ஆராயுங்கள் › தலைப்புகள் › குதிரைகள்
இயற்கை
வேதாகமத்தில் குதிரைகள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 37 பகுதிகள், வரி வரியாக.
- யோபு: குதிரை பள்ளத்தாக்கில் தரையைக் குடைந்து, தன் பலத்தில் களித்து, போருக்குப் பாய்கிறதுயோபு 39:19–21
வசனங்கள்
யோபு 39:19–21குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது. அது தரையிலே உதைத்து, தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும்.
- அது பயத்தைப் பார்த்து நகைக்கிறது, பட்டயத்திற்குப் பின்வாங்குவதில்லையோபு 39:22–23
வசனங்கள்
யோபு 39:22–23அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை புறக்கணிக்கும். அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
- எக்காளச் சத்தத்தில் அது நிற்கமுடியாமல், தூரத்திலிருந்தே போரை மோப்பம் பிடிக்கிறதுயோபு 39:24–25
வசனங்கள்
யோபு 39:24–25கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து, எக்காளத்தின் சத்தத்திற்கு பயப்படாமல் பாயும். எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும்.
- போர்க்குதிரைகளின் சீறுதலும் கனைப்பும் தூரத்திலிருந்தே கேட்கப்பட்டனஎரே 8:16
வசனங்கள்
எரே 8:16தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்சு சத்தம் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த குதிரைகள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் மக்களையும் பட்சிப்பார்கள்.
- வாயில் கடிவாளம் போட்டு, சவாரி செய்கிறவர்கள் முழு மிருகத்தையும் நடத்துகிறார்கள்யாக் 3:3
வசனங்கள்
யாக் 3:3பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
- குதிரைகளையும் கோவேறுகழுதைகளையும் கடிவாளத்தாலும் வாரினாலும் அடக்கவேண்டும்சங் 32:9
வசனங்கள்
சங் 32:9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
- இரதக் குதிரைகளுக்கு வாற்கோதுமையும் வைக்கோலும் கொண்டுவரப்பட்டன1 இராஜா 4:28
வசனங்கள்
1 இராஜா 4:28குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள்.
- வண்டிச் சக்கரங்களும் குதிரைகளும் தானியத்தை நசுக்காமல் அதன்மேல் உருண்டனஏசா 28:28
வசனங்கள்
ஏசா 28:28அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.
போரில்
- பார்வோனின் குதிரைகளும் இரதங்களும் இஸ்ரவேலைக் கடல்வரை துரத்தினயாத் 14:9, யாத் 15:19
வசனங்கள்
யாத் 14:9எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள்.
யாத் 15:19பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
- யோசுவா எதிரிகளின் குதிரைகளின் குதிகால் நரம்பை வெட்டி, இரதங்களைச் சுட்டெரித்தான்யோசு 11:6, யோசு 11:9
வசனங்கள்
யோசு 11:6அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார்.
யோசு 11:9யோசுவா யெகோவா தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
- நூறு குதிரைகளைத் தவிர மற்ற இரதக் குதிரைகள் எல்லாவற்றின் குதிகால் நரம்பையும் தாவீது வெட்டினான்2 சாமு 8:4
வசனங்கள்
2 சாமு 8:4அவனுக்கு இருந்த இராணுவத்தில் 1,700 குதிரைவீரர்களையும், 20,000 காலாட்களையும் பிடித்து, இரதங்களில் 100 இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் முடமாக்கினான்.
- ராஜாவாகிய யோசபாத் ஆகாபிடம்: என் குதிரைகள் உம்முடைய குதிரைகள்1 இராஜா 22:4
வசனங்கள்
1 இராஜா 22:4யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்ய என்னோடு கூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
- அசீரியரின் கேலி: இரண்டாயிரம் குதிரைகள் தருகிறோம், அவற்றின்மேல் ஏற ஆட்கள் உண்டானால்2 இராஜா 18:23
வசனங்கள்
2 இராஜா 18:23நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய்.
- சீரியரைப் பின்தொடர சமாரியாவின் வேவுகாரர் குதிரைகளோடு இரண்டு இரதங்களை எடுத்தார்கள்2 இராஜா 7:13–14
வசனங்கள்
2 இராஜா 7:13–14அவனுடைய வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்திரவு கொடும்; இதோ, இங்கே இஸ்ரவேலின் சகல மிகுதியிலும், இறந்துபோன இஸ்ரவேலின் அனைத்து கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீதியாக இருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான். அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய்வாருங்கள் என்று சொல்லி, சீரியர்களின் இராணுவத்தைப் பின்தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
- குதிரைகளைப் பூட்டுங்கள்; குதிரைகளின்மேல் ஏறுங்கள்; தலைச்சீராக்களோடு நில்லுங்கள்!எரே 46:4
வசனங்கள்
எரே 46:4குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைக்கவசத்தை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களை அணிந்துகொள்ளுங்கள்.
- பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்போசையும் இரதங்களின் இரைச்சலும்எரே 47:3
வசனங்கள்
எரே 47:3அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை சோர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பார்க்காதிருப்பார்கள்.
ராஜாக்களும் வியாபாரமும்
- நியாயப்பிரமாணம்: ராஜா அநேக குதிரைகளைச் சேர்க்கக்கூடாதுஉபா 17:16
வசனங்கள்
உபா 17:16அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
- சாலொமோனின் இரதக் குதிரைகளுக்கான லாயங்களும் அவனுடைய குதிரைவீரர்களும்1 இராஜா 4:26, 2 நாளா 9:25
வசனங்கள்
1 இராஜா 4:26சாலொமோனுக்கு 4,000 குதிரைலாயங்களும், 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள்.
2 நாளா 9:25சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
- எகிப்திலிருந்து ஒரு குதிரைக்கு 150 சேக்கல் வெள்ளி, ஒரு இரதத்திற்கு 6001 இராஜா 10:28–29
வசனங்கள்
1 இராஜா 10:28–29சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள். எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை 600 வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.
- சாலொமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் வந்தன1 இராஜா 10:28, 2 நாளா 9:28
வசனங்கள்
1 இராஜா 10:28சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள்.
2 நாளா 9:28எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
- தொகர்மா நகரத்தார் குதிரைகளையும் போர்க்குதிரைகளையும் கோவேறுகழுதைகளையும் தீருவோடு வியாபாரம் செய்தார்கள்எசேக் 27:14
வசனங்கள்
எசேக் 27:14தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
- பாபிலோனிலிருந்து திரும்பியவர்களுக்கு 736 குதிரைகளும் 245 கோவேறுகழுதைகளும் இருந்தனஎஸ்றா 2:66
வசனங்கள்
எஸ்றா 2:66அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
- யூதாவில் சிலர் எகிப்தின் குதிரைகளையும் இரதங்களையும் நம்பி அங்கே போனார்கள்ஏசா 31:1
வசனங்கள்
ஏசா 31:1உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவை தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ,
- யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கு நியமித்த குதிரைகளை யோசியா அகற்றினான்2 இராஜா 23:11
வசனங்கள்
2 இராஜா 23:11யெகோவாவின் ஆலயத்திற்குள் போகிற இடம்துவங்கி, பட்டணத்திற்கு வெளியே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுவரை யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
- ராஜாவின் சொந்தக் குதிரையின்மேல் மொர்தெகாய் பட்டணத்தில் ஊர்வலமாக நடத்தப்பட்டான்எஸ்த 6:8–11
வசனங்கள்
எஸ்த 6:8–11ராஜா அணிந்துகொள்ளுகிற ராஜஉடையும், ராஜா ஏறுகிற குதிரையும், அவருடைய தலையிலே சூட்டப்படும் ராஜகிரீடமும் கொண்டுவரப்படவேண்டும். அந்த ஆடையும் குதிரையும் ராஜாவுடைய முக்கிய பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படிச் செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியே செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். அப்படியே ஆமான் ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவரும்படிச்செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
- அக்கினி இரதமும் அக்கினிக் குதிரைகளும் எலியாவை எலிசாவிடமிருந்து பிரித்தன2 இராஜா 2:11
வசனங்கள்
2 இராஜா 2:11அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
கூற்றுகள்
- அவனுடைய குதிரைகள் கழுகுகளைவிட வேகமானவைஎரே 4:13
வசனங்கள்
எரே 4:13இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே.
- அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், இரவின் ஓநாய்களைவிடக் கொடூரமுமானவைஆப 1:8
வசனங்கள்
ஆப 1:8அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.
- குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படுகிறதுநீதி 21:31
வசனங்கள்
நீதி 21:31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.
- ஒரு சங்கீதம்: குதிரையின் மிகுந்த பலமும் காப்பாற்றாதுசங் 33:17
வசனங்கள்
சங் 33:17காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
- குதிரைக்குச் சவுக்கு, கழுதைக்குக் கடிவாளம்நீதி 26:3
வசனங்கள்
நீதி 26:3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
- கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ?ஆமோ 6:12
வசனங்கள்
ஆமோ 6:12கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.
- கால்நடையாய் ஓடுகிறவர்களோடு ஓடி இளைத்தால், குதிரைகளோடு எப்படிப் போட்டியிடுவாய்?எரே 12:5
வசனங்கள்
எரே 12:5நீ காலாட்களுடன் ஓடும்போதே உன்னை சோர்வடையச் செய்தார்களானால், குதிரைகளுடன் எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பெருகிவரும்போது நீ என்ன செய்வாய்?
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்