Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › காற்றுகள்

இயற்கை

வேதாகமத்தில் காற்றுகள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 32 பகுதிகள், வரி வரியாக.

கிழக்குக்காற்று

  • பார்வோனின் சொப்பனம்: கிழக்குக்காற்றால் தீய்ந்துபோன கதிர்கள்ஆதி 41:6, ஆதி 41:23
    வசனங்கள்
    ஆதி 41:6பின்பு, மெலிந்ததும் கீழ்காற்றினால் வறண்டதுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
    ஆதி 41:23பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன.
  • ஒரு பகலும் ஒரு இரவும் கிழக்குக்காற்று வீசி வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்ததுயாத் 10:13
    வசனங்கள்
    யாத் 10:13அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
  • பலத்த கிழக்குக்காற்று இரவு முழுவதும் கடலைப் பின்னிடச் செய்ததுயாத் 14:21
    வசனங்கள்
    யாத் 14:21மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது.
  • சுட்டெரிக்கும் கிழக்குக்காற்றும் வெயிலும் யோனாவைச் சோர்ந்துபோகச் செய்தனயோனா 4:8
    வசனங்கள்
    யோனா 4:8சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
  • கிழக்குக்காற்று கடலில் கப்பல்களை உடைக்கிறதுசங் 48:7, எசேக் 27:26
    வசனங்கள்
    சங் 48:7கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
    எசேக் 27:26துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது.

வேறு காற்றுகள்

  • மிகவும் பலத்த மேற்குக்காற்று வெட்டுக்கிளிகளைச் செங்கடலில் அடித்துச் சென்றதுயாத் 10:19
    வசனங்கள்
    யாத் 10:19அப்பொழுது யெகோவா மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளிகூட மீதியாக இருக்கவில்லை.
  • வடகாற்று மழையைக் கொண்டுவரும்நீதி 25:23
    வசனங்கள்
    நீதி 25:23வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
  • வடகாற்றுகளால் குளிர் வருகிறதுயோபு 37:9
    வசனங்கள்
    யோபு 37:9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
  • தென்றலால் பூமி அமைதியாயிருக்கும்போது ஆடைகள் சூடாகின்றனயோபு 37:17
    வசனங்கள்
    யோபு 37:17தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ?
  • தென்றல் அடிக்கும்போது வெயில் உண்டாகும் என்கிறீர்கள்லூக் 12:55
    வசனங்கள்
    லூக் 12:55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
  • காற்று வானத்தைத் துடைத்தபின் ஒருவனும் சூரியனைப் பார்க்கமுடியாதுயோபு 37:21
    வசனங்கள்
    யோபு 37:21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,

வரலாறுகளில்

  • பூமியின்மேல் ஒரு காற்று வீசியது; ஜலப்பிரளயத் தண்ணீர் வற்றத் தொடங்கியதுஆதி 8:1
    வசனங்கள்
    ஆதி 8:1தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
  • ஒரு காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்ததுஎண் 11:31
    வசனங்கள்
    எண் 11:31அப்பொழுது யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
  • வனாந்திரக் காற்று யோபுவின் பிள்ளைகளுடைய வீட்டின் நான்கு மூலைகளையும் அடித்ததுயோபு 1:18–19
    வசனங்கள்
    யோபு 1:18–19இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது, வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
  • ஓரேபில் பெருங்காற்று கன்மலைகளைப் பிளந்தது, பின்பு பூமியதிர்ச்சி வந்தது1 இராஜா 19:11
    வசனங்கள்
    1 இராஜா 19:11அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை.
  • கடலில் பெருங்காற்று யோனாவின் கப்பலை உடைக்கும் அளவுக்கு அடித்ததுயோனா 1:4
    வசனங்கள்
    யோனா 1:4யெகோவா கடலின்மேல் பெருங்காற்றை அனுப்பினார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமளவிற்கு பெரிய கொந்தளிப்பு உண்டானது.
  • இயேசு காற்றையும் கடலையும் அதட்டினார்; மிகுந்த அமைதி உண்டானதுமத் 8:24–27
    வசனங்கள்
    மத் 8:24–27அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது. அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
  • எதிர்க்காற்றினால் சீடர்கள் தண்டு வலிக்கக் கஷ்டப்பட்டார்கள்மாற் 6:48, மத் 14:24, யோவா 6:18
    வசனங்கள்
    மாற் 6:48அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
    மத் 14:24அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது.
    யோவா 6:18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
  • மெதுவான தென்றல், பின்பு யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்றுஅப் 27:13–15
    வசனங்கள்
    அப் 27:13–15தென்றல் மெதுவாக வீசினபடியால், தாங்கள் வேண்டிக்கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவிற்கு அருகில் சென்றார்கள். கொஞ்சநேரத்திற்குள்ளே யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று அதில் மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
  • தென்றலோடு பவுலின் கப்பல் ரேகியுவிலிருந்து புத்தேயோலிக்கு இரண்டு நாளில் போனதுஅப் 28:13
    வசனங்கள்
    அப் 28:13அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

கூற்றுகள்

  • காற்று தெற்கே போய், வடக்கே திரும்பி, சுற்றிச் சுற்றி அடிக்கிறதுபிரச 1:6
    வசனங்கள்
    பிரச 1:6காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
  • காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்பிரச 11:4
    வசனங்கள்
    பிரச 11:4காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான்.
  • காற்றின் வழி இன்னதென்று நீ அறியாய்பிரச 11:5
    வசனங்கள்
    பிரச 11:5ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை.
  • காற்றானது தனக்கு விருப்பமான இடத்தில் வீசுகிறது; அதின் சத்தத்தைக் கேட்கிறாய்யோவா 3:8
    வசனங்கள்
    யோவா 3:8காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
  • காற்று பறக்கடிக்கும் பதரைப்போலசங் 1:4
    வசனங்கள்
    சங் 1:4துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
  • காற்றினால் அசையும் நாணலோ?மத் 11:7
    வசனங்கள்
    மத் 11:7அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
  • பலத்த காற்றுகளால் அடிபட்ட பெரிய கப்பல்கள் சிறிய சுக்கானால் திருப்பப்படுகின்றனயாக் 3:4
    வசனங்கள்
    யாக் 3:4கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான்.
  • காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைபோலயாக் 1:6
    வசனங்கள்
    யாக் 1:6ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்