Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › கோடையும் குளிர்காலமும்

இயற்கை

வேதாகமத்தில் கோடையும் குளிர்காலமும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 40 பகுதிகள், வரி வரியாக.

  • விதைப்பும் அறுப்பும், குளிரும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும் ஒழிவதில்லைஆதி 8:22
    வசனங்கள்
    ஆதி 8:22பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
  • காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்க வானத்தில் சுடர்கள்ஆதி 1:14, சங் 104:19
    வசனங்கள்
    ஆதி 1:14பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
    சங் 104:19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
  • ஒரு சங்கீதம்: கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் நீர் உண்டாக்கினீர்சங் 74:17
    வசனங்கள்
    சங் 74:17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
  • ஏற்ற காலத்தில் மழை: முன்மாரியும் பின்மாரியும்உபா 11:14, யோவே 2:23, எரே 5:24
    வசனங்கள்
    உபா 11:14நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து,
    யோவே 2:23சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார்.
    எரே 5:24அந்தந்தப் பருவத்தில் எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லுகிறதில்லை.
  • வசந்தகாலத்தில், ராஜாக்கள் போருக்குப் புறப்படும் காலத்தில்2 சாமு 11:1
    வசனங்கள்
    2 சாமு 11:1அடுத்த வருடம் ராஜாக்கள் வழக்கமாக யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடு தன்னுடைய வீரர்களையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் இராணுவத்தை அழிக்கவும், ரப்பாவை முற்றுகையிடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
  • திராட்சை அறுப்புவரை போரடிப்பு, விதைக்கும் காலம்வரை திராட்சை அறுப்புலேவி 26:5
    வசனங்கள்
    லேவி 26:5திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
  • வாற்கோதுமை அறுப்பின் தொடக்கத்தில் ரூத் வந்து கோதுமை அறுப்பு முடியும்வரை கதிர் பொறுக்கினாள்ரூத் 1:22, ரூத் 2:23
    வசனங்கள்
    ரூத் 1:22இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.
    ரூத் 2:23அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் முடியும்வரைக்கும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடு இருந்து, தன் மாமியாரோடு வாழ்ந்தாள்.
  • கோதுமை அறுப்புக்காலத்தில் சாமுவேல் இடியையும் மழையையும் வரவழைத்தான்1 சாமு 12:17–18
    வசனங்கள்
    1 சாமு 12:17–18இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே யெகோவா இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;
  • யாக்கோபின் வருடங்கள்: பகலில் வெயில், இரவில் குளிர்ஆதி 31:40
    வசனங்கள்
    ஆதி 31:40பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.

கோடைகாலம்

  • எக்லோன் தன் மேலறையின் குளிர்ச்சியில் உட்கார்ந்திருந்தான்நியா 3:20, நியா 3:24
    வசனங்கள்
    நியா 3:20ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.
    நியா 3:24அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.
  • மாரிகால வீடுகளும் கோடைகால வீடுகளும்ஆமோ 3:15
    வசனங்கள்
    ஆமோ 3:15மழைகாலத்து வீட்டையும் கோடைக்காலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • சீபா தாவீதுக்கு நூறு கோடைகாலப் பழங்களைக் கொண்டுவந்தான்2 சாமு 16:1–2
    வசனங்கள்
    2 சாமு 16:1–2தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது. ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
  • கெதலியா: திராட்சைரசத்தையும் கோடைகாலப் பழங்களையும் எண்ணெயையும் பாத்திரங்களில் சேருங்கள்எரே 40:10, எரே 40:12
    வசனங்கள்
    எரே 40:10நானோவெனில், இதோ, நம்மிடத்தில் வருகிற கல்தேயரிடத்தில் பணியும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சைரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று வாக்குக்கொடுத்துச் சொன்னான்.
    எரே 40:12எல்லா யூதரும் தாங்கள் துரத்தப்பட்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சைரசத்தையும் பழங்களையும் அதிகமாகச் சேர்த்து வைத்தார்கள்.
  • எறும்பு கோடைகாலத்தில் தன் உணவைச் சேர்த்துவைக்கிறதுநீதி 6:6–8, நீதி 30:25
    வசனங்கள்
    நீதி 6:6–8சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
    நீதி 30:25அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
  • கோடைகாலத்தில் களத்தின் பதர் காற்றினால் அடித்துக்கொண்டுபோகப்படுகிறதுதானி 2:35
    வசனங்கள்
    தானி 2:35அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
  • அத்திமரம் இலைவிடும்போது கோடைகாலம் அருகில் இருக்கிறதுமத் 24:32
    வசனங்கள்
    மத் 24:32அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
  • கோடைகால வறட்சியைப்போல என் பெலன் வற்றிப்போனதுசங் 32:4
    வசனங்கள்
    சங் 32:4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)

குளிர்காலம்

  • மாரிகாலம் சென்றுபோயிற்று; மழை பெய்து ஓய்ந்ததுஉன்னத 2:11–13
    வசனங்கள்
    உன்னத 2:11–13இதோ, மழைக்காலம் சென்றது, மழைபெய்து ஓய்ந்தது. பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சைக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! நீ எழுந்து வா.
  • ஒன்பதாம் மாதத்தில் ராஜா தன் குளிர்கால அரண்மனையில் நெருப்பருகே உட்கார்ந்திருந்தான்எரே 36:22
    வசனங்கள்
    எரே 36:22ஒன்பதாம் மாதத்தில் ராஜா, குளிர்காலத்திற்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக அடுப்பு மூட்டியிருந்தது.
  • மழைக்காலத்தில் மக்கள் கடும் மழையில் வீதியில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்எஸ்றா 10:9, எஸ்றா 10:13
    வசனங்கள்
    எஸ்றா 10:9அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
    எஸ்றா 10:13ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
  • குளிர்காலத்தில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை; இயேசு சாலொமோனுடைய மண்டபத்தில் நடந்தார்யோவா 10:22–23
    வசனங்கள்
    யோவா 10:22–23பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
  • நீங்கள் ஓடிப்போவது குளிர்காலத்தில் நடக்காதபடி ஜெபம் செய்யுங்கள்மத் 24:20
    வசனங்கள்
    மத் 24:20நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
  • உபவாசநாளுக்குப் பின் கடற்பயணம் ஆபத்தானது; குளிர்காலத்தைக் கழிக்கத் துறைமுகத்தைத் தேடினார்கள்அப் 27:9, அப் 27:12
    வசனங்கள்
    அப் 27:9வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
    அப் 27:12அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாக இல்லாததினால், அந்த இடத்தைவிட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.
  • அலெக்சந்திரியா கப்பல் ஒன்று அந்தத் தீவில் மழைகாலத்தைக் கழித்திருந்ததுஅப் 28:11
    வசனங்கள்
    அப் 28:11மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
  • பவுல் நிக்கொப்போலியில் குளிர்காலத்தைக் கழிக்கத் தீர்மானித்தான்தீத் 3:12
    வசனங்கள்
    தீத் 3:12நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
  • பவுல் தீமோத்தேயுவுக்கு: குளிர்காலத்திற்கு முன் என்னிடம் வர முயற்சிசெய்2 தீமோ 4:21
    வசனங்கள்
    2 தீமோ 4:21மழைக்காலத்திற்குமுன் நீ வந்துசேரும்படி ஆயத்தப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
  • அவர் உறைந்த மழையை ஆட்டுமயிரைப்போலப் பெய்யச்செய்து, உறைபனியைச் சாம்பலைப்போலத் தூவுகிறார்சங் 147:16
    வசனங்கள்
    சங் 147:16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.

நீதிமொழிகளில் உள்ள கூற்றுகள்

  • கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்நீதி 10:5
    வசனங்கள்
    நீதி 10:5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
  • கோடைகாலத்தில் உறைந்த மழையைப்போலவும் அறுப்புக்காலத்தில் மழையைப்போலவும்நீதி 26:1
    வசனங்கள்
    நீதி 26:1கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
  • அறுப்புக்காலத்தில் உறைந்த மழையின் குளிர்ச்சியைப்போலநீதி 25:13
    வசனங்கள்
    நீதி 25:13அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
  • சோம்பேறி காலத்தில் உழுவதில்லைநீதி 20:4
    வசனங்கள்
    நீதி 20:4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்