ஆராயுங்கள் › தலைப்புகள் › காகங்கள்
இயற்கை
வேதாகமத்தில் காகங்கள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 9 பகுதிகள், வரி வரியாக.
- இஸ்ரவேல் உண்ணக்கூடாத பறவைகளில் காகங்களும் உண்டுலேவி 11:15, உபா 14:14
- நோவா ஒரு காகத்தை வெளியே அனுப்பினான்; தண்ணீர் வற்றும்வரை அது போவதும் வருவதுமாக இருந்ததுஆதி 8:7
வசனங்கள்
ஆதி 8:7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
- கேரீத் ஆற்றருகே காகங்கள் காலையிலும் மாலையிலும் எலியாவுக்கு அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தன1 இராஜா 17:4–6
வசனங்கள்
1 இராஜா 17:4–6அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
- காகக்குஞ்சுகள் உணவில்லாமல் கதறுகின்றனயோபு 38:41, சங் 147:9
வசனங்கள்
யோபு 38:41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?
சங் 147:9அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
- காகங்கள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை, பண்டசாலையும் களஞ்சியமும் அவற்றுக்கு இல்லைலூக் 12:24
வசனங்கள்
லூக் 12:24காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
கூற்றுகள்
- காகத்தைப்போலக் கறுப்பான சுருள் தலைமயிர்உன்னத 5:11
வசனங்கள்
உன்னத 5:11அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
- ஒரு நீதிமொழி: பரியாசம்செய்யும் கண்ணைப் பள்ளத்தாக்கின் காகங்கள் பிடுங்கும்நீதி 30:17
வசனங்கள்
நீதி 30:17தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்