ஆராயுங்கள் › தலைப்புகள் › கழுகுகள்
இயற்கை
வேதாகமத்தில் கழுகுகள்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 20 பகுதிகள், வரி வரியாக.
- இஸ்ரவேல் உண்ணக்கூடாத பறவைகளில் கழுகும் ஒன்றுலேவி 11:13, உபா 14:12
வசனங்கள்
லேவி 11:13“பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
உபா 14:12நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
- கழுகு உயரமான பாறையின்மேல், கன்மலையின் சிகரத்தில் கூடுகட்டுகிறதுயோபு 39:27–28
வசனங்கள்
யோபு 39:27–28உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும்.
- அங்கிருந்து அது இரையைத் தேடுகிறது; அதன் கண்கள் தூரத்திலிருந்து அதைக் காண்கின்றனயோபு 39:29
வசனங்கள்
யோபு 39:29அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
- அதன் குஞ்சுகள் இரத்தம் உறிஞ்சுகின்றன; வெட்டுண்டவர்கள் எங்கேயோ அங்கே அது இருக்கிறதுயோபு 39:30
வசனங்கள்
யோபு 39:30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.
- கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் வட்டமிடுகிறதுஉபா 32:11
வசனங்கள்
உபா 32:11கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
- கழுகு தன் இரையின்மேல் பாய்கிறதுயோபு 9:26, எரே 49:22
வசனங்கள்
யோபு 9:26அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
எரே 49:22இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் இறக்கைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளில் ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.
- ஆகாயத்தில் கழுகின் வழி — மிகவும் ஆச்சரியமான நான்கு காரியங்களில் ஒன்றுநீதி 30:18–19
வசனங்கள்
நீதி 30:18–19எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
கூற்றுகள்
- கழுகுகளைவிட வேகமானவர்கள்: சவுலும் யோனத்தானும், துரத்துகிறவர்களும், குதிரைகளும்2 சாமு 1:23, புலம் 4:19, எரே 4:13
வசனங்கள்
2 சாமு 1:23உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள்.
புலம் 4:19எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்; மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.
எரே 4:13இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே.
- சீனாயில்: கழுகுகளின் சிறகுகளின்மேல் உங்களைச் சுமந்தேன்யாத் 19:4
வசனங்கள்
யாத் 19:4நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
- கழுகைப்போலப் பாய்ந்துவரும் தூரத்திலுள்ள ஜாதிஉபா 28:49
வசனங்கள்
உபா 28:49முதியவன் என்று பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
- துக்கத்தில்: கழுகைப்போல உங்களை மொட்டையாக்கிக்கொள்ளுங்கள்மீகா 1:16
வசனங்கள்
மீகா 1:16உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.
- செல்வம் தனக்குச் சிறகுகளை உண்டாக்கி, கழுகைப்போல வானத்திற்குப் பறந்துபோகும்நீதி 23:5
வசனங்கள்
நீதி 23:5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும்.
- உன் இளமை கழுகைப்போலப் புதிதாகிறதுசங் 103:5
வசனங்கள்
சங் 103:5நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
- அவர்கள் கழுகுகளைப்போலச் சிறகுகளை அடித்து எழும்புவார்கள்ஏசா 40:31
வசனங்கள்
ஏசா 40:31யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
- நீ கழுகைப்போல உன் கூட்டை உயர்த்தினாலும்எரே 49:16, ஒபதி 1:4
வசனங்கள்
எரே 49:16கன்மலை வெடிப்புகளில் குடியிருந்து, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது; நீ கழுகைப்போல உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ஒபதி 1:4நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்