ஆராயுங்கள் › தலைப்புகள் › சோம்பல்
அன்றாட வாழ்க்கை
வேதாகமத்தில் சோம்பல்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 26 பகுதிகள், வரி வரியாக.
நீதிமொழிகளில் உள்ள கூற்றுகள்
- சோம்பேறியே, எறும்பினிடத்தில் போ: அது கோடைகாலத்தில் உணவைச் சேர்க்கிறதுநீதி 6:6–8
வசனங்கள்
நீதி 6:6–8சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
- கொஞ்சம் தூக்கம்; தரித்திரம் வழிப்போக்கனைப்போல வரும்நீதி 6:9–11
வசனங்கள்
நீதி 6:9–11சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
- சோம்பேறியின் வயல்: முட்களும் காஞ்சொறிகளும் இடிந்த கல்மதிலும்நீதி 24:30–34
வசனங்கள்
நீதி 24:30–34சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது. அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
- சோம்பலான கை தரித்திரனாக்கும்நீதி 10:4
வசனங்கள்
நீதி 10:4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
- அறுவடைக்காலத்தில் தூங்குகிறவன் வெட்கத்தை உண்டாக்கும் மகன்நீதி 10:5
வசனங்கள்
நீதி 10:5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
- பற்களுக்குக் காடியும் கண்களுக்குப் புகையும் போலநீதி 10:26
வசனங்கள்
நீதி 10:26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
- சோம்பல் கட்டாய வேலையில் முடியும்நீதி 12:24
வசனங்கள்
நீதி 12:24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
- சோம்பேறி தான் வேட்டையாடியதை வாட்டுவதில்லைநீதி 12:27
வசனங்கள்
நீதி 12:27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
- சோம்பேறி ஆசைப்படுகிறான், ஆனாலும் ஒன்றும் கிடைப்பதில்லைநீதி 13:4, நீதி 21:25
வசனங்கள்
நீதி 13:4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;
நீதி 21:25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.
- சோம்பேறியின் வழி முள்வேலியைப்போல இருக்கிறதுநீதி 15:19
வசனங்கள்
நீதி 15:19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
- வேலையில் அசதியாக இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன்நீதி 18:9
வசனங்கள்
நீதி 18:9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
- அவன் தன் கையைத் தட்டில் புதைக்கிறான்; அதை வாய்க்குக் கொண்டுபோகவும் மாட்டான்நீதி 19:24, நீதி 26:15
வசனங்கள்
நீதி 19:24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
நீதி 26:15சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
- அவன் காலத்தில் உழுவதில்லை; அறுவடையில் ஒன்றும் காண்பதில்லைநீதி 20:4
வசனங்கள்
நீதி 20:4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
- வெளியே சிங்கம் இருக்கிறது!நீதி 22:13, நீதி 26:13
வசனங்கள்
நீதி 22:13வெளியிலே சிங்கம், வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
நீதி 26:13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
- கதவு கீலின்மேல் திரும்புவதுபோல சோம்பேறி தன் படுக்கையில் புரளுகிறான்நீதி 26:14
வசனங்கள்
நீதி 26:14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
- விவேகமாகப் பதில் சொல்லும் ஏழு பேரைவிடத் தன்னை ஞானியாக எண்ணுகிறான்நீதி 26:16
வசனங்கள்
நீதி 26:16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
மற்ற இடங்களில்
- சோம்பலினால் மேல்தளம் இடிந்து வீடு ஒழுகுகிறதுபிரச 10:18
வசனங்கள்
பிரச 10:18மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
- மூடன் தன் கைகளை முடக்கிக்கொள்கிறான்பிரச 4:5
வசனங்கள்
பிரச 4:5மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
- தன் தாலந்தைப் புதைத்த வேலைக்காரன் சோம்பேறி என்று அழைக்கப்படுகிறான்மத் 25:26
வசனங்கள்
மத் 25:26அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
- உங்கள் ஜாக்கிரதையில் தளர்ந்துபோகாதிருங்கள்ரோமர் 12:11
வசனங்கள்
ரோமர் 12:11அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
- ஒருவன் வேலைசெய்ய மனமில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது2 தெச 3:10–12
வசனங்கள்
2 தெச 3:10–12ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
- இளம் விதவைகள் வீடு வீடாகத் திரிந்து சோம்பலாயிருக்கப் பழகுகிறார்கள்1 தீமோ 5:13
வசனங்கள்
1 தீமோ 5:13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
- அசதியாக இருக்காதீர்கள்எபி 6:12
வசனங்கள்
எபி 6:12உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்