ஆராயுங்கள் › தலைப்புகள் › பறவைகள்
இயற்கை
வேதாகமத்தில் பறவைகள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 38 பகுதிகள், வரி வரியாக.
- ஐந்தாம் நாளில் கடல் உயிரினங்களோடு பறவைகளும் உண்டாக்கப்பட்டனஆதி 1:20–23
வசனங்கள்
ஆதி 1:20–23பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார். தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது.
- ஜலப்பிரளயத்திற்குப் பின் பறவைகளும் உணவாகக் கொடுக்கப்பட்டனஆதி 9:2–3
வசனங்கள்
ஆதி 9:2–3உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்துப் பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற அனைத்தும், சமுத்திரத்தின் மீன்வகைகள் அனைத்தும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டன. நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
- சுத்தமான எந்தப் பறவையையும் இஸ்ரவேல் உண்ணலாம்உபா 14:11
வசனங்கள்
உபா 14:11“சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
- உண்ணக்கூடாதவை: கழுகு, பருந்துகள், காகம், தீக்குருவி, ஆந்தைகள், நாரை, கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால்லேவி 11:13–19
வசனங்கள்
லேவி 11:13–19“பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், பருந்தும், சகலவித வல்லூறும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
- பறவைகள் நீரூற்றுகளருகே கூடுகட்டி, கிளைகளுக்குள் பாடுகின்றனசங் 104:12
வசனங்கள்
சங் 104:12அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
- நாரை தேவதாரு மரங்களில் தன் வீட்டைக் கட்டுகிறதுசங் 104:17
வசனங்கள்
சங் 104:17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
- வசந்தகாலத்தில் காட்டுப்புறாவின் சத்தம் கேட்கிறதுஉன்னத 2:12
வசனங்கள்
உன்னத 2:12பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது.
- நாரையும் காட்டுப்புறாவும் தகைவிலானும் கொக்கும் தாங்கள் வரும் காலத்தைக் கவனிக்கின்றனஎரே 8:7
வசனங்கள்
எரே 8:7ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ யெகோவாவின் நியாயத்தை அறியார்கள் என்று யெகோவா உரைக்கிறாரென்று சொல்.
- தீக்குருவி தன் முட்டைகளை மணலில் சூடாக நிலத்தில் விடுகிறதுயோபு 39:14–15
வசனங்கள்
யோபு 39:14–15அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய், காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
- சிறகுகளை விரித்துத் தீக்குருவி குதிரையையும் அதின்மேல் ஏறியிருப்பவனையும் பார்த்து நகைக்கிறதுயோபு 39:18
வசனங்கள்
யோபு 39:18அது இறக்கை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும்.
- பருந்து தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிக்கிறதுயோபு 39:26
வசனங்கள்
யோபு 39:26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ?
- ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகள், அல்லது இரண்டு காசுக்கு ஐந்துமத் 10:29, லூக் 12:6
- அடைக்கலான் குருவியும் தகைவிலான் குருவியும் தேவாலயப் பலிபீடங்களருகே கூடுகட்டுகின்றனசங் 84:3
வசனங்கள்
சங் 84:3என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
- பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, களஞ்சியங்களில் சேர்ப்பதுமில்லைமத் 6:26
வசனங்கள்
மத் 6:26வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
- வளர்ந்த கடுகுச்செடியின் கிளைகளில் பறவைகள் கூடுகட்டுகின்றனமத் 13:32
வசனங்கள்
மத் 13:32அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
- நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டுமத் 8:20
வசனங்கள்
மத் 8:20அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
- எல்லாவித பறவைகளும் மனிதனால் அடக்கப்பட்டிருக்கின்றனயாக் 3:7
வசனங்கள்
யாக் 3:7எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு.
- சாலொமோன் மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், மீன்களைக்குறித்துப் பேசினான்1 இராஜா 4:33
வசனங்கள்
1 இராஜா 4:33லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான்.
வரலாறுகளில்
- நோவாவின் புறா கொத்திக்கொண்ட ஒலிவ இலையோடு திரும்பி வந்ததுஆதி 8:8–12
வசனங்கள்
ஆதி 8:8–12பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான். பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான். பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான். அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான். பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
- ஆபிராமின் பலியுடல்கள்மேல் இரைதேடும் பறவைகள் இறங்கின; அவன் அவைகளைத் துரத்தினான்ஆதி 15:10–11
வசனங்கள்
ஆதி 15:10–11அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
- சாயங்காலத்தில் காடைகள் முகாமை மூடினயாத் 16:13
வசனங்கள்
யாத் 16:13மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.
- கடலிலிருந்து காடைகள் அடித்துவரப்பட்டன; ஒருவனும் பத்து ஓமருக்குக் குறைவாகச் சேர்க்கவில்லைஎண் 11:31–32
வசனங்கள்
எண் 11:31–32அப்பொழுது யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.
- சாலொமோனின் பந்திக்குக் கொழுத்த கோழிகள்; நெகேமியாவின் பந்திக்கு ஒவ்வொரு நாளும் பறவைகள்1 இராஜா 4:23, நெகே 5:18
வசனங்கள்
1 இராஜா 4:23கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும்.
நெகே 5:18நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடுகளும் சமைக்கப்பட்டது; பறவைகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருமுறை பலவித திராட்சைரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த மக்கள் பட்டபாடு கடினமாக இருந்ததால், ஆளுநர்கள் வாங்குகிற பணத்தை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
- பேதுரு இயேசுவை மறுதலித்தபோது சேவல் கூவியதுமத் 26:74–75
வசனங்கள்
மத் 26:74–75அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
நியாயப்பிரமாணத்தில்
- கூட்டிலிருந்து குஞ்சுகளை எடு, ஆனால் தாய்ப்பறவையைப் போகவிடுஉபா 22:6–7
வசனங்கள்
உபா 22:6–7“வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
- தோல் வியாதியிலிருந்து சுத்திகரிப்பு: இரண்டு பறவைகள், ஒன்று வெளியிலே விடப்படுகிறதுலேவி 14:4–7
வசனங்கள்
லேவி 14:4–7சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக. பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி, உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து, தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக.
- குழந்தை இயேசுவுக்காக: ஒரு ஜோடி காட்டுப்புறா அல்லது இரண்டு புறாக்குஞ்சுகள்லூக் 2:22, லூக் 2:24
வசனங்கள்
லூக் 2:22மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு,
லூக் 2:24கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள்.
கண்ணிகளைப்பற்றிய கூற்றுகள்
- எந்தப் பறவையும் பார்க்கும் இடத்தில் வலையை விரிப்பது வீண்!நீதி 1:17
வசனங்கள்
நீதி 1:17எவ்வகையான பறவையானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.
- இரையில்லாத கண்ணியில் பறவை விழுமோ?ஆமோ 3:5
வசனங்கள்
ஆமோ 3:5குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாமல் இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் அகப்படாமல் இருக்கும்போது, கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?
- வேடனுடைய கண்ணிக்குத் தப்பின பறவையைப்போல நாம் தப்பினோம்சங் 124:7
வசனங்கள்
சங் 124:7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
- கண்ணியில் அகப்பட்ட பறவைகளைப்போலபிரச 9:12
வசனங்கள்
பிரச 9:12தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
வேறு கூற்றுகள்
- தன் கூட்டை விட்டு அலைகிற பறவையைப்போலநீதி 27:8
வசனங்கள்
நீதி 27:8தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.
- பறவைகள் நிறைந்த கூண்டுகளைப்போல வஞ்சகம் நிறைந்த வீடுகள்எரே 5:27
வசனங்கள்
எரே 5:27குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.
- வீட்டின்மேல் தனித்திருக்கிற குருவியைப்போலசங் 102:7
வசனங்கள்
சங் 102:7நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.
- தகைவிலானைப்போலவும் கொக்கைப்போலவும் கூவினேன்; புறாவைப்போலப் புலம்பினேன்ஏசா 38:14
வசனங்கள்
ஏசா 38:14நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்