Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › பூமியதிர்ச்சிகள்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் பூமியதிர்ச்சிகள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 15 பகுதிகள், வரி வரியாக.

  • பூமி அதிர்வதையும் மலைகள் நடுங்குவதையும் சங்கீதங்கள் சொல்கின்றனசங் 18:7, சங் 46:2–3, சங் 104:32
    வசனங்கள்
    சங் 18:7அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
    சங் 46:2–3ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)
    சங் 104:32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.

எடுத்துக்காட்டுகள்

  • சீனாய் மலை முழுவதும் மிகவும் அதிர்ந்ததுயாத் 19:18, சங் 68:8
    வசனங்கள்
    யாத் 19:18யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
    சங் 68:8பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
  • கோரா, தாத்தான், அபிராம் ஆகியோரின் கீழே நிலம் பிளந்ததுஎண் 16:31–32
    வசனங்கள்
    எண் 16:31–32அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.
  • யோனத்தானின் தாக்குதலுக்குப் பின் பெலிஸ்தரின் முகாமில் பூமி அதிர்ந்தது1 சாமு 14:15
    வசனங்கள்
    1 சாமு 14:15அப்பொழுது முகாமிலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், திகில் உண்டாகி, முகாமில் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன கூட்டத்திலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான திகிலாயிருந்தது.
  • ஓரேபில் எலியா: காற்று, பூமியதிர்ச்சி, நெருப்பு, பின்பு மெல்லிய சத்தம்1 இராஜா 19:11–12
    வசனங்கள்
    1 இராஜா 19:11–12அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது.
  • உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஆமோஸ் பேசினான்ஆமோ 1:1
    வசனங்கள்
    ஆமோ 1:1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள்.
  • உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடிய மக்களைச் சகரியா நினைவுகூருகிறான்சகரி 14:5
    வசனங்கள்
    சகரி 14:5அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
  • இயேசு மரித்தபோது பூமி அதிர்ந்து கன்மலைகள் பிளந்தனமத் 27:51
    வசனங்கள்
    மத் 27:51அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
  • நூற்றுக்கு அதிபதி பூமியதிர்ச்சியைக் கண்டு மிகவும் பயந்தான்மத் 27:54
    வசனங்கள்
    மத் 27:54நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
  • கல்லறையிலிருந்து கல் புரட்டப்பட்டபோது பெரிய பூமியதிர்ச்சிமத் 28:2
    வசனங்கள்
    மத் 28:2அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
  • விசுவாசிகள் ஜெபித்த இடம் அசைந்ததுஅப் 4:31
    வசனங்கள்
    அப் 4:31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
  • பிலிப்பியில் ஒரு பூமியதிர்ச்சி சிறைக்கதவுகளைத் திறந்ததுஅப் 16:26
    வசனங்கள்
    அப் 16:26திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்