ஆராயுங்கள் › தலைப்புகள் › லீலிபுஷ்பங்களும் புல்லும்
இயற்கை
வேதாகமத்தில் லீலிபுஷ்பங்களும் புல்லும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 35 பகுதிகள், வரி வரியாக.
லீலிபுஷ்பங்கள்
- தேவாலய மண்டபத் தூண்களின் கும்பங்கள் லீலிபுஷ்ப வடிவில் இருந்தன1 இராஜா 7:19, 1 இராஜா 7:22
வசனங்கள்
1 இராஜா 7:19மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய உச்சியில் உள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், 6 அடி உயரமுமாக இருந்தது.
1 இராஜா 7:22தூண்களுடைய சிகரத்தில் லீலிமலர்களைப்போல வேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாகத் தூண்களின் வேலை முடிந்தது.
- வெண்கலக் கடலின் விளிம்பு லீலிபுஷ்பத்தைப்போல இருந்தது1 இராஜா 7:26, 2 நாளா 4:5
வசனங்கள்
1 இராஜா 7:26அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது 2,000 குடம் தண்ணீர் பிடிக்கும்.
2 நாளா 4:5அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
- காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகின்றன என்று கவனியுங்கள்: அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லைமத் 6:28, லூக் 12:27
வசனங்கள்
மத் 6:28உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
லூக் 12:27காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- சாலொமோன்கூடத் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போல உடுத்தியிருக்கவில்லைமத் 6:29
வசனங்கள்
மத் 6:29என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- ஒரு மேய்ப்பன் லீலிபுஷ்பங்களுக்குள்ளே தன் மந்தையை மேய்க்கிறான்உன்னத 2:16, உன்னத 6:3
வசனங்கள்
உன்னத 2:16என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
உன்னத 6:3நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.
- நேசர் லீலிபுஷ்பங்களைக் கொய்யத் தன் தோட்டத்திற்குப் போகிறார்உன்னத 6:2
வசனங்கள்
உன்னத 6:2தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
- பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம் … முட்களுக்குள்ளே லீலிபுஷ்பத்தைப்போலஉன்னத 2:1–2
வசனங்கள்
உன்னத 2:1–2நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
- அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் சொட்டும் லீலிபுஷ்பங்களைப்போலஉன்னத 5:13
வசனங்கள்
உன்னத 5:13அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
- லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேயும் இரட்டை மான்குட்டிகள்உன்னத 4:5
வசனங்கள்
உன்னத 4:5உன் இரண்டு மார்பகங்களும் லீலிமலர்களுக்கு இடையில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
புல்
- மிருகஜீவன்களுக்காகவும் மலைகளின்மேலும் புல் முளைக்கிறதுசங் 104:14, சங் 147:8, உபா 11:15
வசனங்கள்
சங் 104:14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
சங் 147:8அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
உபா 11:15மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்.
- அறுக்கப்பட்ட புல்லின்மேல் பெய்யும் மழைசங் 72:6
வசனங்கள்
சங் 72:6புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
- வீட்டு மேல்தளத்தின் புல் வளரும் முன்பே வாடிப்போகிறதுசங் 129:6–7, 2 இராஜா 19:26
வசனங்கள்
சங் 129:6–7வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
2 இராஜா 19:26அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.
- இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்மத் 6:30, லூக் 12:28
வசனங்கள்
மத் 6:30விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
லூக் 12:28இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
- வைக்கோல் அகற்றப்பட்டதும் புதிய பயிர் தோன்றுகிறதுநீதி 27:25
வசனங்கள்
நீதி 27:25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
- சுட்டெரிக்கும் வெயில் செடியை வாடப்பண்ணுகிறது; அதன் பூ உதிருகிறதுயாக் 1:11
வசனங்கள்
யாக் 1:11சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
- வறட்சியில் ஆகாப் குதிரைகளுக்குப் புல் தேடி ஒவ்வொரு நீரூற்றுக்கும் பள்ளத்தாக்குக்கும் போனான்1 இராஜா 18:5
வசனங்கள்
1 இராஜா 18:5ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் எல்லா மிருகஜீவன்களையும் சாகவிடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் கிடைக்குமா என்று பார் என்றான்.
- நிம்ரீமின் தண்ணீர்கள் வற்றின; புல் வாடிப்போனதுஏசா 15:6
வசனங்கள்
ஏசா 15:6நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது.
- பிகெமோத் மாட்டைப்போலப் புல்லைத் தின்னும்யோபு 40:15
வசனங்கள்
யோபு 40:15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
- நேபுகாத்நேச்சார் மாட்டைப்போலப் புல்லைத் தின்றான்தானி 4:33
வசனங்கள்
தானி 4:33அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
- புல் இருக்கும்போது காட்டுக்கழுதை கத்துமோ?யோபு 6:5
வசனங்கள்
யோபு 6:5புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
- ஐயாயிரம் பேர் பச்சையான புல்லின்மேல் உட்கார்ந்தார்கள்யோவா 6:10, மாற் 6:39
கூற்றுகள்
- மாம்சமெல்லாம் புல்லைப்போல இருக்கிறது; புல் உலர்ந்து பூ உதிர்ந்துபோகும்ஏசா 40:6–8, 1 பேது 1:24
வசனங்கள்
ஏசா 40:6–8பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. யெகோவாவின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; மக்களே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
1 பேது 1:24மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
- காலையில் முளைக்கும் புல் மாலையில் வாடிப்போகிறதுசங் 90:5–6
வசனங்கள்
சங் 90:5–6அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
- மனிதனுடைய நாட்கள் புல்லைப்போல இருக்கின்றன; காற்று அதின்மேல் வீசினதும் அது இல்லாமல்போகிறதுசங் 103:15–16
வசனங்கள்
சங் 103:15–16மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
- பனியைப்போல இறங்கும் பேச்சு, இளம்புல்லின்மேல் பெய்யும் தூறலைப்போலஉபா 32:2
வசனங்கள்
உபா 32:2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்