ஆராயுங்கள் › தலைப்புகள் › நரிகள்
இயற்கை
வேதாகமத்தில் நரிகள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 10 பகுதிகள், வரி வரியாக.
- நரிகளுக்குக் குழிகள் உண்டுமத் 8:20, லூக் 9:58
- சிம்சோன் 300 நரிகளைப் பிடித்து, இரண்டிரண்டு வால்களுக்கு நடுவே தீப்பந்தங்களைக் கட்டினான்நியா 15:4
வசனங்கள்
நியா 15:4புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி,
- நரிகள் பெலிஸ்தரின் தானியத்தையும் திராட்சைத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்தனநியா 15:5
வசனங்கள்
நியா 15:5பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தர்களின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சை தோட்டங்களையும் ஒலிவ தோப்புக்களையும் சுட்டெரித்துப்போட்டான்.
- திராட்சைத்தோட்டங்களைக் கெடுக்கும் குழிநரிகளையும் சிறுநரிகளையும் பிடியுங்கள்உன்னத 2:15
வசனங்கள்
உன்னத 2:15திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.
- தொபியா கேலிசெய்தான்: ஒரு நரி ஏறினாலும் அவர்களுடைய மதில் இடிந்துபோகும்நெகே 4:3
வசனங்கள்
நெகே 4:3அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
- பாழான சீயோன் மலை, அதில் நரிகள் திரிகின்றனபுலம் 5:18
வசனங்கள்
புலம் 5:18பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
- விழுந்தவர்கள் நரிகளுக்கு இரையாவார்கள்சங் 63:10
வசனங்கள்
சங் 63:10அவர்கள் வாளால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
கூற்றுகள்
- இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் பாழான இடங்களிலுள்ள நரிகளைப்போலஎசேக் 13:4
வசனங்கள்
எசேக் 13:4இஸ்ரவேலே, உன்னுடைய தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
- இயேசு ஏரோதை அந்த நரி என்கிறார்லூக் 13:31–32
வசனங்கள்
லூக் 13:31–32அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள். அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்