ஆராயுங்கள் › தலைப்புகள் › பாம்புகள்
இயற்கை
வேதாகமத்தில் பாம்புகள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 28 பகுதிகள், வரி வரியாக.
- ஆதியாகமம்: சர்ப்பம் வெளியின் எல்லா மிருகங்களிலும் தந்திரமுள்ளதாக இருந்ததுஆதி 3:1
வசனங்கள்
ஆதி 3:1தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
- ஆதியாகமம்: சர்ப்பம் தன் வயிற்றால் நகர்ந்து மண்ணைத் தின்னும்ஆதி 3:14
வசனங்கள்
ஆதி 3:14அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
- கன்மலையின்மேல் பாம்பின் வழி — மிகவும் ஆச்சரியமான நான்கு காரியங்களில் ஒன்றுநீதி 30:18–19
வசனங்கள்
நீதி 30:18–19எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
- சுவர்களில் பாம்புகள்: அதை உடைப்பவனையோ அதில் சாய்பவனையோ கடிக்கலாம்பிரச 10:8, ஆமோ 5:19
- பாம்பாட்டிகள்: மந்திரத்திற்கு முன்பே பாம்பு கடித்தால் பயனில்லைபிரச 10:11
வசனங்கள்
பிரச 10:11தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன்.
- மகுடிக்காரனின் இசைக்குத் தன் காதை அடைத்துக்கொள்ளும் விரியன்சங் 58:4–5
வசனங்கள்
சங் 58:4–5பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
- மந்திரத்திற்கு அடங்காத கட்டுவிரியன்கள்எரே 8:17
வசனங்கள்
எரே 8:17மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
- வழியருகே உள்ள விரியன் குதிரையின் குதிகாலைக் கடிக்கிறது; சவாரி செய்பவன் மல்லாக்க விழுகிறான்ஆதி 49:17
வசனங்கள்
ஆதி 49:17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
- வனாந்திரத்தில் விஷப்பாம்புகளும் தேள்களும் இருந்தனஉபா 8:15
வசனங்கள்
உபா 8:15உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும்,
- தென்தேசம்: சிங்கமும் விரியனும் பறக்கும் கொள்ளிவாய்ப் பாம்பும் உள்ள தேசம்ஏசா 30:6
வசனங்கள்
ஏசா 30:6தெற்கேபோகிற மிருகங்களின் செய்தி. கொடிய சிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்திற்கு, அவர்கள் கழுதை குட்டிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத மக்களிடத்திற்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.
- கட்டுவிரியனின் முட்டையை உடைத்தால் விரியன் புறப்படும்ஏசா 59:5
வசனங்கள்
ஏசா 59:5கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
வரலாறுகளில்
- மோசேயின் கோல் பாம்பானது; அவன் அதற்கு விலகியோடி, பின்பு அதன் வாலைப் பிடித்தான்யாத் 4:3–4
வசனங்கள்
யாத் 4:3–4“அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது.
- ஆரோனின் கோல் சர்ப்பமாகி மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கியதுயாத் 7:10–12
வசனங்கள்
யாத் 7:10–12மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.
- வனாந்திரத்தில் கொள்ளிவாய்ப் பாம்புகள் இஸ்ரவேலரைக் கடித்தன; அநேகர் மரித்தார்கள்எண் 21:6
வசனங்கள்
எண் 21:6அப்பொழுது யெகோவா விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள்.
- மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தைச் செய்து கம்பத்தின்மேல் வைத்தான்; கடிபட்டவர்கள் அதைப் பார்த்துப் பிழைத்தார்கள்எண் 21:8–9
வசனங்கள்
எண் 21:8–9அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
- அதற்குத் தூபம் காட்டப்பட்டதால் எசேக்கியா அந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்தான்2 இராஜா 18:4
வசனங்கள்
2 இராஜா 18:4அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான்.
- மெலித்தாவில் நெருப்பின் சூட்டினால் வெளிவந்த ஒரு விரியன் பவுலின் கையைப் பற்றிக்கொண்டதுஅப் 28:3–4
வசனங்கள்
அப் 28:3–4பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
- பவுல் அதை உதறிவிட்டான்; அவன் வீங்குவான் என்று தீவார் காத்திருந்தார்கள்அப் 28:5–6
வசனங்கள்
அப் 28:5–6அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
- பாம்புகளையும் தேள்களையும் மிதிக்க இயேசு தம் சீடர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார்லூக் 10:17, லூக் 10:19
வசனங்கள்
லூக் 10:17பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
லூக் 10:19இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
கூற்றுகள்
- பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாக இருங்கள்மத் 10:16
வசனங்கள்
மத் 10:16ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
- மகன் மீனைக் கேட்டால் எந்தத் தகப்பன் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பான்?மத் 7:10, லூக் 11:11
வசனங்கள்
மத் 7:10மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
லூக் 11:11உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா?
- திராட்சைரசம் பாம்பைப்போலக் கடித்து, விரியனைப்போலத் தீண்டும்நீதி 23:31–32
வசனங்கள்
நீதி 23:31–32மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
- அவர்கள் பாம்பைப்போலத் தங்கள் நாவுகளைக் கூர்மையாக்குகிறார்கள்சங் 140:3
வசனங்கள்
சங் 140:3பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
- அவர்கள் பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்மீகா 7:17
வசனங்கள்
மீகா 7:17பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.
- எகிப்து ஓடும் சர்ப்பத்தைப்போலச் சீறும்எரே 46:22
வசனங்கள்
எரே 46:22அவன் பாம்பைப்போல் சீறிவருவான், படைபலத்தோடு நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்