ஆராயுங்கள் › தலைப்புகள் › சிறைகளும் சங்கிலிகளும்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் சிறைகளும் சங்கிலிகளும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 45 பகுதிகள், வரி வரியாக.
பழைய ஏற்பாட்டில்
- ராஜாவின் கைதிகள் அடைக்கப்பட்ட சிறையில் யோசேப்பு போடப்பட்டான்ஆதி 39:20
வசனங்கள்
ஆதி 39:20யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
- சிறைச்சாலைத் தலைவன் கைதிகள் எல்லோரையும் யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்ஆதி 39:22
வசனங்கள்
ஆதி 39:22சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான்.
- பார்வோனின் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் அதே சிறையில் வைக்கப்பட்டார்கள்ஆதி 40:3
வசனங்கள்
ஆதி 40:3அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் காவலாளிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவலில் வைத்தான்.
- யோசேப்பு காவற்கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டு, சவரம்செய்து, உடை மாற்றினான்ஆதி 41:14
வசனங்கள்
ஆதி 41:14அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான்.
- யோசேப்பு தன் சகோதரர்களை மூன்று நாட்கள் காவலில் வைத்து, பின்பு சிமியோனைக் கட்டிவைத்தான்ஆதி 42:17, ஆதி 42:24
- ஆகாப்: மிகாயாவை அப்பமும் தண்ணீரும் மட்டும் கொடுத்துச் சிறையில் வையுங்கள்1 இராஜா 22:27
வசனங்கள்
1 இராஜா 22:27இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
- கோபமடைந்த ஆசா தரிசனக்காரனாகிய அனானியைச் சிறையில் போட்டான்2 நாளா 16:7, 2 நாளா 16:10
வசனங்கள்
2 நாளா 16:7அக்காலத்திலே தரிசனம் காண்கிறவனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டதால், சீரியா ராஜாவின் படை உமது கைக்குத் தப்பிப்போனது.
2 நாளா 16:10அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான்.
- அசீரியாவின் ராஜா ராஜாவாகிய ஓசெயாவைச் சிறையில் அடைத்தான்2 இராஜா 17:4
வசனங்கள்
2 இராஜா 17:4ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பினதும், தனக்கு வருடந்தோறும் செய்ததுபோல், வரி செலுத்தாமல் போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.
- மனாசே கொக்கியாலும் வெண்கல விலங்குகளாலும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டான்2 நாளா 33:10–11
வசனங்கள்
2 நாளா 33:10–11யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
- கண் குருடாக்கப்பட்ட சிதேக்கியா வெண்கல விலங்குகளோடு பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டான்2 இராஜா 25:7, எரே 52:11
வசனங்கள்
2 இராஜா 25:7சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
எரே 52:11சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளை மாட்டினான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்வரை அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.
- முப்பத்தேழு வருடங்களுக்குப் பின் யோயாக்கீன் விடுதலையாகி ராஜாவின் பந்தியில் உண்டான்2 இராஜா 25:27–29
வசனங்கள்
2 இராஜா 25:27–29யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருடத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலைசெய்து, அவனுடைய தலையை உயர்த்தி, அவனோடே அன்பாகப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து, அவனுடைய சிறைச்சாலை உடைகளை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாட்களும் எப்பொழுதும் தனக்கு முன்பாக உணவருந்தச் செய்தான்.
எரேமியா
- அடிக்கப்பட்டு பென்யமீனின் மேல்வாசலில் தொழுமரத்தில் போடப்பட்டான்எரே 20:2
வசனங்கள்
எரே 20:2எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்து, அவனைக் யெகோவாவுடைய ஆலயத்தில் பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையில் போட்டான்.
- சம்பிரதியாகிய யோனத்தானின் வீட்டிலுள்ள நிலவறையில் அடைக்கப்பட்டான்எரே 37:15–16
வசனங்கள்
எரே 37:15–16அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள். அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் நுழைந்து, அங்கே அநேக நாட்கள் இருந்தான்.
- காவல்வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டு, தினமும் ஒரு அப்பம் பெற்றான்எரே 32:2, எரே 37:21
வசனங்கள்
எரே 32:2அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றுகை போட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரண்மனையிலுள்ள காவல் நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருந்தான்.
எரே 37:21அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.
- தண்ணீரில்லாமல் சேறு மட்டுமே இருந்த குழியில் கயிறுகளால் இறக்கப்பட்டான்எரே 38:6
வசனங்கள்
எரே 38:6அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் மகனாகிய மல்கியாவினுடைய கிணற்றில் போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதில் இறக்கிவிட்டார்கள்; அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் சேறாயிருந்தது, அந்த சேற்றில் எரேமியா புதைந்தான்.
- ராமாவில் தன் கைகளிலிருந்த சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப்பட்டான்எரே 40:1, எரே 40:4
வசனங்கள்
எரே 40:1பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்:
எரே 40:4இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.
புதிய ஏற்பாட்டில்
- ஏரோது யோவானைக் கட்டிச் சிறையில் வைத்தான்மத் 14:3
வசனங்கள்
மத் 14:3ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான்.
- சிறையிலிருந்து யோவான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினான்மத் 11:2
வசனங்கள்
மத் 11:2அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:
- யோவான் சிறையில் தலை வெட்டப்பட்டான்மத் 14:10
வசனங்கள்
மத் 14:10ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான்.
- கலகத்திற்காகவும் கொலைக்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான்லூக் 23:19
வசனங்கள்
லூக் 23:19அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
- இயேசு: காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்மத் 25:36
வசனங்கள்
மத் 25:36ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
- சாயங்காலமானதால் பேதுருவும் யோவானும் இரவு காவலில் வைக்கப்பட்டார்கள்அப் 4:3
வசனங்கள்
அப் 4:3அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
- பூட்டப்பட்டு காவல் வைக்கப்பட்டிருந்தும் அப்போஸ்தலர்கள் சிறையில் இல்லைஅப் 5:18–19, அப் 5:23
வசனங்கள்
அப் 5:18–19அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
அப் 5:23சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
- பலத்த காவலில் பேதுரு இரண்டு படைவீரர்களுக்கு நடுவே சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கினான்அப் 12:4, அப் 12:6
வசனங்கள்
அப் 12:4அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான்.
அப் 12:6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
- சங்கிலிகள் கழன்று விழுந்தன; இரும்புக் கதவு தானாகத் திறந்ததுஅப் 12:7, அப் 12:10
வசனங்கள்
அப் 12:7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது.
அப் 12:10அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான்.
- பிலிப்பியில்: உட்காவலறை, கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டனஅப் 16:23–24
வசனங்கள்
அப் 16:23–24அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.
- நடுராத்திரியில் பூமியதிர்ச்சி கதவுகளைத் திறந்தது; எல்லோருடைய கட்டுகளும் கழன்றனஅப் 16:25–26
வசனங்கள்
அப் 16:25–26நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.
- எருசலேமில் பவுல் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டான்அப் 21:33
வசனங்கள்
அப் 21:33அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
- பேலிக்ஸ் பவுலை இரண்டு வருடங்கள் சிறையில் விட்டுவைத்தான்அப் 24:27
வசனங்கள்
அப் 24:27இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
- ரோமில் பவுல் சங்கிலியால் கட்டப்பட்டு, காவல் காக்கும் படைவீரனோடு வாழ்ந்தான்அப் 28:16, அப் 28:20
வசனங்கள்
அப் 28:16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
அப் 28:20இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
- அவன் தன் சொந்த வாடகை வீட்டில் இரண்டு வருடங்கள் முழுவதும் தங்கினான்அப் 28:30
வசனங்கள்
அப் 28:30பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
- பவுலின் சங்கிலியைக்குறித்து ஒநேசிப்போரு வெட்கப்படவில்லை2 தீமோ 1:16
வசனங்கள்
2 தீமோ 1:16ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
பொன் சங்கிலிகள்
- பார்வோன் யோசேப்பின் கழுத்தில் பொன் சங்கிலியைப் போட்டான்ஆதி 41:42
வசனங்கள்
ஆதி 41:42பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,
- பெல்ஷாத்சார் தானியேலின் கழுத்தில் பொன் சங்கிலியைப் போடச்செய்தான்தானி 5:29
வசனங்கள்
தானி 5:29அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் தங்கச்சங்கிலியையும் அணிவிக்கவும், ராஜ்ஜியத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைசாற்றவும் கட்டளையிட்டான்.
- கிதியோன் மீதியானின் ஒட்டகங்களின் கழுத்திலிருந்த சங்கிலிகளை எடுத்தான்நியா 8:26
வசனங்கள்
நியா 8:26பிறை வடிவிலான ஆபரணங்களும், ஆரங்களும், மீதியானியர்களின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ஊதா நிற ஆடைகளும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சங்கலிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாக இருந்தது.
- சாலொமோன் உள் ஆலயத்தின் முன்பாகப் பொன் சங்கிலிகளைத் தொங்கவிட்டான்1 இராஜா 6:21
வசனங்கள்
1 இராஜா 6:21ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்