Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › கோபுரங்களும் காவல் கோபுரங்களும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் கோபுரங்களும் காவல் கோபுரங்களும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 30 பகுதிகள், வரி வரியாக.

  • பாபேலில்: வானத்தை எட்டும் கோபுரமுள்ள ஒரு பட்டணம்ஆதி 11:4
    வசனங்கள்
    ஆதி 11:4பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
  • பட்டணத்தையும் கோபுரத்தையும் பார்க்க யெகோவா இறங்கினார்ஆதி 11:5
    வசனங்கள்
    ஆதி 11:5மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார்.
  • அவர்கள் பட்டணம் கட்டுவதை நிறுத்தினார்கள்; அது பாபேல் என்று அழைக்கப்பட்டதுஆதி 11:8–9
    வசனங்கள்
    ஆதி 11:8–9அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
  • யாக்கோபு ஏதேர் என்னும் கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்ஆதி 35:21
    வசனங்கள்
    ஆதி 35:21இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.

போரில் கோபுரங்கள்

  • கிதியோன் பெனூயேலின் கோபுரத்தை மிரட்டி, பின்பு அதை இடித்தான்நியா 8:9, நியா 8:17
    வசனங்கள்
    நியா 8:9அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
    நியா 8:17பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அந்த ஊர் மனிதர்களையும் கொன்றுபோட்டான்.
  • அபிமெலேக்கு சீகேமின் கோபுரத்தைச் சுட்டெரித்தபோது ஏறக்குறைய ஆயிரம் பேர் மரித்தார்கள்நியா 9:46, நியா 9:49
    வசனங்கள்
    நியா 9:46அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தெய்வத்தினுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
    நியா 9:49அப்படியே எல்லா மக்களும் அவரவர் ஒவ்வொரு கிளைகளை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்தக் கோட்டைக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த கோட்டையை எரித்துப்போட்டார்கள்; அதினால் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய 1,000 சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் இறந்தார்கள்.
  • தேபேசில் மக்கள் ஒரு பலத்த கோபுரத்திற்குள் தங்களைப் பூட்டிக்கொண்டார்கள்நியா 9:50–52
    வசனங்கள்
    நியா 9:50–52பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான். அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள். அபிமெலேக்கு அந்த கோபுரம்வரை வந்து, அதின்மேல் யுத்தம்செய்து, கோபுரத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படி, வாசலின் அருகே வந்தான்.
  • அதன் மேல்தளத்திலிருந்து ஒரு பெண் அபிமெலேக்கின்மேல் திரிகைக்கல்லைப் போட்டாள்நியா 9:53
    வசனங்கள்
    நியா 9:53அப்பொழுது ஒரு பெண் ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவனுடைய மண்டையை உடைத்தது.
  • யெஸ்ரயேலின் கோபுரத்திலிருந்த காவல்காரன் யெகூவின் படை வருவதைக் கண்டான்2 இராஜா 9:17
    வசனங்கள்
    2 இராஜா 9:17யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
  • காவல் கோபுரம்முதல் அரணான பட்டணம்வரை2 இராஜா 17:9, 2 இராஜா 18:8
    வசனங்கள்
    2 இராஜா 17:9செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்வரையுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
    2 இராஜா 18:8அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான்.

கோபுரங்களைக் கட்டிய ராஜாக்கள்

  • ஆசா: மதில்களும் கோபுரங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களும் உள்ள பட்டணங்கள்2 நாளா 14:7
    வசனங்கள்
    2 நாளா 14:7அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய யெகோவாவை தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
  • உசியா எருசலேமின் வாசல்களிலும் வனாந்திரத்திலும் கோபுரங்களைக் கட்டினான்2 நாளா 26:9–10
    வசனங்கள்
    2 நாளா 26:9–10உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், மதில்களின் மூலைகளின்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான். அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சைத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.
  • உசியாவின் யந்திரங்கள் கோபுரங்களிலிருந்து அம்புகளையும் கற்களையும் எறிந்தன2 நாளா 26:15
    வசனங்கள்
    2 நாளா 26:15கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது.
  • யோதாம் காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்2 நாளா 27:4
    வசனங்கள்
    2 நாளா 27:4யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
  • எசேக்கியா இடிந்த மதிலைத் திரும்பக் கட்டி அதன்மேல் கோபுரங்களை உயர்த்தினான்2 நாளா 32:5
    வசனங்கள்
    2 நாளா 32:5அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதில்களையும் கோபுரங்கள் வரை உயர்த்தி, தாவீதின் நகரத்தினுடைய கோட்டையைப் பலப்படுத்த, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்செய்து,

எருசலேமின் கோபுரங்கள்

  • மேயா கோபுரமும் அனானெயேல் கோபுரமும்நெகே 3:1, நெகே 12:39
    வசனங்கள்
    நெகே 3:1அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
    நெகே 12:39எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
  • சூளைகளின் கோபுரம்நெகே 3:11, நெகே 12:38
    வசனங்கள்
    நெகே 3:11மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
    நெகே 12:38துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய்,
  • ஓபேல் மதிலருகே வெளியே நீண்டிருக்கும் பெரிய கோபுரம்நெகே 3:25–27
    வசனங்கள்
    நெகே 3:25–27ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும், ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியர்களைச் சேர்ந்த மனிதர்களும் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசலுக்கு வெளிப்புறமான கோபுரத்திற்கு எதிரேயிருக்கிற இடம்வரை கட்டினார்கள். அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
  • சீலோவாமின் கோபுரம் விழுந்தபோது பதினெட்டுப் பேர் மரித்தார்கள்லூக் 13:4
    வசனங்கள்
    லூக் 13:4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

திராட்சைத்தோட்டங்களும் கூற்றுகளும்

  • திராட்சைத்தோட்டக்காரன் காவல் கோபுரத்தைக் கட்டி, ஆலையை வெட்டுகிறான்ஏசா 5:2, மத் 21:33
    வசனங்கள்
    ஏசா 5:2அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களை அகற்றி, அதிலே உயர்ந்தரக திராட்சைச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டாக்கி, அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
    மத் 21:33வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை உருவாக்கி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
  • இயேசு: கோபுரத்தைக் கட்டும் முன் செலவைக் கணக்கிடுலூக் 14:28–30
    வசனங்கள்
    லூக் 14:28–30உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து, அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்: இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ?
  • ஒரு காவல்காரன்: நாள்தோறும் காவல் கோபுரத்தின்மேல் நிற்கிறேன்ஏசா 21:8
    வசனங்கள்
    ஏசா 21:8ஆண்டவரே, நான் பகல்முழுவதும் என் காவலிலே நின்று, இரவுமுழுவதும் நான் என் காவலிடத்திலே தங்கியிருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
  • உன்னதப்பாட்டு: உன் கழுத்து தாவீதின் கோபுரத்தைப்போல இருக்கிறதுஉன்னத 4:4, உன்னத 7:4
    வசனங்கள்
    உன்னத 4:4உன்னுடைய கழுத்து, பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது.
    உன்னத 7:4உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்