Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › கால்களையும் கைகளையும் கழுவுதல்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் கால்களையும் கைகளையும் கழுவுதல்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 27 பகுதிகள், வரி வரியாக.

  • ஆபிரகாம் தன் விருந்தினருக்குக் கால் கழுவத் தண்ணீர் கொடுத்து இளைப்பாறச் சொல்கிறான்ஆதி 18:4
    வசனங்கள்
    ஆதி 18:4கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள்.
  • லோத்து: உங்கள் கால்களைக் கழுவி இராத்தங்குங்கள்ஆதி 19:2
    வசனங்கள்
    ஆதி 19:2“ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம்” என்றார்கள்.
  • லாபானின் வீட்டார் ஆபிரகாமின் வேலைக்காரனுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் கால் கழுவத் தண்ணீர் கொடுக்கிறார்கள்ஆதி 24:32
    வசனங்கள்
    ஆதி 24:32அப்பொழுது அந்த மனிதன், வீட்டிற்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடு வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.
  • யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரன் சகோதரர்களுக்குக் கால் கழுவத் தண்ணீர் கொடுக்கிறான்ஆதி 43:24
    வசனங்கள்
    ஆதி 43:24மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.
  • கிபியாவில் முதியவரின் வீட்டில் அவர்கள் கால்களைக் கழுவி, உண்டு, குடித்தார்கள்நியா 19:21
    வசனங்கள்
    நியா 19:21அவனைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, சாப்பிட்டுக் குடித்தார்கள்.
  • அபிகாயில்: என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவ ஆயத்தமாயிருக்கிறேன்1 சாமு 25:41
    வசனங்கள்
    1 சாமு 25:41அவள் எழுந்திருந்து தரைவரை முகங்குனிந்து, இதோ, நான் என்னுடைய ஆண்டவனுடைய ஊழியக்காரர்களின் கால்களைக் கழுவும் பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.
  • தாவீது உரியாவிடம்: உன் வீட்டிற்குப் போய் உன் கால்களைக் கழுவு2 சாமு 11:8
    வசனங்கள்
    2 சாமு 11:8பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
  • தாவீது இல்லாதபோது மேவிபோசேத் தன் கால்களைச் சுத்தம் செய்யவில்லை2 சாமு 19:24
    வசனங்கள்
    2 சாமு 19:24சவுலின் மகனான மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பிவருகிற நாள்வரை அவன் தன்னுடைய கால்களைச் சுத்தம் செய்யவும் இல்லை, தன்னுடைய தாடியைச் சவரம் செய்யவும் இல்லை; தன்னுடைய ஆடைகளை வெளுக்கவுமில்லை இல்லை.
  • உன்னதப்பாட்டு: என் கால்களைக் கழுவினேன், அவைகளை எப்படி அழுக்காக்குவேன்?உன்னத 5:3
    வசனங்கள்
    உன்னத 5:3என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

சுவிசேஷங்களில்

  • இயேசு சீமோனிடம்: என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லைலூக் 7:44
    வசனங்கள்
    லூக் 7:44பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
  • ஒரு பெண் தன் கண்ணீரால் அவருடைய பாதங்களை நனைத்துத் தன் தலைமயிரால் துடைத்தாள்லூக் 7:38
    வசனங்கள்
    லூக் 7:38அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
  • மரியாள் நளதத் தைலத்தால் இயேசுவின் பாதங்களில் பூசித் தன் தலைமயிரால் துடைத்தாள்யோவா 12:3
    வசனங்கள்
    யோவா 12:3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.
  • இராப்போஜனத்தின்போது இயேசு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு சீடர்களின் கால்களைக் கழுவினார்யோவா 13:4–5
    வசனங்கள்
    யோவா 13:4–5பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
  • பேதுரு: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது!யோவா 13:8
    வசனங்கள்
    யோவா 13:8பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
  • இயேசு: குளித்தவன் தன் கால்களை மட்டும் கழுவினால் போதும்யோவா 13:10
    வசனங்கள்
    யோவா 13:10இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.
  • நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்யோவா 13:14
    வசனங்கள்
    யோவா 13:14ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
  • பரிசுத்தவான்களின் கால்களைக் கழுவியதற்காக அறியப்பட்ட விதவை1 தீமோ 5:10
    வசனங்கள்
    1 தீமோ 5:10குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

கைகளைக் கழுவுதல்

  • ஊழியம் செய்யும் முன் ஆசாரியர்கள் வெண்கலத் தொட்டியில் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்யாத் 30:18–21, யாத் 40:31
    வசனங்கள்
    யாத் 30:18–21“கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும். அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும். அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும். அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.
    யாத் 40:31அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
  • கொலையாளி தெரியாத கொலைக்கு மூப்பர்கள் ஒரு கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவுகிறார்கள்உபா 21:1, உபா 21:6
    வசனங்கள்
    உபா 21:1“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,
    உபா 21:6கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
  • பிலாத்து மக்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவினான்: இந்த நீதிமானுடைய இரத்தத்திற்கு நான் குற்றமற்றவன்மத் 27:24
    வசனங்கள்
    மத் 27:24கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
  • மூப்பர்களின் பாரம்பரியத்தின்படி பரிசேயர் கைகளைக் கழுவாமல் உண்பதில்லைமாற் 7:3–4
    வசனங்கள்
    மாற் 7:3–4ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்; கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.
  • இயேசுவின் சீடர்கள் ஏன் கைகளைக் கழுவாமல் உண்கிறார்கள் என்று கேட்கிறார்கள்மத் 15:2, மாற் 7:5
    வசனங்கள்
    மத் 15:2உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
    மாற் 7:5அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
  • உணவுக்கு முன் இயேசு கழுவாததைக் கண்டு ஒரு பரிசேயன் ஆச்சரியப்பட்டான்லூக் 11:38
    வசனங்கள்
    லூக் 11:38அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான்.
  • கானாவில் சுத்திகரிப்புக்கான தண்ணீர் பிடிக்கும் ஆறு கற்ஜாடிகள்யோவா 2:6
    வசனங்கள்
    யோவா 2:6யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்