Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › வெள்ளாடுகள்

இயற்கை

வேதாகமத்தில் வெள்ளாடுகள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 34 பகுதிகள், வரி வரியாக.

  • இஸ்ரவேல் உண்ணக்கூடிய மிருகங்களில் வெள்ளாடுகளும் உண்டுஉபா 14:4
    வசனங்கள்
    உபா 14:4நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
  • ரெபெக்காள் இரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளால் ஈசாக்குக்குப் பிடித்த உணவைச் சமைத்தாள்ஆதி 27:9
    வசனங்கள்
    ஆதி 27:9நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள உணவுகளாகச் சமைப்பேன்.
  • ஏசாவைப்போல உணரும்படி யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் வெள்ளாட்டுத் தோல்கள்ஆதி 27:16
    வசனங்கள்
    ஆதி 27:16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு;
  • யோசேப்பின் சகோதரர்கள் அவனுடைய அங்கியை வெள்ளாட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்தார்கள்ஆதி 37:31
    வசனங்கள்
    ஆதி 37:31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து,
  • யூதா தன் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கூலியாகத் தருவதாகச் சொன்னான்ஆதி 38:17, ஆதி 38:20
    வசனங்கள்
    ஆதி 38:17அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன்” என்றான். அதற்கு அவள்: “நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா” என்றாள்.
    ஆதி 38:20யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
  • ஏசாவுக்கு யாக்கோபு கொடுத்த வெகுமதியில் 200 பெண் வெள்ளாடுகளும் 20 வெள்ளாட்டுக்கடாக்களும்ஆதி 32:14
    வசனங்கள்
    ஆதி 32:14இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
  • கிதியோன் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைச் சமைத்தான்: இறைச்சி கூடையில், குழம்பு பானையில்நியா 6:19
    வசனங்கள்
    நியா 6:19உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான்.
  • மனோவா ஒரு கன்மலையின்மேல் வெள்ளாட்டுக்குட்டியைச் செலுத்தினான்நியா 13:19
    வசனங்கள்
    நியா 13:19மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் யெகோவாவுக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதிசயம் வெளிப்பட்டது.
  • ஈசாய் தாவீதோடு அப்பத்தையும் ஒரு துருத்தி திராட்சைரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் சவுலுக்கு அனுப்பினான்1 சாமு 16:20
    வசனங்கள்
    1 சாமு 16:20அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான்.
  • கர்மேலின் நாபாலுக்கு ஆயிரம் வெள்ளாடுகள் இருந்தன1 சாமு 25:2
    வசனங்கள்
    1 சாமு 25:2மாகோனிலே ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனிதன் பெரும் செல்வந்தனாக இருந்தான்; அவனுக்கு 3,000 ஆடும், 1,000 வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
  • மூத்த சகோதரன்: எனக்கு ஒரு வெள்ளாட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லைலூக் 15:29
    வசனங்கள்
    லூக் 15:29அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
  • வீட்டாருக்கு உணவளிக்கப் போதுமான வெள்ளாட்டுப்பால்நீதி 27:27
    வசனங்கள்
    நீதி 27:27வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், உன் வீட்டாரின் உணவுக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.
  • வெள்ளாடுகள் ஒரு வயலின் விலையைக் கொடுக்கும்நீதி 27:26
    வசனங்கள்
    நீதி 27:26ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

வெள்ளாட்டு மயிர்

  • ஆசரிப்புக் கூடாரத்தின்மேலுள்ள கூடாரத்தைப் பதினொரு வெள்ளாட்டுமயிர்த் திரைகள் உண்டாக்கினயாத் 26:7, யாத் 36:14
    வசனங்கள்
    யாத் 26:7“ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு.
    யாத் 36:14ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.
  • திறமையுள்ள பெண்கள் வெள்ளாட்டு மயிரை நூற்றார்கள்யாத் 35:26
    வசனங்கள்
    யாத் 35:26எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
  • தாவீதின் படுக்கையில் வைத்த சிலையின்மேல் மீகாள் வெள்ளாட்டு மயிரைப் போட்டாள்1 சாமு 19:13
    வசனங்கள்
    1 சாமு 19:13மீகாளோ ஒரு சிலையை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, போர்வையினால் மூடி வைத்தாள்.
  • மீதியானியரோடு போருக்குப் பின் வெள்ளாட்டு மயிரால் செய்த எல்லாம் சுத்திகரிக்கப்பட்டதுஎண் 31:20
    வசனங்கள்
    எண் 31:20அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.

நியாயப்பிரமாணத்தில்

  • பஸ்கா ஆட்டுக்குட்டியைச் செம்மறியாடுகளிலிருந்தோ வெள்ளாடுகளிலிருந்தோ எடுக்கலாம்யாத் 12:5
    வசனங்கள்
    யாத் 12:5அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • யோசியா பஸ்காவுக்கு 30,000 ஆட்டுக்குட்டிகளையும் வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொடுத்தான்2 நாளா 35:7
    வசனங்கள்
    2 நாளா 35:7வந்திருந்த மக்கள் எல்லோருக்கும், அவர்கள் எண்ணிக்கையின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய செல்வத்திலிருந்து கொடுத்தான்.
  • புதிதாகப் பிறந்த குட்டி ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்கும்லேவி 22:27
    வசனங்கள்
    லேவி 22:27“ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும்.
  • வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்காதேயாத் 23:19
    வசனங்கள்
    யாத் 23:19உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.
  • பாவநிவிர்த்தி நாள்: இரண்டு வெள்ளாடுகளுக்குச் சீட்டு; ஒன்று வனாந்திரத்திற்கு விடப்படுகிறதுலேவி 16:8–10, லேவி 16:21–22
    வசனங்கள்
    லேவி 16:8–10அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
    லேவி 16:21–22அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக. அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.

வரையாடுகள்

  • உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கு அடைக்கலம்சங் 104:18
    வசனங்கள்
    சங் 104:18உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
  • சவுல் வரையாடுகளுள்ள கன்மலைகளினருகே தாவீதைத் தேடினான்1 சாமு 24:2
    வசனங்கள்
    1 சாமு 24:2அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
  • வரையாடுகள் ஈனும் காலத்தை அறிவாயோ?யோபு 39:1
    வசனங்கள்
    யோபு 39:1“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
  • காட்டு வெள்ளாடும் வரையாடும் உண்ணப்படலாம்உபா 14:5
    வசனங்கள்
    உபா 14:5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே.

கூற்றுகள்

  • கீலேயாத் மலையிலிருந்து இறங்கும் வெள்ளாட்டு மந்தையைப்போலத் தலைமயிர்உன்னத 4:1, உன்னத 6:5
    வசனங்கள்
    உன்னத 4:1நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.
    உன்னத 6:5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் கருமையான கூந்தல் கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
  • அழகாக நடக்கும் காரியங்களில் ஒன்று வெள்ளாட்டுக்கடாநீதி 30:29–31
    வசனங்கள்
    நீதி 30:29–31விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
  • மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோலமத் 25:32
    வசனங்கள்
    மத் 25:32அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
  • வெள்ளாட்டுக்குட்டியைக் கிழிப்பதுபோல சிம்சோன் சிங்கத்தைக் கிழித்தான்நியா 14:6
    வசனங்கள்
    நியா 14:6அப்பொழுது யெகோவாவுடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன்னுடைய கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன்னுடைய தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்