ஆராயுங்கள் › தலைப்புகள் › தூக்கம்
அன்றாட வாழ்க்கை
வேதாகமத்தில் தூக்கம்
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 34 பகுதிகள், வரி வரியாக.
கூற்றுகள்
- அவர் தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்சங் 127:2
வசனங்கள்
சங் 127:2யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
- சமாதானத்தோடே படுத்துத் தூங்குவேன்சங் 4:8, சங் 3:5
- நீ படுக்கும்போது உன் தூக்கம் இன்பமாக இருக்கும்நீதி 3:24
வசனங்கள்
நீதி 3:24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
- உழைப்பாளியின் தூக்கம் இனிது; செல்வந்தனின் நிறைவு அவனைத் தூங்கவிடாதுபிரச 5:12
வசனங்கள்
பிரச 5:12வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது.
- தூக்கத்தை விரும்பாதே, இல்லாவிட்டால் தரித்திரனாவாய்நீதி 20:13
வசனங்கள்
நீதி 20:13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
- இன்னும் கொஞ்சம் தூக்கம், கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் கைமுடக்கம்நீதி 6:9–10, நீதி 24:33
வசனங்கள்
நீதி 6:9–10சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
நீதி 24:33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
- சோம்பல் அயர்ந்த தூக்கத்தை வருவிக்கும்நீதி 19:15
வசனங்கள்
நீதி 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
- இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லைசங் 121:4
வசனங்கள்
சங் 121:4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
- எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கேலிசெய்கிறான்: ஒருவேளை அவன் தூங்குகிறான்1 இராஜா 18:27
வசனங்கள்
1 இராஜா 18:27மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
- ஒரு பொருத்தனை: யெகோவாவுக்கு ஒரு வாசஸ்தலம் கிடைக்கும்வரை தூக்கம் இல்லைசங் 132:3–5
வசனங்கள்
சங் 132:3–5என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.
எடுத்துக்காட்டுகள்
- ஆதாம் அயர்ந்த தூக்கத்தில் ஆழ்கிறான்ஆதி 2:21
வசனங்கள்
ஆதி 2:21அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
- சூரியன் மறையும்போது ஆபிராம் அயர்ந்த தூக்கத்தில் ஆழ்கிறான்ஆதி 15:12
வசனங்கள்
ஆதி 15:12சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.
- யாக்கோபு தலைக்குக் கீழே ஒரு கல்லை வைத்துத் தூங்குகிறான்ஆதி 28:11
வசனங்கள்
ஆதி 28:11ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான்.
- யாக்கோபு: இரவில் குளிர், என் கண்களுக்குத் தூக்கம் இல்லைஆதி 31:40
வசனங்கள்
ஆதி 31:40பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.
- களைப்பால் தூங்கும் சிசெராவை யாகேல் கொல்கிறாள்நியா 4:21
வசனங்கள்
நியா 4:21பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துபோனான்.
- தெலீலாள் சிம்சோனைத் தன் மடியில் தூங்கவைக்கிறாள்நியா 16:19
வசனங்கள்
நியா 16:19அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.
- போவாஸ் தானியக் குவியலருகே தூங்குகிறான்; நடுராத்திரியில் ரூத்தைக் காண்கிறான்ரூத் 3:7–8
வசனங்கள்
ரூத் 3:7–8போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள். நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
- தூங்கும் சவுலிடமிருந்து தாவீது ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுக்கிறான்1 சாமு 26:7, 1 சாமு 26:12
வசனங்கள்
1 சாமு 26:7அப்படியே தாவீதும் அபிசாயும் இரவிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்; அவனுடைய தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் மக்களும் படுத்திருந்தார்கள்.
1 சாமு 26:12தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; யெகோவா அவர்களுக்கு அயர்ந்த தூக்கத்தை வரச்செய்ததால், அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள்.
- மத்தியான ஓய்வின்போது இஸ்போசேத் கொல்லப்படுகிறான்2 சாமு 4:5
வசனங்கள்
2 சாமு 4:5பேரோத்தியனான அந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் நண்பகல் வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து,
- எலியா ஒரு சூரைச்செடியின் கீழ் தூங்கிவிடுகிறான்1 இராஜா 19:5
வசனங்கள்
1 இராஜா 19:5ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான்.
- தூக்கம் வராத அகாஸ்வேரு ராஜ்யத்தின் நாளாகமப் புஸ்தகத்தை வாசிக்கச் செய்கிறான்எஸ்த 6:1
வசனங்கள்
எஸ்த 6:1அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
- நேபுகாத்நேச்சாரின் சொப்பனங்கள்: அவனுக்குத் தூக்கம் கலைந்ததுதானி 2:1
வசனங்கள்
தானி 2:1நேபுகாத்நேச்சார் ஆட்சிசெய்யும் இரண்டாம் வருடத்திலே, நேபுகாத்நேச்சார் கனவுகளைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய தூக்கம் கலைந்தது.
- தானியேல் சிங்கங்களோடு இருக்கும்போது தரியுவுக்குத் தூக்கம் வரவில்லைதானி 6:18
வசனங்கள்
தானி 6:18பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது.
- புயலின்போது யோனா கப்பலின் கீழ்த்தளத்தில் தூங்குகிறான்யோனா 1:5
வசனங்கள்
யோனா 1:5அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
- புயலின்போது இயேசு படகின் பின்பக்கத்தில் தலையணையின்மேல் தூங்குகிறார்மத் 8:24, மாற் 4:38, லூக் 8:23
வசனங்கள்
மத் 8:24அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
மாற் 4:38இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
லூக் 8:23படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
- கெத்செமனேயில் சீடர்கள் தூங்கிவிடுகிறார்கள்மத் 26:40–43, லூக் 22:45
வசனங்கள்
மத் 26:40–43பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
லூக் 22:45அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:
- சிறையில் இரண்டு படைவீரர்களுக்கு நடுவே பேதுரு தூங்குகிறான்அப் 12:6
வசனங்கள்
அப் 12:6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
- பவுல் பேசிக்கொண்டிருக்கும்போது ஐத்திகு அயர்ந்து ஜன்னலிலிருந்து விழுகிறான்அப் 20:9
வசனங்கள்
அப் 20:9அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன் தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்