ஆராயுங்கள் › தலைப்புகள் › பனிமழை
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் பனிமழை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 17 பகுதிகள், வரி வரியாக.
- பனிமழை பெய்த நாளில் பெனாயா ஒரு குழியில் சிங்கத்தைக் கொன்றான்2 சாமு 23:20
வசனங்கள்
2 சாமு 23:20பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
- லீபனோனின் உறைந்த மழை அதன் மலைச்சரிவுகளை விட்டு நீங்குமோ?எரே 18:14
வசனங்கள்
எரே 18:14லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?
- பனிக்கட்டியாலும் உருகும் பனியாலும் கலங்கிய ஓடைகள்யோபு 6:16
வசனங்கள்
யோபு 6:16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
- தேவன் உறைந்த மழையைப் பார்த்து: பூமியின்மேல் விழு என்கிறார்யோபு 37:6
வசனங்கள்
யோபு 37:6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
- உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் பிரவேசித்தாயோ?யோபு 38:22
வசனங்கள்
யோபு 38:22உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?
- அவர் உறைந்த மழையை ஆட்டுமயிரைப்போலப் பெய்யச்செய்கிறார்சங் 147:16
வசனங்கள்
சங் 147:16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
- மழையும் உறைந்த மழையும் பூமியை நனைத்து முளைக்கச்செய்கின்றனஏசா 55:10
வசனங்கள்
ஏசா 55:10மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
- சல்மோன் மலையின் உறைந்த மழைபோலசங் 68:14
வசனங்கள்
சங் 68:14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.
நீதிமொழிகளில் உள்ள கூற்றுகள்
- உண்மையான தூதன் அறுப்புக்காலத்தில் குளிர்ந்த உறைந்த மழையைப்போலநீதி 25:13
வசனங்கள்
நீதி 25:13அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
- கோடையில் உறைந்த மழைபோல, மூடனுக்கு மகிமை தகாதுநீதி 26:1
வசனங்கள்
நீதி 26:1கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
- உறைந்த மழை பெய்யும்போது அவள் பயப்படுவதில்லை; அவள் வீட்டார் இரத்தாம்பரம் உடுத்தியிருக்கிறார்கள்நீதி 31:21
வசனங்கள்
நீதி 31:21தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
உறைந்த மழையைப்போல வெண்மை
- மோசேயின் கை, மிரியாம், கேயாசி: உறைந்த மழையைப்போல வெண்மையான தொழுநோய்யாத் 4:6, எண் 12:10, 2 இராஜா 5:27
வசனங்கள்
யாத் 4:6மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
எண் 12:10மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற தொழுநோயாளியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் தொழுநோயாளியாக இருக்கக் கண்டான்.
2 இராஜா 5:27ஆகையால் நாகமானின் தொழுநோய் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழையின் நிறமான தொழுநோயாளியாகி, அவனைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
- யோபு: நான் உறைந்த மழை நீரால் என்னைக் கழுவினாலும்யோபு 9:30
வசனங்கள்
யோபு 9:30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
- தாவீதின் ஜெபம்: என்னைக் கழுவும், நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்சங் 51:7
வசனங்கள்
சங் 51:7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
- கல்லறையருகே தூதன்: உறைந்த மழையைப்போல வெண்மையான உடைமத் 28:3
வசனங்கள்
மத் 28:3அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்