ஆராயுங்கள் › தலைப்புகள் › நட்சத்திரங்கள்
வியப்பூட்டும் விவரங்கள்
வேதாகமத்தில் நட்சத்திரங்கள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 21 பகுதிகள், வரி வரியாக.
- தேவன் இரண்டு பெரிய சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்ஆதி 1:16
வசனங்கள்
ஆதி 1:16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
- கூடுமானால் நட்சத்திரங்களை எண்ணும்படி ஆபிரகாமுக்குச் சொல்லப்படுகிறதுஆதி 15:5
வசனங்கள்
ஆதி 15:5அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார்.
- நட்சத்திரங்களையும் மணலையும்போலச் சந்ததிஆதி 22:17, உபா 1:10
வசனங்கள்
ஆதி 22:17நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும்,
உபா 1:10உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள்.
- அவர் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் குறித்து, ஒவ்வொன்றுக்கும் பெயரிடுகிறார்சங் 147:4
வசனங்கள்
சங் 147:4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
- மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் வித்தியாசப்படுகிறது1 கொரி 15:41
வசனங்கள்
1 கொரி 15:41சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
- பதினொரு நட்சத்திரங்கள் வணங்குவதாக யோசேப்பு சொப்பனம் கண்டான்ஆதி 37:9
வசனங்கள்
ஆதி 37:9அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான்.
- நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடு போரிட்டனநியா 5:20
வசனங்கள்
நியா 5:20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
- விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாகப் பாடினயோபு 38:7
வசனங்கள்
யோபு 38:7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.
- சாஸ்திரிகள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டார்கள்மத் 2:2
வசனங்கள்
மத் 2:2“யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
- நட்சத்திரம் அவர்களுக்கு முன்னே சென்று அந்த இடத்தின்மேல் நின்றதுமத் 2:9–10
வசனங்கள்
மத் 2:9–10ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
- இருபது வயதுக்குக் குறைந்தவர்களைத் தாவீது எண்ணவில்லை: இஸ்ரவேல் நட்சத்திரங்களைப்போல இருக்கும்1 நாளா 27:23
வசனங்கள்
1 நாளா 27:23இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.
பெயர் சொல்லப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள்
- துருவச்சக்கர நட்சத்திரங்கள், மிருகசீரிஷம், அறுமீன், தெற்கு மண்டலங்கள்யோபு 9:9
வசனங்கள்
யோபு 9:9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
- அறுமீனைக் கட்டவோ மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்க்கவோ உன்னால் கூடுமோ?யோபு 38:31–32
வசனங்கள்
யோபு 38:31–32அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
- ஆமோஸ்: அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினார்ஆமோ 5:8
வசனங்கள்
ஆமோ 5:8அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.
நட்சத்திர வழிபாடு
- சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வணங்கவேண்டாம் என்று இஸ்ரவேலுக்குச் சொல்லப்பட்டதுஉபா 4:19
வசனங்கள்
உபா 4:19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
- இஸ்ரவேலும் ராஜாவாகிய மனாசேயும் வானத்தின் சேனைகள் எல்லாவற்றையும் வணங்கினார்கள்2 இராஜா 17:16, 2 இராஜா 21:3
வசனங்கள்
2 இராஜா 17:16தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள்.
2 இராஜா 21:3தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான்.
- நட்சத்திர மண்டலங்களுக்குத் தூபம் காட்டிய ஆசாரியர்களை யோசியா அகற்றினான்2 இராஜா 23:5
வசனங்கள்
2 இராஜா 23:5யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபம்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபம்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.
- மக்கள் வீட்டு மேல்தளங்களில் வானத்தின் சேனைகளை வணங்கினார்கள்எரே 19:13, செப்ப 1:5
வசனங்கள்
எரே 19:13எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
செப்ப 1:5வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும்,
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்