ஆராயுங்கள் › தலைப்புகள் › செங்கல்லும் செங்கல் அறுத்தலும்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் செங்கல்லும் செங்கல் அறுத்தலும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 15 பகுதிகள், வரி வரியாக.
- பாபேலில்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்”ஆதி 11:3
வசனங்கள்
ஆதி 11:3அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
- அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கலையும், சாந்துக்குப் பதிலாகக் கீலையும் பயன்படுத்தினார்கள்ஆதி 11:3
வசனங்கள்
ஆதி 11:3அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
- எசேக்கியேல் ஒரு செங்கலின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்தான்எசேக் 4:1
வசனங்கள்
எசேக் 4:1மனிதகுமாரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உனக்குமுன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,
- தாவீது அம்மோனியரைச் செங்கல் சூளைகளில் வேலை செய்யவைத்தான்2 சாமு 12:31
வசனங்கள்
2 சாமு 12:31பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், இரும்பு ஆயதங்களும், இரும்புக் கோடரிகளும் செய்யும் வேளையில் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளைகளிலும் வேலைசெய்யவைத்தான்; இப்படி அம்மோன் மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா மக்களோடும் எருசலேமிற்குத் திரும்பினான்.
- தகபானேசில் பார்வோனின் அரண்மனையின் செங்கல் தளத்தில் எரேமியா கற்களைப் புதைத்தான்எரே 43:9
வசனங்கள்
எரே 43:9நீ உன் கையில் பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா மக்களுக்கு முன்பாக அவைகளைத் தகபானேசில் இருக்கிற பார்வோனுடைய அரண்மனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணில் புதைத்துவைத்து,
- ஏசாயாவில் ஒரு பெருமைப்பேச்சு: செங்கற்கள் விழுந்தன, ஆனால் வெட்டின கற்களால் கட்டுவோம்ஏசா 9:10
வசனங்கள்
ஏசா 9:10அகந்தையும், மனப்பெருமையுமாகச் சொல்கிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிமக்களுமாகிய எல்லா மக்களிடத்திற்கும் அது தெரியவரும்.
- செங்கல் பலிபீடங்களில் காட்டப்படும் தூபத்தை ஏசாயா குறிப்பிடுகிறான்ஏசா 65:3
வசனங்கள்
ஏசா 65:3அந்த மக்கள் என் சந்நிதியிலே எப்பொழுதும் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
- நாகூம் நினிவேக்கு: சாந்தை மிதி; செங்கல் சூளையைப் பழுதுபார்!நாகூ 3:14
வசனங்கள்
நாகூ 3:14முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து.
எகிப்தில்
- சாந்திலும் செங்கலிலும் செய்யும் வேலையால் இஸ்ரவேலரின் வாழ்க்கை கசப்பாக்கப்பட்டதுயாத் 1:14
வசனங்கள்
யாத் 1:14கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள்.
- அவர்கள் பித்தோம், ராமசேஸ் என்னும் களஞ்சியப் பட்டணங்களைக் கட்டினார்கள்யாத் 1:11
வசனங்கள்
யாத் 1:11அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படி, அவர்கள்மேல் மேற்பார்வையாளர்களை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் சேமிப்புக் கிடங்கு பட்டணங்களைக் கட்டினார்கள்.
- பார்வோன்: இனி வைக்கோல் இல்லை, ஆனால் அதே அளவு செங்கல்யாத் 5:7–8
வசனங்கள்
யாத் 5:7–8“செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி மக்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும். அவர்கள் முன்பு செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்களுடைய தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.
- வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்க மக்கள் எகிப்து எங்கும் சிதறினார்கள்யாத் 5:12
வசனங்கள்
யாத் 5:12அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாக அதின் தாளடிகளைச் சேர்க்கும்படி மக்கள் எகிப்துதேசம் எங்கும் அலைந்து திரிந்தார்கள்.
- அளவு குறைந்ததற்காக இஸ்ரவேலின் மேற்பார்வையாளர்கள் அடிக்கப்பட்டார்கள்யாத் 5:14
வசனங்கள்
யாத் 5:14பார்வோனுடைய மேற்பார்வையாளர்கள் இஸ்ரவேலர்கள் மேல்வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: “செங்கல் வேலையில் நீங்கள் முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை” என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
- வைக்கோல் கொடுக்கப்படவில்லை, ஆனாலும் செங்கல் அறுங்கள் என்கிறார்கள்யாத் 5:16
வசனங்கள்
யாத் 5:16உமது அடியார்களுக்கு வைக்கோல் கொடுக்காமல் இருந்தும், செங்கல் அறுக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய மக்களிடம் குற்றம் இருக்க, உமது அடியார்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்” என்றார்கள்.
- உங்கள் தினசரி செங்கல் அளவைக் குறைக்கக்கூடாதுயாத் 5:18–19
வசனங்கள்
யாத் 5:18–19போய், வேலை செய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை அறுத்துக் கொடுக்கவேண்டும்” என்றான். நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுக்கவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால், இஸ்ரவேலர்களின் தலைவர்கள் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்