Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › ஒட்டகங்கள்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் ஒட்டகங்கள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 26 பகுதிகள், வரி வரியாக.

  • ஒட்டகம் உண்ணப்படக்கூடாதுலேவி 11:4
    வசனங்கள்
    லேவி 11:4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
  • ஆபிராம், யாக்கோபு, யோபு ஆகியோர் ஒட்டகங்களைத் தங்கள் செல்வத்தில் எண்ணினார்கள்ஆதி 12:16, ஆதி 30:43, யோபு 1:3
    வசனங்கள்
    ஆதி 12:16அவளால் அவன் ஆபிராமுக்குத் தயவு செய்தான்; அவனுக்கு ஆடுமாடுகளும், ஆண் கழுதைகளும், பெண் கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் கிடைத்தன.
    ஆதி 30:43இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
    யோபு 1:3அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
  • யோபுக்கு 3,000 ஒட்டகங்கள், பின்பு 6,000யோபு 1:3, யோபு 42:12
    வசனங்கள்
    யோபு 1:3அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
    யோபு 42:12யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது.
  • இஸ்மவேலனாகிய ஓபில் தாவீதின் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாளனாக இருந்தான்1 நாளா 27:30
    வசனங்கள்
    1 நாளா 27:30ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,

வரலாறுகளில்

  • ஈசாக்குக்குப் பெண் தேட ஆபிரகாமின் வேலைக்காரன் பத்து ஒட்டகங்களைக் கொண்டுபோனான்ஆதி 24:10
    வசனங்கள்
    ஆதி 24:10பின்பு அந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னோடு கொண்டுபோனான்; தன் எஜமானுடைய அனைத்துவகையான விலையுயர்ந்த பொருட்களும் அவனுடைய கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், ஆரம்நாரஹி நாகோருடைய ஊருக்கு வந்து,
  • மாலையில் கிணற்றருகே ஒட்டகங்களை மண்டியிடச் செய்தான்ஆதி 24:11
    வசனங்கள்
    ஆதி 24:11ஊருக்குப் வெளியே ஒரு கிணற்றினருகில், தண்ணீர் இறைக்க பெண்கள் வருகிற சாயங்கால நேரத்தில், ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
  • ரெபெக்காள் அவனுடைய ஒட்டகங்கள் எல்லாவற்றுக்கும் தண்ணீர் இறைத்தாள்ஆதி 24:14, ஆதி 24:19–20
    வசனங்கள்
    ஆதி 24:14நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கக் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணானவளே, நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாக இருக்கவும், என் எஜமானுக்கு தயவுசெய்தீர் என்று நான் அதன்மூலம் தெரிந்துகொள்ளவும் உதவிசெய்யும்” என்றான்.
    ஆதி 24:19–20கொடுத்தபின், “உம்முடைய ஒட்டகங்களும் குடித்து முடியும்வரைக்கும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றுசொல்லி; சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.
  • ஈசாக்கைச் சந்திக்க ரெபெக்காள் ஒட்டகத்தின்மேல் போனாள்ஆதி 24:61, ஆதி 24:64
    வசனங்கள்
    ஆதி 24:61அப்பொழுது ரெபெக்காளும் அவளுடைய வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடுகூடப் போனார்கள். வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.
    ஆதி 24:64ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
  • ராகேல் லாபானின் சிலைகளை ஒட்டகச் சேணத்தின் பைக்குள் மறைத்து அவற்றின்மேல் உட்கார்ந்தாள்ஆதி 31:34
    வசனங்கள்
    ஆதி 31:34ராகேல் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான், கூடாரம் முழுவதிலும் தேடிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
  • ஏசாவுக்கு யாக்கோபு கொடுத்த வெகுமதியில் குட்டிகளோடு 30 கறவை ஒட்டகங்கள்ஆதி 32:15
    வசனங்கள்
    ஆதி 32:15பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,
  • இஸ்மவேலரின் ஒட்டகங்கள் கந்தவர்க்கங்களை எகிப்துக்குச் சுமந்தனஆதி 37:25
    வசனங்கள்
    ஆதி 37:25பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
  • மீதியானியரின் ஒட்டகங்கள் மணலைப்போல எண்ணற்றவைநியா 7:12
    வசனங்கள்
    நியா 7:12மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது.
  • ராஜாக்களின் ஒட்டகங்களிலிருந்த பிறைச்சந்திர ஆபரணங்களைக் கிதியோன் எடுத்தான்நியா 8:21
    வசனங்கள்
    நியா 8:21அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.
  • நானூறு அமலேக்கியர் ஒட்டகங்களில் ஏறி தாவீதுக்குத் தப்பினார்கள்1 சாமு 30:17
    வசனங்கள்
    1 சாமு 30:17அவர்களைத் தாவீது அன்று மாலைதொடங்கி மறுநாள் மாலை வரை முறியடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன 400 வாலிபர்கள் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
  • சேபாவின் ராணி கந்தவர்க்கமும் பொன்னும் சுமந்த ஒட்டகங்களோடு வந்தாள்1 இராஜா 10:2
    வசனங்கள்
    1 இராஜா 10:2திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.
  • ஆசகேல் எலிசாவுக்கு நாற்பது ஒட்டகச் சுமை வெகுமதிகளைக் கொண்டுவந்தான்2 இராஜா 8:9
    வசனங்கள்
    2 இராஜா 8:9ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய மகன் என்னை உம்மிடத்திற்கு அனுப்பி, இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
  • கல்தேயக் கொள்ளைக்காரர் யோபுவின் ஒட்டகங்களைக் கொண்டுபோனார்கள்யோபு 1:17
    வசனங்கள்
    யோபு 1:17இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
  • யோவான் ஒட்டகமயிர் ஆடை உடுத்தியிருந்தான்மத் 3:4, மாற் 1:6
    வசனங்கள்
    மத் 3:4இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
    மாற் 1:6யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.

இயேசுவின் கூற்றுகள்

  • ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதுமத் 19:24
    வசனங்கள்
    மத் 19:24மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  • கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறீர்கள்மத் 23:24
    வசனங்கள்
    மத் 23:24குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்