Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › பதப்படுத்துதலும் அடக்கத்தின் சுகந்தவர்க்கங்களும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் பதப்படுத்துதலும் அடக்கத்தின் சுகந்தவர்க்கங்களும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 18 பகுதிகள், வரி வரியாக.

  • யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபுக்குச் சுகந்தவர்க்கமிடத் தன் மருத்துவர்களுக்குக் கட்டளையிட்டான்ஆதி 50:2
    வசனங்கள்
    ஆதி 50:2பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள்.
  • சுகந்தவர்க்கமிட நாற்பது நாட்கள் ஆனது; எகிப்தியர் எழுபது நாட்கள் துக்கித்தார்கள்ஆதி 50:3
    வசனங்கள்
    ஆதி 50:3பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.
  • யோசேப்பு 110 வயதில் மரித்து, சுகந்தவர்க்கமிடப்பட்டு, எகிப்தில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டான்ஆதி 50:26
    வசனங்கள்
    ஆதி 50:26யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
  • யோசேப்பு கேட்டபடியே மோசே அவனுடைய எலும்புகளை எகிப்திலிருந்து கொண்டுபோனான்யாத் 13:19
    வசனங்கள்
    யாத் 13:19மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான்.
  • யாக்கோபு வாங்கியிருந்த நிலத்தில், சீகேமில், அவனுடைய எலும்புகள் அடக்கம் செய்யப்பட்டனயோசு 24:32
    வசனங்கள்
    யோசு 24:32இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது.

சுகந்தவர்க்கங்களும் மெல்லிய துணியும்

  • ராஜாவாகிய ஆசா சுகந்தவர்க்கங்களும் கலந்த பரிமளங்களும் நிறைந்த மஞ்சத்தில் வைக்கப்பட்டான்2 நாளா 16:14
    வசனங்கள்
    2 நாளா 16:14தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.
  • ஆசாவின் கனத்திற்காகப் பெரிய நெருப்பு மூட்டப்பட்டது; யோராமுக்கு இல்லை2 நாளா 16:14, 2 நாளா 21:19
    வசனங்கள்
    2 நாளா 16:14தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.
    2 நாளா 21:19அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய முற்பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
  • மார்த்தாள்: இப்பொழுது நாறுமே, நான்கு நாட்கள் ஆயிற்றேயோவா 11:39
    வசனங்கள்
    யோவா 11:39இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
  • லாசரு மெல்லிய துணிகளால் கட்டப்பட்டு, முகம் துணியால் சுற்றப்பட்டவனாக வெளியே வந்தான்யோவா 11:44
    வசனங்கள்
    யோவா 11:44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
  • இயேசு: அடக்கத்திற்காக என் சரீரத்தை முன்னதாகவே அபிஷேகம் செய்தாள்மாற் 14:8, யோவா 12:7
    வசனங்கள்
    மாற் 14:8இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.
    யோவா 12:7அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
  • நிக்கொதேமு அதிகமான வெள்ளைப்போளமும் கரியபோளமும் கொண்டுவந்தான்யோவா 19:39
    வசனங்கள்
    யோவா 19:39ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
  • யூதருடைய அடக்க வழக்கத்தின்படி இயேசுவின் சரீரம் சுகந்தவர்க்கங்களோடு மெல்லிய துணிகளில் சுற்றப்பட்டதுயோவா 19:40
    வசனங்கள்
    யோவா 19:40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
  • பெண்கள் சுகந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்செய்து, ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்லூக் 23:55–56
    வசனங்கள்
    லூக் 23:55–56கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
  • ஓய்வுநாள் முடிந்தபின் சரீரத்திற்குப் பூசச் சுகந்தவர்க்கங்களை வாங்கினார்கள்மாற் 16:1
    வசனங்கள்
    மாற் 16:1ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு.
  • வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் அவர்கள் சுகந்தவர்க்கங்களைக் கல்லறைக்குக் கொண்டுவந்தார்கள்லூக் 24:1
    வசனங்கள்
    லூக் 24:1வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
  • பேதுரு மெல்லிய துணிகளையும், தனியாகச் சுருட்டி வைக்கப்பட்ட தலைச்சீலையையும் கண்டான்யோவா 20:6–7
    வசனங்கள்
    யோவா 20:6–7சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்