Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › வியாபாரமும் வியாபாரிகளும்

அன்றாட வாழ்க்கை

வேதாகமத்தில் வியாபாரமும் வியாபாரிகளும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 37 பகுதிகள், வரி வரியாக.

  • ஆபிரகாம் வியாபாரிகளிடத்தில் செல்லும் கணக்கின்படி வெள்ளியை நிறுத்துக் கொடுக்கிறான்ஆதி 23:16
    வசனங்கள்
    ஆதி 23:16அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான 400 சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான்.
  • இஸ்மவேலரின் ஒட்டகக் கூட்டம் கந்தவர்க்கம், பிசின் தைலம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை எகிப்துக்குக் கொண்டுபோகிறதுஆதி 37:25
    வசனங்கள்
    ஆதி 37:25பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.
  • யோசேப்பு இருபது வெள்ளிக்காசுக்கு வியாபாரிகளிடம் விற்கப்படுகிறான்ஆதி 37:28, ஆதி 37:36
    வசனங்கள்
    ஆதி 37:28அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
    ஆதி 37:36அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
  • ஈராம் கேதுருவும் தேவதாருவும் அனுப்புகிறான்; சாலொமோன் கோதுமையும் ஒலிவ எண்ணெயும் கொடுக்கிறான்1 இராஜா 5:8–11, 2 நாளா 2:15
    வசனங்கள்
    1 இராஜா 5:8–11ஈராம் சாலொமோனிடத்தில் செய்தி அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுரு மரங்களுக்காகவும், தேவதாரு மரங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கி மத்திய தரைக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான். அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான். சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக 20,000 கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான்.
    2 நாளா 2:15என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சைரசத்தையும் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அனுப்புவாராக.
  • சாலொமோனின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து 420 தாலந்து பொன் கொண்டுவருகின்றன1 இராஜா 9:26–28
    வசனங்கள்
    1 இராஜா 9:26–28ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான். அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான். அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.
  • வியாபாரிகளிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் சாலொமோனுக்கு வருமானம் வருகிறது1 இராஜா 10:15, 2 நாளா 9:14
    வசனங்கள்
    1 இராஜா 10:15ஒவ்வொரு வருடத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாக இருந்தது.
    2 நாளா 9:14அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
  • எலிமெலேக்குக்கு உரிய நிலத்தை நகோமி விற்கிறாள்ரூத் 4:3
    வசனங்கள்
    ரூத் 4:3அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
  • பொற்கொல்லரும் வியாபாரிகளும் எருசலேம் மதிலின் ஒரு பகுதியைப் பழுதுபார்க்கிறார்கள்நெகே 3:32
    வசனங்கள்
    நெகே 3:32கடைசிமுனையின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பொற்கொல்லர்களும் வியாபாரிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
  • தீருவின் மனிதர்கள் ஓய்வுநாளில் எருசலேமில் மீன் விற்கிறார்கள்நெகே 13:16
    வசனங்கள்
    நெகே 13:16மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா மக்களுக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரு பட்டணத்தார்களும் உள்ளே குடியிருந்தார்கள்.
  • நெகேமியா வாசல்களை அடைக்கிறான்; வியாபாரிகள் பட்டணத்திற்கு வெளியே இரவு தங்குகிறார்கள்நெகே 13:19–20
    வசனங்கள்
    நெகே 13:19–20ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமறையும்போது, கதவுகளைப் பூட்டவும் ஓய்வுநாள் முடியும்வரை அவைகளைத் திறக்காமல் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராமல் வாசலருகில் என்னுடைய வேலைக்காரர்களில் சிலரை நிறுத்தினேன். அதனால் வர்த்தகர்களும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும் இரண்டொருமுறை எருசலேமுக்கு வெளியே இரவுதங்கினார்கள்.
  • திறமையுள்ள மனைவி நிலத்தை வாங்கி, மெல்லிய புடவைகளை விற்கிறாள்நீதி 31:16, நீதி 31:24
    வசனங்கள்
    நீதி 31:16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
    நீதி 31:24மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
  • பவுலின் கப்பல் தீருவில் தன் சரக்கை இறக்குகிறதுஅப் 21:2–3
    வசனங்கள்
    அப் 21:2–3அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம். சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது.
  • தியத்தீரா ஊரைச்சேர்ந்த சிவப்புக் கம்பள வியாபாரியாகிய லீதியாள்அப் 16:14
    வசனங்கள்
    அப் 16:14அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார்.
  • தேவாலய முற்றங்களில் காசுக்காரர்களும் புறா விற்பவர்களும்யோவா 2:14
    வசனங்கள்
    யோவா 2:14தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து,
  • ஒரு வியாபாரி விலையுயர்ந்த ஒரு முத்துக்காகத் தனக்குள்ள எல்லாவற்றையும் விற்கிறான் (உவமை)மத் 13:45–46
    வசனங்கள்
    மத் 13:45–46மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
  • வியாபாரம் செய்ய வேலைக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது (உவமை)லூக் 19:13, மத் 25:16
    வசனங்கள்
    லூக் 19:13புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.
    மத் 25:16ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
  • இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய் வியாபாரம் செய்வோம் என்கிறவர்கள்யாக் 4:13
    வசனங்கள்
    யாக் 4:13மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.

தீருவோடு வியாபாரம் (எசேக்கியேல் 27)

  • தர்ஷீஸ்: வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம்எசேக் 27:12
    வசனங்கள்
    எசேக் 27:12எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள்.
  • யாவான், தூபால், மேசேக்: அடிமைகளும் வெண்கலப் பாத்திரங்களும்எசேக் 27:13
    வசனங்கள்
    எசேக் 27:13யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
  • தொகர்மா: குதிரைகள், போர்க்குதிரைகள், கோவேறுகழுதைகள்எசேக் 27:14
    வசனங்கள்
    எசேக் 27:14தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
  • தேதான்: சேணத்துணிகள்; தீவுகள்: யானைத்தந்தங்களும் கருங்காலி மரமும்எசேக் 27:15, எசேக் 27:20
    வசனங்கள்
    எசேக் 27:15தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
    எசேக் 27:20இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
  • சீரியர்: மரகதம், இரத்தாம்பரம், சித்திரத்தையல், மெல்லிய புடவை, பவளம், மாணிக்கம்எசேக் 27:16
    வசனங்கள்
    எசேக் 27:16சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள்.
  • யூதாவும் இஸ்ரவேலும்: கோதுமை, தேன், எண்ணெய், பிசின் தைலம்எசேக் 27:17
    வசனங்கள்
    எசேக் 27:17யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
  • தமஸ்கு: கெல்போனின் திராட்சைரசமும் கம்பளியும்எசேக் 27:18
    வசனங்கள்
    எசேக் 27:18தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள்.
  • அரேபியாவும் கேதாரும்: ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாடுகள்எசேக் 27:21
    வசனங்கள்
    எசேக் 27:21அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
  • சேபாவும் ராமாவும்: கந்தவர்க்கங்கள், இரத்தினங்கள், பொன்எசேக் 27:22
    வசனங்கள்
    எசேக் 27:22சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.

நியாயப்பிரமாணத்தில்

  • நேர்மையான தராசுகள், எடைக்கற்கள், அளவுகள்லேவி 19:35–36, உபா 25:13–15
    வசனங்கள்
    லேவி 19:35–36“நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.
    உபா 25:13–15“உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம். உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம். உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
  • வாங்குகிறவனும் விற்கிறவனும் ஒருவரையொருவர் ஏமாற்றக்கூடாதுலேவி 25:14
    வசனங்கள்
    லேவி 25:14ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது விலைகொடுத்து வாங்கினாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.

கூற்றுகள்

  • நல்லதல்ல என்று வாங்குகிறவன் சொல்கிறான், பின்பு போகும்போது பெருமை பேசுகிறான்நீதி 20:14
    வசனங்கள்
    நீதி 20:14வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
  • தானியம் விற்க ஓய்வுநாள் முடியக் காத்திருக்கும் வியாபாரிகள்ஆமோ 8:5
    வசனங்கள்
    ஆமோ 8:5நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும்,

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்