ஆராயுங்கள் › தலைப்புகள் › மணிநேரங்களும் ஜாமங்களும்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் மணிநேரங்களும் ஜாமங்களும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 49 பகுதிகள், வரி வரியாக.
- சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆனதுஆதி 1:5
வசனங்கள்
ஆதி 1:5தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
- இயேசு: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?யோவா 11:9
வசனங்கள்
யோவா 11:9இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.
- ஒரு நாள் பயணம்: எலியா வனாந்திரத்தில் அவ்வளவு தூரம் போனான்1 இராஜா 19:4
வசனங்கள்
1 இராஜா 19:4அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி,
- ஓய்வுநாள் பயண தூரம்: ஒலிவமலையிலிருந்து எருசலேம்வரைஅப் 1:12
வசனங்கள்
அப் 1:12அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
- ஆயத்தநாள்: ஓய்வுநாளுக்கு முந்தின நாள்மாற் 15:42, யோவா 19:31
வசனங்கள்
மாற் 15:42ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
யோவா 19:31அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
- ஓய்வுநாளுக்கு முன் மாலை நிழல் விழுந்தபோது நெகேமியா வாசல்களை அடைத்தான்நெகே 13:19
வசனங்கள்
நெகே 13:19ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமறையும்போது, கதவுகளைப் பூட்டவும் ஓய்வுநாள் முடியும்வரை அவைகளைத் திறக்காமல் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராமல் வாசலருகில் என்னுடைய வேலைக்காரர்களில் சிலரை நிறுத்தினேன்.
- ஆகாஸின் படிக்கட்டில் நிழல் பத்துப் படிகள் பின்னிட்டது2 இராஜா 20:9–11
வசனங்கள்
2 இராஜா 20:9–11அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார்.
இரவின் ஜாமங்கள்
- புலம்பல்: முதல் ஜாமத்திலிருந்து இரவில் கதறுபுலம் 2:19
வசனங்கள்
புலம் 2:19எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
- காவல் மாறினபின், நடுஜாமத்தின் தொடக்கத்தில் கிதியோன் வந்தான்நியா 7:19
வசனங்கள்
நியா 7:19நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த 100 பேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
- விடியற்கால ஜாமத்தில் எகிப்தியரின் முகாம் கலங்கடிக்கப்பட்டதுயாத் 14:24
வசனங்கள்
யாத் 14:24காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து,
- விடியற்கால ஜாமத்தில் சவுல் அம்மோனியரின் முகாமைத் தாக்கினான்1 சாமு 11:11
வசனங்கள்
1 சாமு 11:11மறுநாளிலே சவுல் மக்களை மூன்று படைகளாக பிரித்து, விடியற்காலையில் முகாமிற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியர்களை முறியடித்தான்; தப்பினவர்களில் இருவர் இருவராக சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லோரும் சிதறிப்போனார்கள்.
- இரவின் நான்காம் ஜாமத்தில் இயேசு கடலின்மேல் நடந்தார்மத் 14:25, மாற் 6:48
- எஜமான் இரண்டாம் ஜாமத்திலோ மூன்றாம் ஜாமத்திலோ வரலாம்லூக் 12:38
வசனங்கள்
லூக் 12:38அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
- சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும்போதோ, காலையிலோமாற் 13:35
வசனங்கள்
மாற் 13:35அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது.
- ஒரு சங்கீதக்காரன் இரவின் ஜாமங்களில் தியானிக்கிறான்சங் 63:6, சங் 119:148
வசனங்கள்
சங் 63:6என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
சங் 119:148உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
பகலின் மணிநேரங்கள்
- பேதுரு: இது பகலில் மூன்றாம் மணிநேரம்தானே!அப் 2:15
வசனங்கள்
அப் 2:15நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே.
- மூன்றாம், ஆறாம், ஒன்பதாம், பதினோராம் மணிநேரங்களில் வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள்மத் 20:3, மத் 20:5–6
வசனங்கள்
மத் 20:3காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
மத் 20:5–6மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான். ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
- சாயங்காலமானபோது எல்லோருக்கும் கூலி கொடுக்கப்பட்டது, கடைசியில் வந்தவர்களுக்கு முதலில்மத் 20:8–9
வசனங்கள்
மத் 20:8–9மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
- இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிநேரமாக இருந்ததுமாற் 15:25
வசனங்கள்
மாற் 15:25அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
- ஆறாம் மணிநேரம்முதல் ஒன்பதாம் மணிநேரம்வரை இருள்மத் 27:45, மாற் 15:33, லூக் 23:44
வசனங்கள்
மத் 27:45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது.
மாற் 15:33நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
லூக் 23:44அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
- பிலாத்து: இதோ, உங்கள் ராஜா! ஏறக்குறைய ஆறாம் மணிநேரம்யோவா 19:14
வசனங்கள்
யோவா 19:14அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
- ஏழாம் மணிநேரத்தில் அதிகாரியின் மகனை ஜுரம் விட்டதுயோவா 4:52
வசனங்கள்
யோவா 4:52அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.
- ஏறக்குறைய பத்தாம் மணிநேரத்தில் இரண்டு சீடர்கள் இயேசுவோடு போனார்கள்யோவா 1:39
வசனங்கள்
யோவா 1:39அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
- பேதுருவும் யோவானும் ஜெபநேரமாகிய ஒன்பதாம் மணிநேரத்தில் தேவாலயத்திற்குப் போனார்கள்அப் 3:1
வசனங்கள்
அப் 3:1ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
- கொர்நேலியு ஒன்பதாம் மணிநேரத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தான்அப் 10:3, அப் 10:30
வசனங்கள்
அப் 10:3பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு,
அப் 10:30அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
- ஏறக்குறைய ஆறாம் மணிநேரத்தில் பேதுரு ஜெபிக்க வீட்டின்மேல் ஏறினான்அப் 10:9
வசனங்கள்
அப் 10:9மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.
- இரவின் மூன்றாம் மணிநேரத்தில் படைவீரர்கள் செசரியாவுக்குப் புறப்பட்டார்கள்அப் 23:23
வசனங்கள்
அப் 23:23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரர்களையும், இரவில் மூன்று மணியளவிலே, ஆயத்தம் செய்யுங்கள் என்றும்;
காலை, மத்தியானம், நடுராத்திரி
- தானியேல் எருசலேமுக்கு நேராகத் திறந்திருந்த ஜன்னல்களோடு ஒரு நாளில் மூன்று முறை ஜெபித்தான்தானி 6:10
வசனங்கள்
தானி 6:10தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டதென்று அறிந்திருந்தாலும், தன் வீட்டிற்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமிற்கு நேராக ஜன்னல்கள் திறந்திருக்க, அங்கே தான் முன்பு செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
- ஒரு சங்கீதம்: சாயங்காலத்திலும் காலையிலும் மத்தியானத்திலும் முறையிடுவேன்சங் 55:17
வசனங்கள்
சங் 55:17காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.
- பகலின் வெயில் நேரத்தில் ஆபிரகாம் தன் கூடாரவாசலில் உட்கார்ந்திருந்தான்ஆதி 18:1
வசனங்கள்
ஆதி 18:1பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
- ஈசாக்கு சாயங்காலத்தில் வயலுக்குப் போனான்ஆதி 24:63
வசனங்கள்
ஆதி 24:63ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான்.
- பஸ்கா ஆட்டுக்குட்டிகள் அந்திநேரத்தில் அடிக்கப்பட்டனயாத் 12:6
வசனங்கள்
யாத் 12:6அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து,
- மாலைப் பலி செலுத்தும் நேரத்தில் எலியா ஜெபித்தான்1 இராஜா 18:36
வசனங்கள்
1 இராஜா 18:36மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும்.
- நெகேமியாவின் ஆட்கள் விடியற்காலம்முதல் நட்சத்திரங்கள் தோன்றும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்நெகே 4:21
வசனங்கள்
நெகே 4:21இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
- நடுராத்திரியில் சிம்சோன் காசா பட்டணத்து வாசலின் கதவுகளைப் பிடுங்கினான்நியா 16:3
வசனங்கள்
நியா 16:3சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடு இரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான்.
- நடுராத்திரியில் போவாஸ் விழித்தபோது ஒரு பெண் தன் பாதத்தருகே படுத்திருப்பதைக் கண்டான்ரூத் 3:8
வசனங்கள்
ரூத் 3:8நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
- ஏறக்குறைய நடுராத்திரியில் பவுலும் சீலாவும் சிறையில் ஜெபித்துப் பாடினார்கள்அப் 16:25
வசனங்கள்
அப் 16:25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
- பவுல் நடுராத்திரிவரை பேசினான்; ஐத்திகு ஜன்னலிலிருந்து விழுந்தான்அப் 20:7, அப் 20:9
வசனங்கள்
அப் 20:7வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.
அப் 20:9அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன் தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்.
- சேவல் இரண்டாம் முறை கூவியது; பேதுரு நினைவுகூர்ந்தான்மாற் 14:30, மாற் 14:72
வசனங்கள்
மாற் 14:30இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற் 14:72உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.
- வாரத்தின் முதல் நாள் அதிகாலையில், சூரியன் உதித்தவுடன், அவர்கள் கல்லறைக்குப் போனார்கள்மாற் 16:2
வசனங்கள்
மாற் 16:2வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து,
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்