Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › பிறந்தநாட்கள்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் பிறந்தநாட்கள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 8 பகுதிகள், வரி வரியாக.

  • பார்வோன் தன் பிறந்தநாளில் தன் அதிகாரிகளுக்கு விருந்து செய்தான்ஆதி 40:20
    வசனங்கள்
    ஆதி 40:20மூன்றாம் நாள் பார்வோனுடைய பிறந்த நாளாயிருந்தது; அவன் தன் வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்துசெய்து, பானபாத்திரக்காரர்களுடைய தலைவனையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே நிறுத்தி,
  • அன்று அவன் பானபாத்திரக்காரனைத் திரும்ப நியமித்து, அப்பம் சுடுகிறவனைத் தூக்கிலிட்டான்ஆதி 40:21–22
    வசனங்கள்
    ஆதி 40:21–22பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
  • ஏரோது தன் பிறந்தநாளில் கலிலேயாவின் தலைவர்களுக்கு விருந்து செய்தான்மாற் 6:21
    வசனங்கள்
    மாற் 6:21ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
  • ஏரோதியாளின் மகள் நடனமாடி யோவானின் தலையைக் கேட்டாள்மத் 14:6–8
    வசனங்கள்
    மத் 14:6–8அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
  • யோபு தான் பிறந்த நாளைச் சபித்தான்யோபு 3:1–3
    வசனங்கள்
    யோபு 3:1–3அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, வசனித்துச் சொன்னது என்னவென்றால்: நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
  • எரேமியா: நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாகஎரே 20:14, எரே 20:18
    வசனங்கள்
    எரே 20:14நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
    எரே 20:18நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
  • நல்ல பெயர் பரிமளதைலத்தைவிட நல்லது; பிறந்த நாளைவிட மரணநாள் நல்லதுபிரச 7:1
    வசனங்கள்
    பிரச 7:1விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும், ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்