Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › பூச்சிகளும் புழுக்களும்

இயற்கை

வேதாகமத்தில் பூச்சிகளும் புழுக்களும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 18 பகுதிகள், வரி வரியாக.

அந்துப்பூச்சிகள்

  • அந்துப்பூச்சிகள் ஆடைகளைத் தின்கின்றனயாக் 5:2
    வசனங்கள்
    யாக் 5:2உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது.
  • அந்துப்பூச்சியும் துருவும் பூமியிலுள்ள பொக்கிஷங்களைக் கெடுக்கின்றனமத் 6:19–20
    வசனங்கள்
    மத் 6:19–20பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
  • அந்துப்பூச்சி கெடுக்காத பரலோகப் பொக்கிஷம்லூக் 12:33
    வசனங்கள்
    லூக் 12:33உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.
  • அந்துப்பூச்சி அரித்த ஆடையைப்போலயோபு 13:28
    வசனங்கள்
    யோபு 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
  • அந்துப்பூச்சி அவர்களை ஆடையைப்போலத் தின்றுபோடும்ஏசா 50:9, ஏசா 51:8
    வசனங்கள்
    ஏசா 50:9இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
    ஏசா 51:8பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
  • அவன் கட்டின வீடு அந்துப்பூச்சியின் கூட்டைப்போல இருக்கிறதுயோபு 27:18
    வசனங்கள்
    யோபு 27:18அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.
  • மண்வீடுகளில் வாழ்கிறவர்கள் அந்துப்பூச்சியைப்போல நசுக்கப்படுகிறார்கள்யோபு 4:19
    வசனங்கள்
    யோபு 4:19புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?

புழுக்கள்

  • இரவு முழுவதும் வைத்த மன்னாவில் புழுக்கள் உண்டாகி நாறியதுயாத் 16:20
    வசனங்கள்
    யாத் 16:20மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
  • ஓய்வுநாளுக்காக வைத்த பங்கில் புழுக்கள் இல்லையாத் 16:24
    வசனங்கள்
    யாத் 16:24மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
  • விடியற்காலையில் ஒரு பூச்சி யோனாவின் செடியை அரித்தது; அது வாடிப்போனதுயோனா 4:7
    வசனங்கள்
    யோனா 4:7மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது.
  • ஏரோது புழுப்புழுத்து மரித்தான்அப் 12:21–23
    வசனங்கள்
    அப் 12:21–23குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
  • புழுக்கள் திராட்சைப்பழங்களைத் தின்னும்; அதனால் ஒருவனும் சேர்க்கமாட்டான்உபா 28:39
    வசனங்கள்
    உபா 28:39திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும்.
  • யோபு: என் உடல் புழுக்களால் மூடப்பட்டிருக்கிறதுயோபு 7:5
    வசனங்கள்
    யோபு 7:5என் உடல் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
  • கல்லறையில் செழிப்பானவனையும் கசப்புள்ளவனையும் புழுக்கள் ஒன்றாக மூடுகின்றனயோபு 21:23–26
    வசனங்கள்
    யோபு 21:23–26ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், மனவேதனையுடன் இறக்கிறான். இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
  • புழு அவர்களைக் கம்பளியைப்போலத் தின்றுபோடும்ஏசா 51:8
    வசனங்கள்
    ஏசா 51:8பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
  • புழுக்கள் உன் படுக்கை, பூச்சிகள் உன் போர்வைஏசா 14:11
    வசனங்கள்
    ஏசா 14:11உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
  • ஒரு சங்கீதம்: நானோ மனிதனல்ல, ஒரு புழுசங் 22:6
    வசனங்கள்
    சங் 22:6நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்