Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › திறவுகோல்களும் முத்திரைகளும் முத்திரை மோதிரங்களும்

வியப்பூட்டும் விவரங்கள்

வேதாகமத்தில் திறவுகோல்களும் முத்திரைகளும் முத்திரை மோதிரங்களும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 27 பகுதிகள், வரி வரியாக.

திறவுகோல்களும் தாழ்ப்பாள்களும்

  • ஏகூத் ராஜாவாகிய எக்லோனின் மேலறைக் கதவுகளைப் பூட்டிவிட்டுப் போனான்நியா 3:23
    வசனங்கள்
    நியா 3:23ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
  • வேலைக்காரர் காத்திருந்து, பின்பு திறவுகோலை எடுத்துக் கதவுகளைத் திறந்தார்கள்நியா 3:24–25
    வசனங்கள்
    நியா 3:24–25அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள். அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல்வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே செத்துக்கிடந்தான்.
  • லேவியர் இரவில் தேவனுடைய ஆலயத்தைக் காத்து, ஒவ்வொரு காலையும் அதைத் திறந்தார்கள்1 நாளா 9:27
    வசனங்கள்
    1 நாளா 9:27காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
  • எருசலேமின் வாசல்கள் கதவுகளோடும் பூட்டுகளோடும் தாழ்ப்பாள்களோடும் திரும்பக் கட்டப்பட்டனநெகே 3:3
    வசனங்கள்
    நெகே 3:3மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

முத்திரைகளும் முத்திரை மோதிரங்களும்

  • யூதா தன் முத்திரையையும் கயிற்றையும் கோலையும் தாமாரிடம் அடைமானமாக விட்டான்ஆதி 38:18
    வசனங்கள்
    ஆதி 38:18அப்பொழுது அவன்: “நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும்” என்று கேட்டான். அதற்கு அவள்: “உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும்” என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
  • தாமார்: இந்த முத்திரையும் கயிறும் கோலும் யாருடையவை?ஆதி 38:25
    வசனங்கள்
    ஆதி 38:25அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும்” என்று சொல்லி அனுப்பினாள்.
  • பார்வோன் தன் முத்திரை மோதிரத்தை யோசேப்பின் விரலில் போட்டான்ஆதி 41:42
    வசனங்கள்
    ஆதி 41:42பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,
  • யேசபேல் ஆகாபின் பெயரில் கடிதங்கள் எழுதி அவனுடைய முத்திரையால் முத்திரையிட்டாள்1 இராஜா 21:8
    வசனங்கள்
    1 இராஜா 21:8அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள்.
  • அகாஸ்வேரு தன் முத்திரை மோதிரத்தை ஆமானிடம் கொடுத்தான்எஸ்த 3:10
    வசனங்கள்
    எஸ்த 3:10அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து,
  • ஆமானின் கட்டளை ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு மோதிரத்தால் முத்திரையிடப்பட்டதுஎஸ்த 3:12
    வசனங்கள்
    எஸ்த 3:12முதலாம் மாதம் பதிமூன்றாந்தேதியிலே, ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், எல்லா வகையான மக்களின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் எழுத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழிகளிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பெயரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.
  • ஆமானிடமிருந்து எடுக்கப்பட்ட மோதிரம் மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டதுஎஸ்த 8:2
    வசனங்கள்
    எஸ்த 8:2ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
  • ராஜாவின் முத்திரை மோதிரத்தால் முத்திரையிடப்பட்ட கட்டளையை மாற்றமுடியாதுஎஸ்த 8:8
    வசனங்கள்
    எஸ்த 8:8இப்போதும் உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் ராஜாவின் பெயரால் யூதர்களுக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமல் போகச்செய்ய ஒருவராலும் முடியாது என்றான்.
  • மொர்தெகாய் கடிதங்களை முத்திரையிட்டுக் குதிரை அஞ்சல்காரர் மூலம் அனுப்பினான்எஸ்த 8:10
    வசனங்கள்
    எஸ்த 8:10அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டபின்பு, குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் வேகமாக ஓடுகிற குதிரைகள் மேல்ஏறிப்போகிற தபால்காரர்கள் கையில் அனுப்பப்பட்டது.
  • சிங்கங்களின் கெபி ராஜாவின் மோதிரத்தாலும் அவனுடைய பிரபுக்களின் மோதிரங்களாலும் முத்திரையிடப்பட்டதுதானி 6:17
    வசனங்கள்
    தானி 6:17ஒரு கல் குகையினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.
  • தலைவர்கள், லேவியர், ஆசாரியர்களின் பெயர்களால் முத்திரையிடப்பட்ட எழுதப்பட்ட உடன்படிக்கைநெகே 9:38, நெகே 10:1
    வசனங்கள்
    நெகே 9:38இவையெல்லாம் இப்படி இருக்கிறதால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைசெய்து அதை எழுதி வைக்கிறோம்; எங்களுடைய பிரபுக்களும், லேவியர்களும், ஆசாரியர்களும் அதற்கு முத்திரை போடுவார்கள் என்றார்கள்.
    நெகே 10:1முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
  • எரேமியா ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு முத்திரையிட்டான்: முத்திரையிட்ட ஒரு பிரதி, திறந்த ஒரு பிரதிஎரே 32:10–11
    வசனங்கள்
    எரே 32:10–11நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசில் நிறுத்துக்கொடுத்தபின்பு, நான் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
  • நீண்டகாலம் இருக்கும்படி பத்திரங்கள் மண்பாண்டத்தில் வைக்கப்பட்டனஎரே 32:14
    வசனங்கள்
    எரே 32:14இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாட்கள் இருக்கும் விதத்தில் அவைகளை ஒரு மண்பாண்டத்தில் வை.
  • கல்லுக்கு முத்திரையிட்டுக் காவல் வைத்து இயேசுவின் கல்லறை பாதுகாக்கப்பட்டதுமத் 27:66
    வசனங்கள்
    மத் 27:66அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.

முத்திரைபோலச் செதுக்கப்பட்டவை

  • இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்கள் முத்திரைபோலச் செதுக்கப்பட்ட இரண்டு கோமேதகக் கற்கள்யாத் 28:9, யாத் 28:11, யாத் 39:6
    வசனங்கள்
    யாத் 28:9பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக.
    யாத் 28:11இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.
    யாத் 39:6இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
  • மார்ப்பதக்கத்தின் பன்னிரண்டு கற்கள், ஒவ்வொன்றிலும் ஒரு கோத்திரத்தின் பெயர் முத்திரைபோலச் செதுக்கப்பட்டதுயாத் 28:21, யாத் 39:14
    வசனங்கள்
    யாத் 28:21இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.
    யாத் 39:14இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது.
  • முத்திரைபோலச் செதுக்கப்பட்ட பொன் தகடு: “யெகோவாவுக்குப் பரிசுத்தம்”யாத் 28:36, யாத் 39:30
    வசனங்கள்
    யாத் 28:36“சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
    யாத் 39:30பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் சுத்தப்பொன்னினாலே செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,
  • உன்னதப்பாட்டில் ஒரு வசனம்: என்னை உன் இருதயத்தின்மேல் முத்திரையைப்போல வைஉன்னத 8:6
    வசனங்கள்
    உன்னத 8:6நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்