ஆராயுங்கள் › தலைப்புகள் › வேட்டையும் கண்ணியும்
அன்றாட வாழ்க்கை
வேதாகமத்தில் வேட்டையும் கண்ணியும்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 14 பகுதிகள், வரி வரியாக.
- நிம்ரோத், யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரன்ஆதி 10:9
வசனங்கள்
ஆதி 10:9இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.
- இஸ்மவேல் வனாந்திரத்தில் வளர்ந்து பெரிய வில்வீரனாகிறான்ஆதி 21:20
வசனங்கள்
ஆதி 21:20தேவன் சிறுவனுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்திரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
- ஏசா திறமையான வேட்டைக்காரனும் வெளியிலே திரிகிறவனுமாகிறான்ஆதி 25:27
வசனங்கள்
ஆதி 25:27இந்தக் குழந்தைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும், காட்டில் வாழ்கிறவனாகவும் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாக இருந்தான்.
- ஈசாக்கு வேட்டையிறைச்சியை விரும்பி ஏசாவை நேசிக்கிறான்ஆதி 25:28
வசனங்கள்
ஆதி 25:28ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள்.
- ஈசாக்கு ஏசாவை அம்பறாத்தூணியோடும் வில்லோடும் வேட்டையாட அனுப்புகிறான்ஆதி 27:3–5
வசனங்கள்
ஆதி 27:3–5ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்புகளை வைக்கும் பையையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள உணவுகளாகச் சமைத்து, நான் சாப்பிடவும், நான் இறப்பதற்குமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா” என்றான். ஈசாக்கு தன் மகனாகிய ஏசாவோடு பேசும்போது, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவர காட்டுக்குப் போனான்.
- ஆசீர்வாதத்திற்குத் தாமதமாக ஏசா வேட்டையிலிருந்து திரும்புகிறான்ஆதி 27:30–33
வசனங்கள்
ஆதி 27:30–33ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: “உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான். அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: “நீ யார்” என்றான்; அதற்கு அவன்: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்றான். அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: “வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.
நியாயப்பிரமாணத்தில்
- வேட்டையாடிய மிருகத்தின் இரத்தம் வடிக்கப்பட்டு மண்ணால் மூடப்படுகிறதுலேவி 17:13
வசனங்கள்
லேவி 17:13“இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும்.
கண்ணிகளும் வலைகளும்
- வலை, கண்ணி, பொறி, சுருக்கு, நிலத்தில் மறைத்த கயிறுயோபு 18:8–10
வசனங்கள்
யோபு 18:8–10அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான். கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
- வலையில் அகப்பட்ட கலைமான்ஏசா 51:20
வசனங்கள்
ஏசா 51:20உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
- வேடர்கள் பதுங்கியிருந்து பொறிகளை வைக்கிறார்கள்எரே 5:26
வசனங்கள்
எரே 5:26குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனிதரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் மக்களில் காணப்படுகிறார்கள்.
- வழியருகே வலையின் கயிறுகள் விரிக்கப்பட்டு, சுருக்குகள் வைக்கப்பட்டுள்ளனசங் 140:5
வசனங்கள்
சங் 140:5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
ஒப்புமைகள்
- தாவீது: மலைகளில் கவுதாரியை வேட்டையாடுகிறவனைப்போல1 சாமு 26:20
வசனங்கள்
1 சாமு 26:20இப்போதும் யெகோவாவுடைய சமுகத்தில் என்னுடைய இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.
- என் பகைவர்கள் என்னைப் பறவையைப்போல வேட்டையாடினார்கள்புலம் 3:52
வசனங்கள்
புலம் 3:52காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
- வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிக்கப்படுதல்சங் 91:3
வசனங்கள்
சங் 91:3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்