ஆராயுங்கள் › தலைப்புகள் › காலைப் பனி
இயற்கை
வேதாகமத்தில் காலைப் பனி
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 22 பகுதிகள், வரி வரியாக.
- இரவில் முகாமின்மேல் பனி பெய்தபோது மன்னாவும் அதோடு விழுந்ததுஎண் 11:9
வசனங்கள்
எண் 11:9இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
- காலைப்பனி நீங்கினபின் தரையின்மேல் மெல்லிய துகள்கள் கிடந்தனயாத் 16:13–14
வசனங்கள்
யாத் 16:13–14மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
- இரவுதோறும் கிளைகளின்மேல் பனி தங்குகிறதுயோபு 29:19
வசனங்கள்
யோபு 29:19என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
- மேகங்கள் பனியைச் சொரிகின்றனநீதி 3:20
வசனங்கள்
நீதி 3:20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
- பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?யோபு 38:28
வசனங்கள்
யோபு 38:28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
- இரவில் நேசர்: என் தலை பனியால் நனைந்திருக்கிறதுஉன்னத 5:2
வசனங்கள்
உன்னத 5:2நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
- நேபுகாத்நேச்சார் வானத்துப் பனியால் நனைந்தான்தானி 4:33
வசனங்கள்
தானி 4:33அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
- சீயோனின் மலைகளின்மேல் இறங்கும் எர்மோனின் பனிசங் 133:3
வசனங்கள்
சங் 133:3எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; அங்கே யெகோவா என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
வரலாறுகளில்
- கிதியோன் கம்பளியிலிருந்து ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரைப் பிழிந்தான்நியா 6:37–38
வசனங்கள்
நியா 6:37–38இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான். அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
- அடுத்த இரவில் கம்பளி உலர்ந்திருந்தது, தரையெங்கும் பனிநியா 6:39–40
வசனங்கள்
நியா 6:39–40அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
- எலியா ஆகாபிடம்: இந்த வருடங்களில் பனியும் மழையும் இராது1 இராஜா 17:1
வசனங்கள்
1 இராஜா 17:1கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- தாவீதின் புலம்பல்: கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாதிருப்பதாக2 சாமு 1:21
வசனங்கள்
2 சாமு 1:21கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்; அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
- ஆகாய்: வானம் தன் பனியையும் பூமி தன் பலனையும் கொடுக்கவில்லைஆகாய் 1:10
வசனங்கள்
ஆகாய் 1:10ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது.
ஆசீர்வாதங்கள்
- ஈசாக்கின் ஆசீர்வாதம்: வானத்துப் பனியும் பூமியின் செழுமையும்ஆதி 27:28
வசனங்கள்
ஆதி 27:28தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக.
- ஏசா வானத்துப் பனிக்குத் தூரமாக வாழ்வான்ஆதி 27:39
வசனங்கள்
ஆதி 27:39அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக: “உன் குடியிருப்பு பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.
- மோசே: யோசேப்பின் தேசம் வானத்தின் அருமையான பனியால் ஆசீர்வதிக்கப்பட்டதுஉபா 33:13
வசனங்கள்
உபா 33:13யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,
- வானம் பனியைச் சொரியும், தானியமும் திராட்சைரசமுமுள்ள தேசம்உபா 33:28
வசனங்கள்
உபா 33:28இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
கூற்றுகள்
- விடியற்காலையில் ஒழிந்துபோகும் பனியைப்போலஓசியா 6:4, ஓசியா 13:3
வசனங்கள்
ஓசியா 6:4எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
ஓசியா 13:3ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
- ராஜாவின் தயவு புல்லின்மேல் பெய்யும் பனியைப்போலநீதி 19:12
வசனங்கள்
நீதி 19:12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
- தரையின்மேல் பனி இறங்குவதுபோல அவன்மேல் இறங்குவோம்2 சாமு 17:12
வசனங்கள்
2 சாமு 17:12அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எந்த இடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனிதர்களிலும் ஒருவனும் அவருக்கு மீதியாக இருப்பதில்லை.
- அறுப்புக்காலத்தின் வெயிலில் பனிமேகத்தைப்போலஏசா 18:4
வசனங்கள்
ஏசா 18:4நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்