ஆராயுங்கள் › தலைப்புகள் › மான்களும் வெளிமான்களும்
இயற்கை
வேதாகமத்தில் மான்களும் வெளிமான்களும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 19 பகுதிகள், வரி வரியாக.
- சுத்தமுள்ளவர்களும் தீட்டுள்ளவர்களும் மானையும் வெளிமானையும் உண்ணலாம்உபா 12:15, உபா 14:5
வசனங்கள்
உபா 12:15“ஆனாலும் உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம்.
உபா 14:5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே.
- சாலொமோனின் பந்திக்கு மான்களும் வெளிமான்களும் கலைமான்களும் கொடுக்கப்பட்டன1 இராஜா 4:22–23
வசனங்கள்
1 இராஜா 4:22–23ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும்.
- யோபு: பெண்மான் குனிந்து குட்டியை ஈனுகிறது; குட்டிகள் வெளியிலே வளருகின்றனயோபு 39:1–4
வசனங்கள்
யோபு 39:1–4“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும்.
- வறட்சியில் புல் இல்லாததால் பெண்மான் தன் புதிய குட்டியை விட்டுப்போகிறதுஎரே 14:5
வசனங்கள்
எரே 14:5வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல் இல்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
- மான் நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோலசங் 42:1
வசனங்கள்
சங் 42:1கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
- மேய்ச்சல் காணாத மான்கள் வேடனுக்குத் தப்பியோட பெலனற்றுப்போகின்றனபுலம் 1:6
வசனங்கள்
புலம் 1:6சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
- வெளிமான் வேடனுடைய கையிலிருந்து தன்னைத் தப்புவித்துக்கொள்கிறதுநீதி 6:5
வசனங்கள்
நீதி 6:5வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
கூற்றுகள்
- ஆசகேல் காட்டு வெளிமானைப்போல வேகமாக ஓடுகிறவன்2 சாமு 2:18
வசனங்கள்
2 சாமு 2:18அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான்.
- காத்தியப் போர்வீரர்கள் மலைகளிலுள்ள வெளிமான்களைப்போல வேகமுள்ளவர்கள்1 நாளா 12:8
வசனங்கள்
1 நாளா 12:8காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள்.
- உயர்ந்த இடங்களில் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்குகிறார்2 சாமு 22:34, சங் 18:33, ஆப 3:19
வசனங்கள்
2 சாமு 22:34அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார்.
சங் 18:33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
ஆப 3:19ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.
- அன்பான பெண்மான், அழகான வரையாடுநீதி 5:19
வசனங்கள்
நீதி 5:19அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
- நேசர், மலைகளின்மேல் வெளிமானைப்போல அல்லது மான்குட்டியைப்போலஉன்னத 2:9, உன்னத 2:17, உன்னத 8:14
வசனங்கள்
உன்னத 2:9என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று சன்னல் வழியாகப் பார்த்து, தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
உன்னத 2:17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.
உன்னத 8:14என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.
- வெளியின் வெளிமான்கள்மேலும் பெண்மான்கள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்உன்னத 2:7
வசனங்கள்
உன்னத 2:7எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.
- நப்தலி விடுதலையாக்கப்பட்ட பெண்மான்ஆதி 49:21
வசனங்கள்
ஆதி 49:21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்