ஆராயுங்கள் › தலைப்புகள் › மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 21 பகுதிகள், வரி வரியாக.
வனாந்திரத்தில்
- இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க ஒவ்வொருவனும் எண்ணப்பட்டான்எண் 1:2–3
வசனங்கள்
எண் 1:2–3“நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.
- எண்ணப்பட்ட ஒவ்வொருவனும், செல்வந்தனும் ஏழையும், அரைச்சேக்கல் கொடுத்தான்யாத் 30:13–15, யாத் 38:26
வசனங்கள்
யாத் 30:13–15எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.
யாத் 38:26எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
- முதல் கணக்கு: 603,550எண் 1:46
வசனங்கள்
எண் 1:466,03,550 பேராயிருந்தார்கள்.
- லேவியர்கள் மற்ற கோத்திரங்களோடு எண்ணப்படவில்லைஎண் 1:47–49
வசனங்கள்
எண் 1:47–49லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை. யெகோவா மோசேயை நோக்கி: “நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,
- ஒரு மாதம் முதற்கொண்டு லேவிய ஆண்கள்: 22,000எண் 3:39
வசனங்கள்
எண் 3:39மோசேயும், ஆரோனும், யெகோவாவுடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் 22,000 பேராக இருந்தார்கள்.
- யோர்தானருகே இரண்டாம் கணக்கு: 601,730எண் 26:2, எண் 26:51
- முதலில் எண்ணப்பட்டவர்களில் காலேபும் யோசுவாவும் தவிர ஒருவனும் மீதியாயிருக்கவில்லைஎண் 26:64–65
வசனங்கள்
எண் 26:64–65முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று யெகோவா அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.
தாவீதின் கணக்கெடுப்பு
- கணக்கெடுப்புக்கு ஒன்பது மாதமும் இருபது நாட்களும் ஆனது2 சாமு 24:8
வசனங்கள்
2 சாமு 24:8இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதங்களும் இருபது நாட்களும் ஆனபிறகு எருசலேமிற்கு வந்தார்கள்.
- சாமுவேல்: இஸ்ரவேலில் 800,000, யூதாவில் 500,0002 சாமு 24:9
வசனங்கள்
2 சாமு 24:9யோவாப் மக்களைக் கணக்கெடுத்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் 5,00,000 பேர் இருந்தார்கள்.
- நாளாகமம்: இஸ்ரவேலில் 1,100,000, யூதாவில் 470,0001 நாளா 21:5
வசனங்கள்
1 நாளா 21:5போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.
- யோவாப் லேவியையும் பென்யமீனையும் எண்ணவில்லை1 நாளா 21:6
வசனங்கள்
1 நாளா 21:6ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான்.
- கணக்கெடுப்புக்குப் பின் தாவீதின் மனசாட்சி அவனை வாதித்தது2 சாமு 24:10
வசனங்கள்
2 சாமு 24:10இவ்விதமாக மக்களை எண்ணிப்பார்த்த பின்பு, ராஜாவின் இருதயம் அவனை நோகடித்தது; அப்பொழுது தாவீது யெகோவாவை நோக்கி: நான் இப்படிச் செய்ததால் பெரிய பாவம் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் பெரிய முட்டாள்தனமான காரியம் செய்தேன் என்றான்.
- அந்த எண்ணிக்கை ராஜாவாகிய தாவீதின் நாளாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை1 நாளா 27:24
வசனங்கள்
1 நாளா 27:24செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.
வேறு கணக்கெடுப்புகள்
- முப்பது வயதுமுதல் லேவியர்கள்: 38,0001 நாளா 23:3
வசனங்கள்
1 நாளா 23:3அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம்.
- சாலொமோன் தேசத்திலிருந்த 153,600 அந்நியரை எண்ணினான்2 நாளா 2:17
வசனங்கள்
2 நாளா 2:17தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருந்த வேறு தேசத்தாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் ஒருலட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராக இருந்தார்கள்.
- திரும்பி வந்த சிறையிருப்பினர் 42,360 பேர்எஸ்றா 2:64
வசனங்கள்
எஸ்றா 2:64சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
- அகஸ்து கணக்கெடுப்புக்குக் கட்டளையிட்டான்; சிரேனியு சீரியாவின் அதிபதியாக இருந்தான்லூக் 2:1–2
வசனங்கள்
லூக் 2:1–2அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
- பெயர் பதிவு செய்ய யோசேப்பும் மரியாளும் பெத்லெகேமுக்குப் போனார்கள்லூக் 2:3–5
வசனங்கள்
லூக் 2:3–5எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
- கணக்கெடுப்பின் நாட்களில் கலிலேயனாகிய யூதாஸ் எழும்பினான்அப் 5:37
வசனங்கள்
அப் 5:37அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்