Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › திரிகைகளும் அடுப்புகளும் அப்பம் சுடுதலும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் திரிகைகளும் அடுப்புகளும் அப்பம் சுடுதலும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 32 பகுதிகள், வரி வரியாக.

திரிகைக் கற்களும் அரைத்தலும்

  • திரிகைக் கல்லைக் கடனுக்கு அடைமானமாக வாங்கக்கூடாதுஉபா 24:6
    வசனங்கள்
    உபா 24:6“மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்.
  • எகிப்தில் மிகத் தாழ்ந்த வேலைக்காரி திரிகைக்குப் பின்னால் வேலை செய்தாள்யாத் 11:5
    வசனங்கள்
    யாத் 11:5அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி,
  • மன்னா திரிகையில் அரைக்கப்பட்டது அல்லது உரலில் இடிக்கப்பட்டதுஎண் 11:8
    வசனங்கள்
    எண் 11:8மக்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
  • தேபேசில் ஒரு பெண் அபிமெலேக்கின்மேல் மேல் திரிகைக்கல்லைப் போட்டாள்நியா 9:53, 2 சாமு 11:21
    வசனங்கள்
    நியா 9:53அப்பொழுது ஒரு பெண் ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவனுடைய மண்டையை உடைத்தது.
    2 சாமு 11:21எருப்பேசேத்தினுடைய மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை மதிலின் மேலிருந்து ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அவன்மேல் போட்டதால் அல்லவோ அவன் இறந்தான்; நீங்கள் மதிலிற்கு இவ்வளவு அருகில் போனது என்ன என்று உன்னோடு சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்று சொல் என்றான்.
  • குருடாக்கப்பட்டு விலங்கிடப்பட்ட சிம்சோன் காசாவின் சிறையில் மாவு அரைத்தான்நியா 16:21
    வசனங்கள்
    நியா 16:21பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.
  • இரண்டு பெண்கள் சேர்ந்து மாவு அரைப்பதைப்பற்றி இயேசு பேசுகிறார்மத் 24:41, லூக் 17:35
    வசனங்கள்
    மத் 24:41இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
    லூக் 17:35மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
  • இயேசு: கழுத்தில் பெரிய திரிகைக்கல் கட்டப்பட்டு அமிழ்த்தப்படுவதே நல்லதுமத் 18:6
    வசனங்கள்
    மத் 18:6என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
  • மணமகன், மணமகள் சத்தத்தோடு திரிகையின் சத்தத்தையும் எரேமியா குறிப்பிடுகிறான்எரே 25:10
    வசனங்கள்
    எரே 25:10மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும், எந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • புலம்பல்: வாலிபர்கள் திரிகைகளில் பாடுபடுகிறார்கள்புலம் 5:13
    வசனங்கள்
    புலம் 5:13வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.

அடுப்புகளும் அப்பம் சுடுதலும்

  • தவளைகள் எகிப்தின் அடுப்புகளிலும் மாப்பிசையும் தொட்டிகளிலும் வரும்யாத் 8:3
    வசனங்கள்
    யாத் 8:3நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும்.
  • உணவுக் காணிக்கைகளை அடுப்பில் சுடலாம் அல்லது தட்டில் சமைக்கலாம்லேவி 2:4, லேவி 7:9
    வசனங்கள்
    லேவி 2:4“நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக.
    லேவி 7:9அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும்.
  • தீட்டான சவம் தொட்ட அடுப்பு உடைக்கப்படவேண்டும்லேவி 11:35
    வசனங்கள்
    லேவி 11:35அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
  • நியாயப்பிரமாணத்தில் ஒரு சாபம்: பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் அப்பம் சுடுவார்கள்லேவி 26:26
    வசனங்கள்
    லேவி 26:26உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.
  • சாராள் மூன்றுபடி மெல்லிய மாவைப் பிசைந்து அப்பம் சுடவேண்டும்ஆதி 18:6
    வசனங்கள்
    ஆதி 18:6அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான்.
  • லோத்து தன் விருந்தினருக்குப் புளிப்பில்லாத அப்பம் சுட்டான்ஆதி 19:3
    வசனங்கள்
    ஆதி 19:3அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள்.
  • பார்வோனின் சுயம்பாகிகளின் தலைவன் தன் தலையில் மூன்று அப்பக்கூடைகளைச் சொப்பனத்தில் கண்டான்ஆதி 40:16–17
    வசனங்கள்
    ஆதி 40:16–17அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: “நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது” என்றான்.
  • எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது இஸ்ரவேலர் தாங்கள் கொண்டுவந்த மாவால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள்யாத் 12:34, யாத் 12:39
    வசனங்கள்
    யாத் 12:34பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
    யாத் 12:39எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை.
  • ஓய்வுநாளுக்கு முன்: சுடவேண்டியதைச் சுடுங்கள்யாத் 16:23
    வசனங்கள்
    யாத் 16:23அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.
  • யெகோவாவுக்கு முன்பாகப் பொன் மேஜைக்காகப் பன்னிரண்டு அப்பங்கள் சுடப்பட்டனலேவி 24:5–6
    வசனங்கள்
    லேவி 24:5–6“அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும். அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,
  • சாமுவேல்: ராஜா உங்கள் மகள்களைச் சமையல்காரிகளாகவும் அப்பம் சுடுகிறவர்களாகவும் எடுத்துக்கொள்வான்1 சாமு 8:13
    வசனங்கள்
    1 சாமு 8:13உங்கள் மகள்களைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்செய்கிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
  • எந்தோரிலுள்ள அஞ்சனக்காரி மாவைப் பிசைந்து சவுலுக்குப் புளிப்பில்லாத அப்பம் சுட்டாள்1 சாமு 28:24
    வசனங்கள்
    1 சாமு 28:24அந்த பெண்ணிடம் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதை விரைவாக அடித்து, மாவு எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
  • தாமார் மாவைப் பிசைந்து அம்னோனுக்குப் பணியாரங்களைச் சுட்டாள்2 சாமு 13:8
    வசனங்கள்
    2 சாமு 13:8தாமார் தன்னுடைய சகோதரனான அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவனுடைய கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,
  • எலியா விழித்தபோது தழலில் சுட்ட அடையைக் கண்டான்1 இராஜா 19:6
    வசனங்கள்
    1 இராஜா 19:6அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான்.
  • ஏசாயா: மரத்தின் ஒரு பகுதி அப்பம் சுடுகிறது, மீதி சிலையாகிறதுஏசா 44:15, ஏசா 44:19
    வசனங்கள்
    ஏசா 44:15மனிதனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு சிலையையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
    ஏசா 44:19அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
  • எரேமியா அப்பம் சுடுகிறவர்களின் தெருவிலிருந்து தினமும் ஒரு அப்பம் பெற்றான்எரே 37:21
    வசனங்கள்
    எரே 37:21அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.
  • எருசலேமின் மதிலில் சூளைகளின் கோபுரம் இருந்ததுநெகே 3:11, நெகே 12:38
    வசனங்கள்
    நெகே 3:11மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
    நெகே 12:38துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய்,

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்