ஆராயுங்கள் › தலைப்புகள் › லீபனோனின் கேதுருக்கள்
இயற்கை
வேதாகமத்தில் லீபனோனின் கேதுருக்கள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 32 பகுதிகள், வரி வரியாக.
- லீபனோனிலுள்ள கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரையிலான மரங்களைக்குறித்துச் சாலொமோன் பேசினான்1 இராஜா 4:33
வசனங்கள்
1 இராஜா 4:33லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான்.
- ஒரு சங்கீதம்: லீபனோனின் கேதுருக்கள் திருப்தியடைகின்றனசங் 104:16
வசனங்கள்
சங் 104:16யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
- சாலொமோனின் நாட்களில் கேதுரு பள்ளத்தாக்கின் காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாக இருந்தது1 இராஜா 10:27, 2 நாளா 1:15
வசனங்கள்
1 இராஜா 10:27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
2 நாளா 1:15ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
- வெட்டப்பட்ட காட்டத்தி மரங்களுக்குப் பதிலாக மக்கள் கேதுருக்களை வைப்பார்கள்ஏசா 9:10
வசனங்கள்
ஏசா 9:10அகந்தையும், மனப்பெருமையுமாகச் சொல்கிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிமக்களுமாகிய எல்லா மக்களிடத்திற்கும் அது தெரியவரும்.
- லீபனோனின் ஒரு கேதுரு தீருவின் கப்பலுக்குப் பாய்மரமானதுஎசேக் 27:5
வசனங்கள்
எசேக் 27:5சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
- சுத்திகரிப்புச் சடங்குகளில் கேதுருமரம், ஈசோப்பு, சிவப்பு நூல் பயன்படுத்தப்பட்டனலேவி 14:4, எண் 19:6
வசனங்கள்
லேவி 14:4சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக.
எண் 19:6அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடவேண்டும்.
கேதுருவால் கட்டுதல்
- தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதின் அரண்மனைக்குக் கேதுரு மரங்களையும் தச்சர்களையும் கல்தச்சர்களையும் அனுப்பினான்2 சாமு 5:11
வசனங்கள்
2 சாமு 5:11தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
- தாவீது: நான் கேதுரு வீட்டில் வாழ்கிறேன், பெட்டியோ கூடாரத்தின் கீழ் இருக்கிறது1 நாளா 17:1
வசனங்கள்
1 நாளா 17:1தாவீது தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே தங்கியிருக்கிறேன்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
- சாலொமோன் ஈராமிடம் கேதுருக்களைக் கேட்டான்; சீதோனியரைப்போல மரம்வெட்டத் தெரிந்தவர் இல்லை1 இராஜா 5:6
வசனங்கள்
1 இராஜா 5:6ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுரு மரங்களை வெட்ட கட்டளை கொடும்; சீதோனியர்களைப்போல மரம்வெட்டும் வேலை தெரிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரர்களின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.
- மரங்கள் கடலுக்குக் கொண்டுவரப்பட்டு, தெப்பங்களாக மிதக்கவிடப்பட்டன1 இராஜா 5:8–9, 2 நாளா 2:16
வசனங்கள்
1 இராஜா 5:8–9ஈராம் சாலொமோனிடத்தில் செய்தி அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுரு மரங்களுக்காகவும், தேவதாரு மரங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கி மத்திய தரைக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
2 நாளா 2:16நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பாவரைக்கும் கொண்டுவருவோம்; பின்பு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
- ஈராமின் மரம்வெட்டிகளுக்குக் கோதுமை, வாற்கோதுமை, திராட்சைரசம், ஒலிவ எண்ணெய் கூலியாகக் கொடுக்கப்பட்டது2 நாளா 2:10
வசனங்கள்
2 நாளா 2:10அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரர்களுக்கு இருபதாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதாயிரம் குடம் திராட்சைரசத்தையும், இருபதாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
- 30,000 இஸ்ரவேலர் மாதம் 10,000 பேராக மாறிமாறி லீபனோனில் வேலை செய்தார்கள்1 இராஜா 5:13–14
வசனங்கள்
1 இராஜா 5:13–14ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் வேலைக்கு 30,000 கூலியில்லா வேலைக்காரர்களைப் பிடித்தான். அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் 10,000 பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த கூலியில்லா ஆட்களின்மேல் தலைவனாக இருந்தான்.
- கேதுருவுக்கும் தேவதாருவுக்கும் சாலொமோன் கலிலேயாவில் இருபது ஊர்களை ஈராமுக்குக் கொடுத்தான்1 இராஜா 9:11
வசனங்கள்
1 இராஜா 9:11தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள 20 பட்டணங்களைக் கொடுத்தான்.
- தேவாலயம் கேதுரு உத்திரங்களாலும் பலகைகளாலும் மூடப்பட்டது1 இராஜா 6:9–10
வசனங்கள்
1 இராஜா 6:9–10இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான். அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
- உள்ளே காட்டுக்கொடிகளும் பூக்களும் செதுக்கப்பட்ட கேதுரு; ஒரு கல்லும் காணப்படவில்லை1 இராஜா 6:15, 1 இராஜா 6:18
வசனங்கள்
1 இராஜா 6:15ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான்.
1 இராஜா 6:18ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாக இருந்தது.
- உள்முற்றம்: மூன்று வரிசை வெட்டின கற்களும் ஒரு வரிசை கேதுரு உத்திரங்களும்1 இராஜா 6:36
வசனங்கள்
1 இராஜா 6:36அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளாலும் கட்டினான்.
- லீபனோன் வனமாளிகை நான்கு வரிசை கேதுருத் தூண்களின்மேல் நின்றது1 இராஜா 7:2–3
வசனங்கள்
1 இராஜா 7:2–3அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது 900 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான். ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.
- திரும்பி வந்த சிறையிருப்பினர் லீபனோனிலிருந்து யோப்பாவுக்குக் கேதுரு மரங்களைக் கடல் வழியாகக் கொண்டுவந்தார்கள்எஸ்றா 3:7
வசனங்கள்
எஸ்றா 3:7அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்திரவின்படியே அவர்கள் கல்தச்சர்களுக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் மத்திய தரைக் கடல்வழியாக யோப்பாவரை கொண்டுவரச் சீதோனியர்களுக்கும் தீரியர்களுக்கும் உணவையும் தண்ணீரையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
- ஒரு ராஜா தன் அரண்மனையைக் கேதுருப் பலகையால் மூடி, சாதிலிங்கத்தால் பூசுகிறான்எரே 22:14
வசனங்கள்
எரே 22:14அநீதியினால் தன் வீட்டையும், அநியாயத்தினால் தன் மேலறைகளையும் கட்டி, தன் அந்நியன் செய்யும் வேலைக்குக் கூலிகொடுக்காமல், அவனைச் சும்மா வேலைவாங்குகிறவனுக்கு ஐயோ,
- நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருஉன்னத 1:17
வசனங்கள்
உன்னத 1:17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
கூற்றுகளும் உவமைக்கதைகளும்
- யோவாசின் உவமைக்கதை: ஒரு முட்செடி கேதுருவிடம் அதன் மகளைக் கேட்கிறது2 இராஜா 14:9
வசனங்கள்
2 இராஜா 14:9அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக திருமணம் செய்துகொடு என்று சொல்லச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே ஓடும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
- யோதாமின் உவமைக்கதை: முட்செடியிலிருந்து வரும் அக்கினி கேதுருக்களைப் பட்சிக்கும்நியா 9:15
வசனங்கள்
நியா 9:15அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்கிறது உண்மையானால், என்னுடைய நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும் என்றது.
- கேதுருக்களைப்போல உயரமும் கர்வாலி மரங்களைப்போலப் பலமுமுள்ள எமோரியன்ஆமோ 2:9
வசனங்கள்
ஆமோ 2:9நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,
- ஒரு சங்கீதம்: லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருங்கள்சங் 92:12
வசனங்கள்
சங் 92:12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
- யெகோவாவின் சத்தம் கேதுருக்களை முறிக்கிறதுசங் 29:5
வசனங்கள்
சங் 29:5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
- கேதுருக்களைப்போல மேன்மையானவர்உன்னத 5:15
வசனங்கள்
உன்னத 5:15அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
- கேதுருக்கள் மகிழ்கின்றன: மரம்வெட்டி எங்களுக்கு விரோதமாக வருவதில்லைஏசா 14:8
வசனங்கள்
ஏசா 14:8தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது.
- தேவதாருவே, அலறு; கேதுரு விழுந்ததுசகரி 11:2
வசனங்கள்
சகரி 11:2தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்