ஆராயுங்கள் › தலைப்புகள் › நீண்ட ஆயுள்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் நீண்ட ஆயுள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 37 பகுதிகள், வரி வரியாக.
- ஜலப்பிரளயத்திற்கு முன் யெகோவா மனிதனுடைய நாட்களுக்கு எல்லை வைக்கிறார்ஆதி 6:3
வசனங்கள்
ஆதி 6:3அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார்.
- ஒரு சங்கீதம்: எங்கள் நாட்கள் எழுபது வருடம், பெலன் இருந்தால் எண்பது வருடம்சங் 90:10
வசனங்கள்
சங் 90:10எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.
ஜலப்பிரளயத்திற்கு முன்
- ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:5
வசனங்கள்
ஆதி 5:5ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
- சேத் 912 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:8
வசனங்கள்
ஆதி 5:8சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
- ஏனோஸ் 905 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:11
வசனங்கள்
ஆதி 5:11ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
- கேனான் 910 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:14
வசனங்கள்
ஆதி 5:14கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
- மகலாலெயேல் 895 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:17
வசனங்கள்
ஆதி 5:17மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
- யாரேத் 962 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:20
வசனங்கள்
ஆதி 5:20யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
- ஏனோக்கு: 365 வருடங்கள், பின்பு அவன் காணப்படவில்லைஆதி 5:23–24
வசனங்கள்
ஆதி 5:23–24ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
- மெத்தூசலா 969 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:27
வசனங்கள்
ஆதி 5:27மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
- லாமேக்கு 777 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 5:31
வசனங்கள்
ஆதி 5:31லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
- ஜலப்பிரளயத்திற்குப் பின் நோவா 350 வருடங்கள், மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 9:28–29
வசனங்கள்
ஆதி 9:28–29வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான்.
ஜலப்பிரளயத்திற்குப் பின்
- சேம்: 100 வயதில் ஒரு மகன், பின்பு இன்னும் 500 வருடங்கள்ஆதி 11:10–11
வசனங்கள்
ஆதி 11:10–11சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- அர்பக்சாத்: 35 வயதில் ஒரு மகன், பின்பு இன்னும் 403 வருடங்கள்ஆதி 11:12–13
வசனங்கள்
ஆதி 11:12–13அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- சாலா: 30 வயதில் ஒரு மகன், பின்பு இன்னும் 403 வருடங்கள்ஆதி 11:14–15
வசனங்கள்
ஆதி 11:14–15சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- ஏபேர்: 34 வயதில் ஒரு மகன், பின்பு இன்னும் 430 வருடங்கள்ஆதி 11:16–17
வசனங்கள்
ஆதி 11:16–17ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- பேலேகு: 30 வயதில் ஒரு மகன், பின்பு இன்னும் 209 வருடங்கள்ஆதி 11:18–19
வசனங்கள்
ஆதி 11:18–19பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- நாகோர்: 29 வயதில் ஒரு மகன், பின்பு இன்னும் 119 வருடங்கள்ஆதி 11:24–25
வசனங்கள்
ஆதி 11:24–25நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- தேராகு 205 வருடங்கள் வாழ்ந்து ஆரானில் மரித்தான்ஆதி 11:32
வசனங்கள்
ஆதி 11:32தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
பிற்காலத்தவர்கள்
- சாராள் 127 வயதுவரை வாழ்ந்தாள்ஆதி 23:1
வசனங்கள்
ஆதி 23:1சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
- ஆபிரகாம் 175 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 25:7
வசனங்கள்
ஆதி 25:7ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் 175 வருடங்கள்.
- இஸ்மவேலும் நீண்டகாலம் வாழ்ந்தான்ஆதி 25:17
வசனங்கள்
ஆதி 25:17இஸ்மவேலின் வயது 137. பின்பு அவன் இறந்து, தன் இனத்தாரோடு சேர்க்கப்பட்டான்.
- ஈசாக்கு 180 வருடங்கள் வாழ்ந்தான்ஆதி 35:28
வசனங்கள்
ஆதி 35:28ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, 180 வருடங்கள் உயிரோடிருந்து,
- யாக்கோபு 147 வருடங்கள் வாழ்ந்தான்; கடைசி பதினேழு வருடங்கள் எகிப்தில்ஆதி 47:28
வசனங்கள்
ஆதி 47:28யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.
- யோசேப்பு 110 வயதில் மரித்து, எகிப்தில் சுகந்தவர்க்கமிடப்பட்டான்ஆதி 50:26
வசனங்கள்
ஆதி 50:26யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
- லேவி 137 வருடங்கள், கோகாத் 133, அம்ராம் 137யாத் 6:16, யாத் 6:18, யாத் 6:20
வசனங்கள்
யாத் 6:16வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
யாத் 6:18கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான்.
யாத் 6:20அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
- ஆரோன் 123 வயதில் ஓர் மலையில் மரித்தான்எண் 33:39
வசனங்கள்
எண் 33:39ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
- மோசே 120 வயதில் மரித்தான்; அவன் கண் மங்கவில்லைஉபா 34:7
வசனங்கள்
உபா 34:7மோசே மரணமடைகிறபோது 120 வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
- 85 வயதில் காலேப்: மோசே என்னை அனுப்பின நாளில் இருந்ததுபோலவே இன்னும் பெலனுள்ளவன்யோசு 14:10–11
வசனங்கள்
யோசு 14:10–11இப்போதும், இதோ, யெகோவா சொன்னபடியே என்னை உயிரோடு காத்தார்; இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்தபோது, யெகோவா அந்த வார்த்தையை மோசேயிடம் சொல்லி இப்பொழுது 45 வருடங்கள் ஆனது; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது.
- யோசுவா 110 வயதில் மரித்தான்யோசு 24:29
வசனங்கள்
யோசு 24:29இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான்.
- ஏலிக்கு 98 வயது; அவனால் பார்க்கமுடியவில்லை1 சாமு 4:15
வசனங்கள்
1 சாமு 4:15ஏலி 98 வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது.
- எண்பது வயதுள்ள பர்சிலாயி ராஜாவாகிய தாவீதுக்கு உணவளித்திருந்தான்2 சாமு 19:32
வசனங்கள்
2 சாமு 19:32பர்சிலா எண்பது வயது முதியவனாக இருந்தான்; ராஜா மகனாயீமிலே தங்கியிருக்கும்வரை அவனைப் பராமரித்துவந்தான்; அவன் மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான்.
- ஆசாரியனாகிய யோய்தா 130 வயதில் மரித்தான்2 நாளா 24:15
வசனங்கள்
2 நாளா 24:15யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
- யோபு இன்னும் 140 வருடங்கள் வாழ்ந்து நான்கு தலைமுறைகளைக் கண்டான்யோபு 42:16–17
வசனங்கள்
யோபு 42:16–17இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிருடன் இருந்து, நான்கு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு அதிக நாட்கள் இருந்து, பூரண வயதுள்ளவனாய் இறந்தான்.
- எண்பத்து நான்கு வயதுவரை விதவையாக இருந்த அன்னாள் தேவாலயத்தை விட்டு நீங்கவில்லைலூக் 2:36–37
வசனங்கள்
லூக் 2:36–37ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள். எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்