Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › உண்மையான பைத்தியமும் நடிப்பும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் உண்மையான பைத்தியமும் நடிப்பும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 22 பகுதிகள், வரி வரியாக.

  • நீதிமொழிகள்: ஏமாற்றிவிட்டு விளையாட்டுக்குச் செய்தேன் என்பவன் பைத்தியக்காரனைப்போலநீதி 26:18–19
    வசனங்கள்
    நீதி 26:18–19கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான்.

காத்தில் தாவீது

  • சவுலுக்குத் தப்பியோடிய தாவீது காத்தின் ராஜாவாகிய ஆகீசிடம் வந்தான்1 சாமு 21:10
    வசனங்கள்
    1 சாமு 21:10அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
  • ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனை அடையாளம் கண்டார்கள்; தாவீது மிகவும் பயந்தான்1 சாமு 21:11–12
    வசனங்கள்
    1 சாமு 21:11–12ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
  • அவன் பைத்தியக்காரனைப்போல நடித்து, வாசற்கதவுகளில் கீறி, தாடியில் உமிழ்நீர் வடியவிட்டான்1 சாமு 21:13
    வசனங்கள்
    1 சாமு 21:13அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான்.
  • ஆகீஸ்: பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவோ?1 சாமு 21:14–15
    வசனங்கள்
    1 சாமு 21:14–15அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன? எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.
  • சங்கீதம் 34-ன் தலைப்பு அதை நினைவுகூருகிறது: அவன் பைத்தியக்காரனைப்போல நடித்தான்சங் 34:1
    வசனங்கள்
    சங் 34:1தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல். யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும்.

மற்றவர்கள்

  • பொல்லாத ஆவியால் கலங்கிய சவுலைத் தாவீதின் சுரமண்டலம் ஆற்றியது1 சாமு 16:14–16, 1 சாமு 16:23
    வசனங்கள்
    1 சாமு 16:14–16யெகோவாவுடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்கள் அவனை பார்த்து: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு தீய ஆவி உம்மை அலைக்கழிக்கிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட தீய ஆவி உம்மேல் இறங்கும்போது, அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சுகமுண்டாகும் என்றார்கள்.
    1 சாமு 16:23அப்படியே தேவனால் விடப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன்னுடைய கையினால் வாசிப்பான்; அதினாலே தீய ஆவி சவுலை விட்டு நீங்கி, ஆறுதலடைந்து, சுகமடைவான்.
  • பின்பு தாவீது வாசித்துக்கொண்டிருக்கும்போது சவுல் அவன்மேல் ஈட்டியை எறிந்தான்1 சாமு 18:10–11
    வசனங்கள்
    1 சாமு 18:10–11மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.
  • நேபுகாத்நேச்சார் மாட்டைப்போலப் புல்லைத் தின்றான்; அவன் தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல வளர்ந்ததுதானி 4:33
    வசனங்கள்
    தானி 4:33அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
  • அவனுக்குப் புத்தி திரும்பியது; அவன் தன் சிங்காசனத்தில் திரும்ப நிலைநிறுத்தப்பட்டான்தானி 4:34, தானி 4:36
    வசனங்கள்
    தானி 4:34அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
    தானி 4:36அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் அரசாட்சியின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிகளும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்ஜியத்திலே நான் பலப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
  • காவல்காரன்: அவன் யெகூவைப்போல, பைத்தியக்காரனைப்போல ஓட்டுகிறான்!2 இராஜா 9:20
    வசனங்கள்
    2 இராஜா 9:20அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
  • யெகூவின் உடன் அதிகாரிகள் இளம் தீர்க்கதரிசியை இந்தப் பைத்தியக்காரன் என்கிறார்கள்2 இராஜா 9:11
    வசனங்கள்
    2 இராஜா 9:11யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
  • ஒரு கடிதம்: தீர்க்கதரிசிபோல நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனும் தொழுமரத்தில் போடப்படவேண்டும்எரே 29:26
    வசனங்கள்
    எரே 29:26இவனுக்கு அவன் எழுதியிருந்த கடிதமாவது: நீங்கள் யெகோவாவுடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரனாக இருப்பதற்கும், பைத்தியம் பிடித்தவனைப்போல் தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய மனிதனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடுவதற்கும், யெகோவா உம்மை ஆசாரியனாயிருந்த யொயதாவின் இடத்தில் ஆசாரியனாக வைத்தாரே.
  • கல்லறைகளில் வாழ்ந்த ஒருவன் தன் சங்கிலிகளை உடைத்து கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டான்மாற் 5:3–5
    வசனங்கள்
    மாற் 5:3–5அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
  • பின்பு அவன் உடையணிந்து புத்தி தெளிந்திருப்பதை மக்கள் கண்டார்கள்மாற் 5:15
    வசனங்கள்
    மாற் 5:15இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள்.
  • இயேசுவின் குடும்பத்தார் அவரைப் பிடித்துக்கொண்டுவரப் போனார்கள்: அவர் மதிமயங்கியிருக்கிறார்மாற் 3:21
    வசனங்கள்
    மாற் 3:21அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
  • சிலர் இயேசுவைக்குறித்து: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்யோவா 10:20
    வசனங்கள்
    யோவா 10:20அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.
  • பேதுரு வாசலில் நிற்கிறான் என்று ரோதை சொல்கிறாள்; நீ பைத்தியம் பிடித்திருக்கிறாய் என்கிறார்கள்அப் 12:13–15
    வசனங்கள்
    அப் 12:13–15பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள். அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள். அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.
  • பெஸ்து: பவுலே, நீ உளறுகிறாய்! பவுல்: நான் உளறவில்லைஅப் 26:24–25
    வசனங்கள்
    அப் 26:24–25இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன்.
  • பவுல்: எல்லோரும் அந்நியமொழிகளில் பேசினால், வெளியார் உங்களைப் பைத்தியம் என்பார்கள்1 கொரி 14:23
    வசனங்கள்
    1 கொரி 14:23ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா?

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்