ஆராயுங்கள் › தலைப்புகள் › இடதுகைப் பழக்கமுள்ளவர்கள்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் இடதுகைப் பழக்கமுள்ளவர்கள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 5 பகுதிகள், வரி வரியாக.
- கேராவின் மகனாகிய ஏகூத் இடதுகைப் பழக்கமுள்ள பென்யமீனன்நியா 3:15
வசனங்கள்
நியா 3:15இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டபோது, யெகோவா அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பச்செய்தார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தான்; அவனுடைய கையிலே இஸ்ரவேல் மக்கள் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
- ஒரு முழ நீளமான பட்டயத்தை அவன் தன் வலதுபுற இடுப்பில் கட்டிக்கொண்டான்நியா 3:16
வசனங்கள்
நியா 3:16ஏகூத், இருபுறமும் கூர்மையான ஒரு முழ நீளமுமான ஒரு பட்டயத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஆடைக்குள்ளே தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டிக்கொண்டு,
- இடது கையால் அதை உருவி ராஜாவாகிய எக்லோனைக் கொன்றான்நியா 3:21–22
வசனங்கள்
நியா 3:21–22உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான். கத்தியோடு கைப்பிடியும் உள்ளே போனது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கமுடியாதபடி, கொழுப்பு கத்தியைச் சுற்றிக் கொண்டது; கத்தி முனை பின்புறமாக வந்தது.
- ஒரு மயிரிழையும் தவறாமல் கவணால் கல்லெறியக்கூடிய 700 இடதுகைக்காரர்கள் பென்யமீனுக்கு இருந்தார்கள்நியா 20:16
வசனங்கள்
நியா 20:16அந்த மக்கள் எல்லோரிலும் தெரிந்துகொள்ளப்பட்ட, இடதுகைப் பழக்கமுள்ள 700 பேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக் கவண்கல் எறிவார்கள்.
- தாவீதின் பென்யமீன் வில்வீரர்கள் இரண்டு கையாலும் கல்லெறியவும் அம்பு எய்யவும் வல்லவர்கள்1 நாளா 12:2
வசனங்கள்
1 நாளா 12:2யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரர்களும், கவண்கல் எறிவதற்கும் வில்லினால் அம்பு எய்வதற்கும் வலது இடது கை பழக்கமான பலசாலிகளான மற்ற மனிதர்களுமாவன: சவுலின் சகோதரர்களாகிய பென்யமீன் கோத்திரத்தில்,
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்