜாவானான் என்று சொல்லுங்கள்2 சாமு 15:10
வசனங்கள்
2 சாமு 15:10அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் உளவாளிகளை அனுப்பி, நீங்கள் எக்காளச் சத்தத்தைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
- ஆசாரியர்களின் மகன்களாகிய அகிமாசும் யோனத்தானும் தாவீதுக்குச் செய்தி கொண்டுபோகவேண்டும்2 சாமு 15:35–36
வசனங்கள்
2 சாமு 15:35–36உன்னோடு அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ஏதேனும் செய்தியை கேள்விப்பட்டால், அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு தெரியப்படுத்து. அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்களுடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் மூலமாக எனக்கு அனுப்புங்கள் என்றான்.
- என்ரோகேலில் ஒரு வேலைக்காரி அவர்களுக்குச் செய்தி கொண்டுவருகிறாள்; அவர்கள் ஒரு கிணற்றில் ஒளிகிறார்கள்2 சாமு 17:17–19
வசனங்கள்
2 சாமு 17:17–19யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் நுழைவதை யாரும் காணாதபடி, என்ரோகேல் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள். ஒரு வாலிபன் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாகப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்கள்; அவனுடைய முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள். வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றின்மேல் விரித்து, அவர்கள் உள்ளே இருக்கிறதைத் தெரியாதபடி, அதின்மேல் தானியத்தைப் பரப்பிவைத்தாள்.
- நேர்மையானவர்கள்போல நடிக்கும் ஒற்றர்கள் இயேசுவை அவருடைய வார்த்தைகளில் பிடிக்க முயல்கிறார்கள்லூக் 20:20
வசனங்கள்
லூக் 20:20அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாக நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
- பவுல்: கள்ளச்சகோதரர்கள் நம்முடைய சுதந்திரத்தை வேவுபார்க்க நுழைந்தார்கள்கலா 2:4
வசனங்கள்
கலா 2:4கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்