Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › கப்பல்களும் கடற்பயணமும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் கப்பல்களும் கடற்பயணமும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 31 பகுதிகள், வரி வரியாக.

  • நோவாவின் பேழை: கொப்பேர் மரம், அறைகள், கீல் பூசப்பட்டதுஆதி 6:14–15
    வசனங்கள்
    ஆதி 6:14–15நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும்.
  • செங்கடலருகே எசியோன் கேபேரில் சாலொமோன் கப்பல்களைக் கட்டினான்1 இராஜா 9:26
    வசனங்கள்
    1 இராஜா 9:26ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான்.
  • ஈராமின் மாலுமிகள் ஓப்பீரிலிருந்து 450 தாலந்து பொன் கொண்டுவந்தார்கள்2 நாளா 8:18
    வசனங்கள்
    2 நாளா 8:18அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர்கள் மூலமாகக் கப்பல்களையும், சமுத்திரப் பயணத்தில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரர்களோடு ஓப்பீருக்குப் போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
  • மூன்று வருடத்திற்கு ஒருமுறை: பொன், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள்1 இராஜா 10:22
    வசனங்கள்
    1 இராஜா 10:22ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
  • யோசபாத்தின் கப்பல்கள் புறப்படும் முன்பே உடைந்தன1 இராஜா 22:48, 2 நாளா 20:36–37
    வசனங்கள்
    1 இராஜா 22:48பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது.
    2 நாளா 20:36–37தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடு கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள். மரேஷா ஊரானாகிய தொதாவாவின் மகனான எலியேசர் யோசபாத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடு இணைந்துகொண்டதால், யெகோவா உம்முடைய செயல்களை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோனது, அவர்கள் தர்ஷீசுக்குப் போகமுடியாமற்போனது.
  • எசேக்கியேல் தீருவைத் தேவதாரு, கேதுரு, கர்வாலி, மெல்லிய புடவையாலான கப்பலாக வர்ணிக்கிறான்எசேக் 27:5–7
    வசனங்கள்
    எசேக் 27:5–7சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள். எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
  • நாணற்படகுகள் தண்ணீரின்மேல் தூதர்களைச் சுமந்தனஏசா 18:2
    வசனங்கள்
    ஏசா 18:2கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள்.
  • பெரிய கப்பல் மிகச் சிறிய சுக்கானால் திருப்பப்படுகிறதுயாக் 3:4
    வசனங்கள்
    யாக் 3:4கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான்.
  • கடலின் நடுவே கப்பலின் வழி: ஆகூருக்கு மிகவும் ஆச்சரியமானதுநீதி 30:18–19
    வசனங்கள்
    நீதி 30:18–19எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.

பயணங்கள்

  • தர்ஷீசுக்குப் போகும் கப்பலுக்கு யோனா கூலி கொடுத்தான்யோனா 1:3
    வசனங்கள்
    யோனா 1:3அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
  • புயலில் மாலுமிகள் சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்யோனா 1:4–5
    வசனங்கள்
    யோனா 1:4–5யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது. அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
  • அவர்கள் வலிமையாகத் தண்டு வலித்தும் கரைசேர முடியவில்லையோனா 1:13
    வசனங்கள்
    யோனா 1:13அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது.
  • இயேசு சீமோனின் படகிலிருந்து மக்களுக்குப் போதித்தார்லூக் 5:2–3
    வசனங்கள்
    லூக் 5:2–3அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார்.
  • புயலின்போது இயேசு படகின் பின்பக்கத்தில் தலையணையின்மேல் தூங்கினார்மாற் 4:37–38
    வசனங்கள்
    மாற் 4:37–38அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
  • சீடர்கள் எதிர்க்காற்றில் தண்டு வலிக்கக் கஷ்டப்பட்டார்கள்மாற் 6:48
    வசனங்கள்
    மாற் 6:48அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
  • பவுல் மூன்று முறை கப்பல்சேதத்தில் அகப்பட்டு, ஒரு பகலும் இரவும் ஆழ்கடலில் இருந்தான்2 கொரி 11:25
    வசனங்கள்
    2 கொரி 11:25மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன்.

பவுல் ரோமுக்குச் சென்ற பயணம்

  • ஆசியாவின் கரையோரமாக அதிரமித்தியம் ஊர்க்கப்பல்அப் 27:2
    வசனங்கள்
    அப் 27:2அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.
  • உபவாசநாளுக்குப் பின் கடற்பயணம் ஆபத்தானதுஅப் 27:9
    வசனங்கள்
    அப் 27:9வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
  • யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று மோதியது; கப்பலைச் சுற்றிக் கயிறுகளைக் கட்டினார்கள்அப் 27:14, அப் 27:17
    வசனங்கள்
    அப் 27:14கொஞ்சநேரத்திற்குள்ளே யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று அதில் மோதிற்று.
    அப் 27:17அதை அவர்கள் தூக்கியெடுத்தப்பின்பு, கயிற்றினால் கப்பலைச் சுற்றிக் கட்டி, புதை மணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
  • சரக்குகளும், பின்பு கப்பலின் தளவாடங்களும் கடலில் எறியப்பட்டனஅப் 27:18–19
    வசனங்கள்
    அப் 27:18–19மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் எறிந்தார்கள். மூன்றாம்நாளிலே கப்பலின் கருவிகளை எங்களுடைய கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம்
  • ஆழம் பார்த்தல்: தண்ணீர் ஆழம் குறைகிறதுஅப் 27:28
    வசனங்கள்
    அப் 27:28உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள்.
  • பின்பக்கத்திலிருந்து நான்கு நங்கூரங்கள் போடப்பட்டனஅப் 27:29
    வசனங்கள்
    அப் 27:29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள்.
  • மாலுமிகள் சிறிய படகில் தப்ப முயன்றார்கள்; படைவீரர்கள் அதை அறுத்துவிட்டார்கள்அப் 27:30, அப் 27:32
    வசனங்கள்
    அப் 27:30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன்பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது,
    அப் 27:32அப்பொழுது, போர்வீரர்கள் படகின் கயிறுகளை அறுத்து, அதைக் கீழே விழவிட்டார்கள்.
  • கப்பலில் 276 பேர் இருந்தார்கள்அப் 27:37
    வசனங்கள்
    அப் 27:37கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம்.
  • கப்பலின் பாரத்தைக் குறைக்க தானியத்தைக் கடலில் எறிந்தார்கள்அப் 27:38
    வசனங்கள்
    அப் 27:38திருப்தியாக சாப்பிட்டபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலின் பாரத்தைக் குறைத்தார்கள்.
  • கப்பல் தரைதட்டி பின்பக்கம் உடைந்ததுஅப் 27:41
    வசனங்கள்
    அப் 27:41இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள்; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோனது.
  • எல்லோரும் கரை சேர்ந்தார்கள், சிலர் பலகைகளின்மேல்அப் 27:44
    வசனங்கள்
    அப் 27:44மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.
  • மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா கப்பலில் ரோமுக்குஅப் 28:11
    வசனங்கள்
    அப் 28:11மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்