ஆராயுங்கள் › தலைப்புகள் › தலைமயிரும் தாடியும்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் தலைமயிரும் தாடியும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 36 பகுதிகள், வரி வரியாக.
- உங்கள் தலைமயிர்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றனமத் 10:30, லூக் 12:7
- ஒரு மயிரையாவது வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உன்னால் முடியாதுமத் 5:36
வசனங்கள்
மத் 5:36உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
- பவுல்: நீண்ட மயிர் ஆணுக்கு அவமானம், பெண்ணுக்கு மகிமை1 கொரி 11:14–15
வசனங்கள்
1 கொரி 11:14–15ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும், பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
- பின்னிய தலைமயிர் அழகின் ஊற்று அல்ல1 தீமோ 2:9, 1 பேது 3:3
வசனங்கள்
1 தீமோ 2:9பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
1 பேது 3:3முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல்,
நியாயப்பிரமாணத்தில்
- தலைமயிரின் ஓரங்களைச் சிரைக்காதே, தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காதேலேவி 19:27
வசனங்கள்
லேவி 19:27உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
- ஆசாரியர்கள் தலையில் மொட்டையடிக்கவோ தாடியின் ஓரங்களைச் சிரைக்கவோ கூடாதுலேவி 21:5
வசனங்கள்
லேவி 21:5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
- மரித்தவர்களுக்காக நெற்றியைச் சிரைக்கக்கூடாதுஉபா 14:1
வசனங்கள்
உபா 14:1“நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக.
- தலைமயிர் உதிர்ந்தவன் இன்னும் சுத்தமானவன்லேவி 13:40–41
வசனங்கள்
லேவி 13:40–41“ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான். அவனுடைய முன்னந்தலை முடி உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாக இருக்கிறான்.
- நசரேயன் தன் தலைமயிரை வளரவிட்டு, விரதம் முடிந்ததும் அதை எரித்தான்எண் 6:5, எண் 6:18
வசனங்கள்
எண் 6:5“அவன் நசரேய விரதமிருக்கும் நாட்களெல்லாம் சவரகன் கத்தி அவனுடைய தலையின்மேல் படக்கூடாது; அவன் யெகோவாக்கென்று விரதமிருக்கும் காலம் நிறைவேறும்வரை பரிசுத்தமாக இருந்து, தன்னுடைய தலைமுடியை வளரவிடவேண்டும்.
எண் 6:18அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலைமுடியை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடவேண்டும்.
எடுத்துக்காட்டுகள்
- பார்வோனிடம் போகும் முன் யோசேப்பு சவரம்செய்தான்ஆதி 41:14
வசனங்கள்
ஆதி 41:14அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான்.
- சிம்சோனின் தலையின்மேல் சவரகன் கத்தி படக்கூடாதுநியா 13:5, நியா 16:17
வசனங்கள்
நியா 13:5நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.
நியா 16:17தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
- தெலீலாள் அவனுடைய தலையைச் சிரைக்கச் செய்தாள்; பின்பு அவன் தலைமயிர் திரும்ப வளரத் தொடங்கியதுநியா 16:19, நியா 16:22
வசனங்கள்
நியா 16:19அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.
நியா 16:22அவனுடைய தலைமுடி சிரைக்கப்பட்டப்பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கியது.
- பைத்தியம்போல நடித்து தாவீது தன் தாடியில் உமிழ்நீர் வடியவிட்டான்1 சாமு 21:13
வசனங்கள்
1 சாமு 21:13அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான்.
- ஆனூன் தாவீதின் தூதர்களின் தாடியில் பாதியைச் சிரைத்தான்2 சாமு 10:4
வசனங்கள்
2 சாமு 10:4அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான்.
- தாவீது: உங்கள் தாடி வளரும்வரை எரிகோவில் இருங்கள்2 சாமு 10:5
வசனங்கள்
2 சாமு 10:5அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், ராஜா அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோ பட்டணத்தில் தங்கி இருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.
- அப்சலோமின் வருடாந்திர முடிவெட்டு இருநூறு சேக்கல் எடை2 சாமு 14:26
வசனங்கள்
2 சாமு 14:26அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல் எடையாக இருக்கும்.
- தாவீது இல்லாதபோது மேவிபோசேத் தன் மீசையைக் கத்தரிக்கவில்லை2 சாமு 19:24
வசனங்கள்
2 சாமு 19:24சவுலின் மகனான மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பிவருகிற நாள்வரை அவன் தன்னுடைய கால்களைச் சுத்தம் செய்யவும் இல்லை, தன்னுடைய தாடியைச் சவரம் செய்யவும் இல்லை; தன்னுடைய ஆடைகளை வெளுக்கவுமில்லை இல்லை.
- யோவாப் முத்தமிடுவதுபோல அமாசாவின் தாடியைப் பிடித்தான்2 சாமு 20:9
வசனங்கள்
2 சாமு 20:9அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
- எலியா ரோமமுள்ளவனும் தோல்கச்சை கட்டியவனுமாக இருந்தான்2 இராஜா 1:8
வசனங்கள்
2 இராஜா 1:8அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
- சிறுவர்கள் எலிசாவைக் கேலிசெய்தார்கள்: மொட்டைத்தலையா, ஏறிப்போ!2 இராஜா 2:23
வசனங்கள்
2 இராஜா 2:23அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
- ஆரோனின் தாடியில் வடியும் நல்ல தைலம்சங் 133:2
வசனங்கள்
சங் 133:2அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
- துக்கத்தில் யோபு தன் தலையைச் சிரைத்தான்யோபு 1:20
வசனங்கள்
யோபு 1:20அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
- திகிலடைந்து எஸ்றா தன் தலைமயிரையும் தாடிமயிரையும் பிடுங்கினான்எஸ்றா 9:3
வசனங்கள்
எஸ்றா 9:3இந்தக் காரியத்தை நான் கேட்டபொழுது, என் ஆடையையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள முடியைப் பிடுங்கித் திகைத்தவனாக உட்கார்ந்திருந்தேன்.
- தாடியைச் சிரைத்த எண்பது துக்கமுள்ளவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்கு வந்தார்கள்எரே 41:5
வசனங்கள்
எரே 41:5தாடியைச் சிரைத்து, உடைகளைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் நறுமணப்பொருட்களையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள்.
- நேபுகாத்நேச்சாரின் தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல வளர்ந்ததுதானி 4:33
வசனங்கள்
தானி 4:33அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
- ஒரு பெண் இயேசுவின் பாதங்களைத் தன் தலைமயிரால் துடைத்தாள்லூக் 7:38, யோவா 12:3
வசனங்கள்
லூக் 7:38அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
யோவா 12:3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது.
- ஒரு பொருத்தனைக்காகப் பவுல் கெங்கிரேயாவில் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டான்அப் 18:18
வசனங்கள்
அப் 18:18பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
துக்கத்தில்
- துக்கத்தின் அடையாளமாகச் சிரைத்த தலைகளும் கத்தரித்த தாடிகளும்ஏசா 15:2, எரே 48:37, மீகா 1:16
வசனங்கள்
ஏசா 15:2அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மெதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
எரே 48:37தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், இடுப்புகளில் சணலாடைகள் உண்டு.
மீகா 1:16உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்