Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › உப்பு

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் உப்பு

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 21 பகுதிகள், வரி வரியாக.

  • லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூண் ஆனாள்ஆதி 19:26
    வசனங்கள்
    ஆதி 19:26அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
  • ருசியில்லாததை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ?யோபு 6:6
    வசனங்கள்
    யோபு 6:6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
  • எலிசா எரிகோவின் நீரூற்றில் உப்பைப் போட்டான்2 இராஜா 2:20–21
    வசனங்கள்
    2 இராஜா 2:20–21அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
  • அபிமெலேக்கு சீகேமை இடித்து அதில் உப்பை விதைத்தான்நியா 9:45
    வசனங்கள்
    நியா 9:45அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.
  • பிறந்த குழந்தைகள் உப்பால் தேய்க்கப்பட்டார்கள்எசேக் 16:4
    வசனங்கள்
    எசேக் 16:4உன்னுடைய பிறப்பின் சம்பவம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன்னுடைய தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
  • பெர்சிய ராஜா தேவாலயத்திற்கு அளவில்லாமல் உப்பு கொடுக்க அனுமதித்தான்எஸ்றா 6:9, எஸ்றா 7:22
    வசனங்கள்
    எஸ்றா 6:9பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சைரசம், எண்ணெய் ஆகியவை அனுதினம் அவர்கள் கேட்கிற விதத்தில் குறையில்லாமல் கொடுக்கவேண்டும்.
    எஸ்றா 7:22வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,

ஆராதனையில்

  • ஒவ்வொரு உணவுக் காணிக்கையும் உப்பால் சாரமாக்கப்பட்டதுலேவி 2:13
    வசனங்கள்
    லேவி 2:13நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
  • ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளின்மேல் உப்பைத் தூவினார்கள்எசேக் 43:24
    வசனங்கள்
    எசேக் 43:24அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்பு தூவி, அவைகளைக் யெகோவாவுக்கு தகனபலியாக இடவேண்டும்.
  • உப்பு உடன்படிக்கைஎண் 18:19, 2 நாளா 13:5
    வசனங்கள்
    எண் 18:19இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; யெகோவாவுடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை” என்றார்.
    2 நாளா 13:5இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் அரசாட்சியை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் மாறாத உடன்படிக்கையாகக் கட்டளையிட்டதை நீங்கள் அறியவில்லையா?

இடங்கள்

  • உப்புக்கடல், இஸ்ரவேலின் கிழக்கு எல்லைஆதி 14:3, எண் 34:12, யோசு 15:2
    வசனங்கள்
    ஆதி 14:3இவர்கள் எல்லோரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
    எண் 34:12அங்கேயிருந்து யோர்தான் நதி வரையும் போய், சவக்கடலில் முடியும்; இந்தச் சுற்று எல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல்” என்றார்.
    யோசு 15:2தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
  • யூதாவின் வனாந்திரத்திலுள்ள உப்புப்பட்டணம்யோசு 15:62
    வசனங்கள்
    யோசு 15:62நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
  • உப்புப்பள்ளத்தாக்கில் ஏதோமோடு போர்கள்2 சாமு 8:13, 2 இராஜா 14:7
    வசனங்கள்
    2 சாமு 8:13தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே 18,000 சீரியர்களை முறியடித்துத் திரும்பினதால் புகழ்பெற்றான்.
    2 இராஜா 14:7அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.

கூற்றுகள்

  • சாரமற்றுப்போன உப்பு ஒன்றுக்கும் உதவாதுமத் 5:13, லூக் 14:34
    வசனங்கள்
    மத் 5:13நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
    லூக் 14:34உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
  • உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருந்து சமாதானமாயிருங்கள்மாற் 9:50
    வசனங்கள்
    மாற் 9:50உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.
  • உங்கள் பேச்சு உப்பால் சாரமேறியதாகவும் கிருபையுள்ளதாகவும் இருக்கட்டும்கொலோ 4:6
    வசனங்கள்
    கொலோ 4:6அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்