Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › முத்தங்கள்

அன்றாட வாழ்க்கை

வேதாகமத்தில் முத்தங்கள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 32 பகுதிகள், வரி வரியாக.

வாழ்த்துதலும் விடைபெறுதலும்

  • யாக்கோபு கிணற்றருகே ராகேலை முத்தமிட்டு, சத்தமிட்டு அழுகிறான்ஆதி 29:11
    வசனங்கள்
    ஆதி 29:11பின்பு யாக்கோபு ராகேலை முத்தம்செய்து, சத்தமிட்டு அழுது,
  • லாபான் தன் பேரப்பிள்ளைகளையும் மகள்களையும் முத்தமிட்டு விடைபெறுகிறான்ஆதி 31:55
    வசனங்கள்
    ஆதி 31:55லாபான் அதிகாலையில் எழுந்திருந்து, தன் மகன்களையும் தன் மகள்களையும் முத்தம் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பிப்போனான்.
  • ஏசா யாக்கோபிடம் ஓடி, அவனைத் தழுவி முத்தமிடுகிறான்ஆதி 33:4
    வசனங்கள்
    ஆதி 33:4அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
  • யோசேப்பு அழுதுகொண்டே தன் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் முத்தமிடுகிறான்ஆதி 45:15
    வசனங்கள்
    ஆதி 45:15பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
  • ஆரோன் தேவனுடைய பர்வதத்தில் மோசேயைச் சந்தித்து அவனை முத்தமிடுகிறான்யாத் 4:27
    வசனங்கள்
    யாத் 4:27ஆரோனை நோக்கி: “நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ” என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான்.
  • மோசே தன் மாமனாரை வணங்கி அவரை முத்தமிடுகிறான்யாத் 18:7
    வசனங்கள்
    யாத் 18:7அப்பொழுது மோசே தன்னுடைய மாமனுக்கு எதிராகப்போய், அவனை வணங்கி, முத்தம்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்திற்குள் நுழைந்தார்கள்.
  • நகோமி தன் மருமகள்களை முத்தமிடுகிறாள்; ஒர்பாள் அவளை முத்தமிட்டு விடைபெறுகிறாள்ரூத் 1:9, ரூத் 1:14
    வசனங்கள்
    ரூத் 1:9யெகோவா உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
    ரூத் 1:14அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள்.
  • தாவீதும் யோனத்தானும் முத்தமிட்டு ஒருவரோடொருவர் அழுகிறார்கள்1 சாமு 20:41
    வசனங்கள்
    1 சாமு 20:41சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
  • யோர்தானருகே தாவீது பர்சிலாயியை முத்தமிடுகிறான்2 சாமு 19:39
    வசனங்கள்
    2 சாமு 19:39மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
  • தன் தகப்பனையும் தாயையும் முத்தமிட்டு விடைபெற எலிசா அனுமதி கேட்கிறான்1 இராஜா 19:20
    வசனங்கள்
    1 இராஜா 19:20அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
  • திரும்பி வரும் மகனிடம் தகப்பன் ஓடி அவனை முத்தமிடுகிறான்லூக் 15:20
    வசனங்கள்
    லூக் 15:20எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
  • எபேசுவின் மூப்பர்கள் பவுலைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார்கள்அப் 20:37
    வசனங்கள்
    அப் 20:37அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு,

குடும்பமும் பாசமும்

  • ஈசாக்கு: என் மகனே, கிட்டவந்து என்னை முத்தமிடுஆதி 27:26–27
    வசனங்கள்
    ஆதி 27:26–27அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான். அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
  • கண் மங்கிய முதிர்வயதுள்ள யாக்கோபு யோசேப்பின் மகன்களை முத்தமிடுகிறான்ஆதி 48:10
    வசனங்கள்
    ஆதி 48:10முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான்.
  • மரித்த தன் தகப்பன்மேல் விழுந்து அழுது யோசேப்பு அவனை முத்தமிடுகிறான்ஆதி 50:1
    வசனங்கள்
    ஆதி 50:1அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான்.
  • சாமுவேல் சவுலை அபிஷேகம்செய்து முத்தமிடுகிறான்1 சாமு 10:1
    வசனங்கள்
    1 சாமு 10:1அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா?
  • அப்சலோம் திரும்பி வந்தபின் ராஜாவாகிய தாவீது அவனை முத்தமிடுகிறான்2 சாமு 14:33
    வசனங்கள்
    2 சாமு 14:33யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
  • அவர் தம்முடைய வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக!உன்னத 1:2
    வசனங்கள்
    உன்னத 1:2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக: உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
  • நேர்மையான பதில் உதடுகளில் முத்தமிடுவதுபோலநீதி 24:26
    வசனங்கள்
    நீதி 24:26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.

வஞ்சிக்கும் முத்தங்கள்

  • பகைவனின் முத்தங்கள் வஞ்சகமானவைநீதி 27:6
    வசனங்கள்
    நீதி 27:6நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
  • அப்சலோம் மக்களை முத்தமிட்டு அவர்களைத் தன் பக்கம் இழுக்கிறான்2 சாமு 15:5
    வசனங்கள்
    2 சாமு 15:5யாராவது ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தழுவி முத்தம் செய்வான்.
  • யோவாப் முத்தமிடுவதுபோல அமாசாவின் தாடியைப் பிடித்து அவனைக் குத்துகிறான்2 சாமு 20:9–10
    வசனங்கள்
    2 சாமு 20:9–10அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து, தன்னுடைய கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாக இல்லாமலிருந்தபோது, யோவாப் அவனை அவனுடைய குடல்கள் தரையிலே விழும்படி, அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் இறந்துபோனான்; அப்பொழுது யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
  • யூதாஸ்: நான் எவனை முத்தமிடுகிறேனோ அவன்தான்மத் 26:48–49, லூக் 22:48
    வசனங்கள்
    மத் 26:48–49அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
    லூக் 22:48இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

ஆராதனையும் ஆதித் திருச்சபையும்

  • விக்கிரகங்களை முத்தமிடுதல்: பாகாலும் கன்றுக்குட்டிகளும்1 இராஜா 19:18, ஓசியா 13:2
    வசனங்கள்
    1 இராஜா 19:18ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
    ஓசியா 13:2இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.
  • ஒரு பெண் இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறாள்; வீட்டுக்காரன் அவரை முத்தமிடவில்லைலூக் 7:38, லூக் 7:45
    வசனங்கள்
    லூக் 7:38அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
    லூக் 7:45நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
  • பரிசுத்த முத்தத்தோடு ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்ரோமர் 16:16, 1 தெச 5:26, 1 பேது 5:14
    வசனங்கள்
    ரோமர் 16:16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
    1 தெச 5:26சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
    1 பேது 5:14ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவிற்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்