Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › மலைகள்

இயற்கை

வேதாகமத்தில் மலைகள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 41 பகுதிகள், வரி வரியாக.

  • உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கு அடைக்கலம்சங் 104:18
    வசனங்கள்
    சங் 104:18உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
  • எருசலேமைச் சுற்றிலும் மலைகள்சங் 125:2
    வசனங்கள்
    சங் 125:2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
  • செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ள தேசம்உபா 8:9
    வசனங்கள்
    உபா 8:9அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம்.
  • சுரங்கம் தோண்டுகிறவன் கன்மலையை உடைத்து மலைகளை வேரோடு புரட்டுகிறான்யோபு 28:9
    வசனங்கள்
    யோபு 28:9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
  • மலை கரைந்து இடிந்துவிழுகிறதுயோபு 14:18
    வசனங்கள்
    யோபு 14:18மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும்.
  • லீபனோனின் சிகரங்கள்: அமனா, சேனீர், எர்மோன், சிங்கங்களும் சிவிங்கிகளும் வாழும் குகைகள்உன்னத 4:8
    வசனங்கள்
    உன்னத 4:8லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் உச்சியிலிருந்தும், சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், சிங்கங்களின் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே இறங்கி வா.
  • சாலொமோனுக்கு மலைகளில் 80,000 கல்வெட்டிகள் இருந்தார்கள்1 இராஜா 5:15
    வசனங்கள்
    1 இராஜா 5:15சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் 70,000 பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் 80,000 பேர்களும்,
  • மீதியானியருக்குப் பயந்து இஸ்ரவேல் மலைகளிலும் குகைகளிலும் புகலிடங்களை உண்டாக்கியதுநியா 6:2
    வசனங்கள்
    நியா 6:2மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
  • மொட்டையான மலையுச்சியில் ஏற்றப்பட்ட கொடி ஒரு அடையாளமாக இருந்ததுஏசா 13:2, ஏசா 18:3
    வசனங்கள்
    ஏசா 13:2உயர்ந்த மலையின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு மக்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் நுழைவதற்குச் சைகை காட்டுங்கள்.
    ஏசா 18:3பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.
  • யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்மத் 24:16
    வசனங்கள்
    மத் 24:16யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
  • நிழலுள்ள மரங்களின் கீழ் மலையுச்சிகளிலுள்ள வழிபாட்டு மேடைகள்ஓசியா 4:13, உபா 12:2
    வசனங்கள்
    ஓசியா 4:13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள்.
    உபா 12:2நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

வரலாறுகளில் மலைகள்

  • பேழை அரராத் மலைகளின்மேல் தங்கியதுஆதி 8:4
    வசனங்கள்
    ஆதி 8:4ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
  • பத்தாம் மாதம் முதல் தேதியில் மலைகளின் சிகரங்கள் தெரிந்தனஆதி 8:5
    வசனங்கள்
    ஆதி 8:5பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
  • மோரியா தேசத்திலுள்ள ஒரு மலைக்கு ஆபிரகாம் அனுப்பப்பட்டான்ஆதி 22:2
    வசனங்கள்
    ஆதி 22:2அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார்.
  • மோசே மந்தையோடு தேவனுடைய பர்வதமாகிய ஓரேபுக்கு வந்தான்யாத் 3:1
    வசனங்கள்
    யாத் 3:1மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான்.
  • சீனாய் மலையைத் தொடாதபடி மக்களுக்கு எல்லை குறிக்கப்பட்டதுயாத் 19:12
    வசனங்கள்
    யாத் 19:12மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
  • சீனாய் சூளையைப்போலப் புகைந்து மிகவும் அதிர்ந்ததுயாத் 19:18
    வசனங்கள்
    யாத் 19:18யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
  • மோசே நாற்பது பகலும் நாற்பது இரவும் மலையில் இருந்தான்யாத் 24:18
    வசனங்கள்
    யாத் 24:18மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
  • ஆரோன் ஓர் மலையின் உச்சியில் மரித்தான்எண் 20:27–28
    வசனங்கள்
    எண் 20:27–28யெகோவா கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லோரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். அங்கே ஆரோன் உடுத்தியிருந்த ஆடைகளை மோசே கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே இறந்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.
  • பிஸ்காவின் உச்சியிலுள்ள நேபோ மலையிலிருந்து மோசே தேசத்தைக் கண்டான்உபா 34:1
    வசனங்கள்
    உபா 34:1பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது யெகோவா அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
  • ஆறு கோத்திரங்கள் கெரிசீம் மலையிலும் ஆறு கோத்திரங்கள் ஏபால் மலையிலும் நின்றனஉபா 27:12–13
    வசனங்கள்
    உபா 27:12–13“நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
  • யோதாம் கெரிசீம் மலையின் உச்சியிலிருந்து தன் உவமைக்கதையைச் சத்தமிட்டுச் சொன்னான்நியா 9:7
    வசனங்கள்
    நியா 9:7இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனிதர்களே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
  • பாராக் தாபோர் மலையில் பத்தாயிரம் பேரைக் கூட்டினான்நியா 4:6
    வசனங்கள்
    நியா 4:6அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் 10,000 பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும்,
  • ஒரே மலையின் இருபுறங்களிலும் சவுலும் தாவீதும்1 சாமு 23:26
    வசனங்கள்
    1 சாமு 23:26சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள்.
  • சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையில் விழுந்தார்கள்1 சாமு 31:8
    வசனங்கள்
    1 சாமு 31:8வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,
  • எலியா கர்மேல் மலையில் இஸ்ரவேலையும் பாகாலின் தீர்க்கதரிசிகளையும் கூட்டினான்1 இராஜா 18:19–20
    வசனங்கள்
    1 இராஜா 18:19–20இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்புவிக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் 400 பேரையும் என்னிடம் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
  • கர்மேலின் உச்சியில் எலியா தன் முகத்தைத் தன் முழங்கால்களுக்கு நடுவே வைத்தான்1 இராஜா 18:42
    வசனங்கள்
    1 இராஜா 18:42ஆகாப் சாப்பிட்டு குடிக்கப்போனான்; பின்பு எலியா கர்மேல் மலையிலுள்ள சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்னுடைய முகம் தன்னுடைய முழங்காலில் படும்படிக்குனிந்து,
  • சமாரியப் பெண்: எங்கள் பிதாக்கள் இந்த மலையில் ஆராதித்தார்கள்யோவா 4:20
    வசனங்கள்
    யோவா 4:20எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
  • இயேசு மலையின்மேல் ஏறி, உட்கார்ந்து போதித்தார்மத் 5:1
    வசனங்கள்
    மத் 5:1இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
  • இயேசு ஜெபிக்கத் தனியாக மலையின்மேல் ஏறினார்மத் 14:23, லூக் 6:12
    வசனங்கள்
    மத் 14:23அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.
    லூக் 6:12அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
  • உயர்ந்த மலையின்மேல் இயேசு மறுரூபமானார்மத் 17:1–2
    வசனங்கள்
    மத் 17:1–2ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.
  • நாசரேத் செங்குத்தான விளிம்புள்ள மலையின்மேல் இருந்ததுலூக் 4:29
    வசனங்கள்
    லூக் 4:29எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
  • இயேசு சாயங்காலங்களை ஒலிவமலையில் கழித்தார்லூக் 21:37
    வசனங்கள்
    லூக் 21:37அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
  • ஒலிவமலை: எருசலேமிலிருந்து ஓய்வுநாள் பயண தூரம்அப் 1:12
    வசனங்கள்
    அப் 1:12அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

கூற்றுகள்

  • மலைகளுக்குள்ளே தாபோரைப்போலவும் கடலருகே கர்மேலைப்போலவும்எரே 46:18
    வசனங்கள்
    எரே 46:18மலைகளில் தாபோரும், மத்திய தரைக் கடலின் அருகே கர்மேலும் இருக்கிறதுபோல அவன் கண்டிப்பாக வருவானென்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா தம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறார்.
  • இந்த மலையைப் பெயர்ந்துபோ என்று சொல்லக்கூடிய விசுவாசம்மத் 17:20, மத் 21:21
    வசனங்கள்
    மத் 17:20அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத் 21:21இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  • மலைகளுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்சங் 121:1
    வசனங்கள்
    சங் 121:1ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்