Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › பந்தியும் உணவும்

அன்றாட வாழ்க்கை

வேதாகமத்தில் பந்தியும் உணவும்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 36 பகுதிகள், வரி வரியாக.

பந்திகள்

  • எலிசாவின் சிறிய அறையில் ஒரு கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு விளக்கு2 இராஜா 4:10
    வசனங்கள்
    2 இராஜா 4:10நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
  • அதோனிபேசேக்கின் மேஜையின் கீழ் எழுபது ராஜாக்கள் துணிக்கைகளைப் பொறுக்கினார்கள்நியா 1:7
    வசனங்கள்
    நியா 1:7அப்பொழுது அதோனிபேசேக்: 70 ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
  • ஆசரிப்புக் கூடாரத்தின் மேஜை: பொன் தகடு பொதிந்த சீத்திம் மரம், சுமக்கும் தண்டுகளோடுயாத் 25:23–28
    வசனங்கள்
    யாத் 25:23–28“சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக இருக்கட்டும். அதைச் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் விளிம்பை உண்டாக்கி, சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி, அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும். அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
  • ஒவ்வொரு ஓய்வுநாளிலும் பொன் மேஜையின்மேல் இரண்டு வரிசையாகப் பன்னிரண்டு அப்பங்கள்லேவி 24:5–8
    வசனங்கள்
    லேவி 24:5–8“அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும். அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து, ஒவ்வொரு அடுக்கிலும் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்துடன் இருந்து, நன்றியின் அடையாளமாகக் யெகோவாவுக்கேற்ற தகனபலியாக இருக்கும். அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள் தோறும் யெகோவாவுடைய சந்நிதியில் அடுக்கிவைப்பானாக.
  • தேவாலயத்திற்காகப் பொன் மேஜைகளும் வெள்ளி மேஜைகளும்1 நாளா 28:16
    வசனங்கள்
    1 நாளா 28:16சமூகத்து அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,
  • இயேசு காசுக்காரர்களின் மேஜைகளைக் கவிழ்க்கிறார்யோவா 2:15
    வசனங்கள்
    யோவா 2:15கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு,
  • மேஜையின் கீழுள்ள நாய்கள் பிள்ளைகளின் துணிக்கைகளைத் தின்கின்றனமத் 15:27, மாற் 7:28
    வசனங்கள்
    மத் 15:27அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
    மாற் 7:28அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
  • செல்வந்தனின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளுக்காக லாசரு ஏங்குகிறான் (உவமை)லூக் 16:21
    வசனங்கள்
    லூக் 16:21அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று.
  • உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போலசங் 128:3
    வசனங்கள்
    சங் 128:3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

உட்காருதலும் சாய்ந்திருத்தலும்

  • விருந்தினர் உண்ணும்போது ஆபிரகாம் மரத்தின் கீழ் அவர்கள் அருகே நிற்கிறான்ஆதி 18:8
    வசனங்கள்
    ஆதி 18:8ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் சாப்பிட்டார்கள்.
  • உணவு நேரத்தில் ரூத் அறுப்பவர்களின் அருகே உட்காருகிறாள்ரூத் 2:14
    வசனங்கள்
    ரூத் 2:14பின்பு போவாஸ் சாப்பாட்டு நேரத்தில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்தைப் சாப்பிட, புளிப்பான திராட்சை ரசத்திலே உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் அருகில் உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீதியானதை வைத்துக்கொண்டாள்.
  • ராணியாகிய எஸ்தர் சாய்ந்திருந்த மஞ்சத்தின்மேல் ஆமான் விழுகிறான்எஸ்த 7:8
    வசனங்கள்
    எஸ்த 7:8ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
  • இயேசு பன்னிரண்டு பேரோடு பந்தியில் சாய்ந்திருக்கிறார்மத் 26:20
    வசனங்கள்
    மத் 26:20மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
  • இயேசுவின் அருகே சாய்ந்திருந்த சீடன் அவர் மார்பில் சாய்ந்து கேட்கிறான்யோவா 13:23–25
    வசனங்கள்
    யோவா 13:23–25அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
  • ஒரு பரிசேயன் இயேசுவை உணவுக்கு அழைக்கிறான்; அவர் பந்தியில் அமர்கிறார்லூக் 7:36
    வசனங்கள்
    லூக் 7:36பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
  • மார்த்தாள் பணிவிடை செய்கிறாள்; லாசரு இயேசுவோடு பந்தியில் இருக்கிறான்யோவா 12:2
    வசனங்கள்
    யோவா 12:2அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான்.
  • ஐயாயிரம் பேர் நூறு நூறாகவும் ஐம்பது ஐம்பதாகவும் புல்லின்மேல் உட்காருகிறார்கள்மாற் 6:39–40, லூக் 9:14
    வசனங்கள்
    மாற் 6:39–40அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
    லூக் 9:14அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.

யார் யாரோடு உண்டார்கள்

  • தாவீது சவுலின் பந்திக்கு வரவில்லை; யோனத்தான் கோபத்தோடு பந்தியிலிருந்து எழுந்துபோகிறான்1 சாமு 20:29, 1 சாமு 20:34
    வசனங்கள்
    1 சாமு 20:29அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
    1 சாமு 20:34கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.
  • சாலொமோனின் பந்திக்கு வரும் எல்லோருக்கும் அதிகாரிகள் உணவு அளிக்கிறார்கள்1 இராஜா 4:27
    வசனங்கள்
    1 இராஜா 4:27மேற்சொல்லிய அதிகாரிகளில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவிற்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் தேவையானவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
  • சாலொமோனின் பந்தியும் அவனுடைய ஊழியர்களின் இருக்கைகளும் சேபாவின் ராணியை வியக்கவைக்கின்றன1 இராஜா 10:4–5
    வசனங்கள்
    1 இராஜா 10:4–5சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும், அவனுடைய பந்தியின் உணவு வகைகளையும், வேலைக்காரர்களின் வீடுகளையும், வேலைக்காரர்களின் பணியையும், அவனுடைய ஆடைகளையும், அவனுக்கு பானம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் வியப்படைந்து,
  • விருந்தினரைத் தவிர, அநேக யூதர்களும் அதிகாரிகளும் நெகேமியாவின் பந்தியில் உண்கிறார்கள்நெகே 5:17
    வசனங்கள்
    நெகே 5:17யூதர்களும் மூப்பர்களுமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலும் இருக்கிற யூதர்கள் அல்லாதவர்களிடமிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என்னுடைய பந்தியில் சாப்பிட்டார்கள்.
  • யோயாக்கீன் வாழ்நாள் முழுவதும் பாபிலோன் ராஜாவின் பந்தியில் உண்கிறான்2 இராஜா 25:29
    வசனங்கள்
    2 இராஜா 25:29அவனுடைய சிறைச்சாலை உடைகளை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாட்களும் எப்பொழுதும் தனக்கு முன்பாக உணவருந்தச் செய்தான்.
  • மத்தேயுவின் வீட்டில் இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உண்கிறார்மத் 9:10–11, மாற் 2:15–16, லூக் 15:2
    வசனங்கள்
    மத் 9:10–11பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
    மாற் 2:15–16அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள்.
    லூக் 15:2அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
  • என்னைக் காட்டிக்கொடுப்பவனுடைய கை என்னோடு பந்தியில் இருக்கிறதுலூக் 22:21
    வசனங்கள்
    லூக் 22:21பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.
  • உயிர்த்தெழுந்த இயேசு: வாருங்கள், சாப்பிடுங்கள்யோவா 21:12
    வசனங்கள்
    யோவா 21:12இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
  • முதல் விசுவாசிகள் வீடுதோறும் அப்பம் பிட்கிறார்கள்அப் 2:46
    வசனங்கள்
    அப் 2:46அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,
  • பந்தி விசாரிப்புக்காகப் பிரசங்கத்தை விட்டுவிடப் பன்னிருவர் விரும்பவில்லைஅப் 6:2
    வசனங்கள்
    அப் 6:2அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.
  • விருத்தசேதனமில்லாதவர்களோடு உண்டதற்காகப் பேதுரு குற்றம்சாட்டப்படுகிறான்அப் 11:3
    வசனங்கள்
    அப் 11:3விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள்.
  • அந்தியோகியாவில் பேதுரு யூதரல்லாதவர்களோடு உண்பதிலிருந்து விலகுகிறான்கலா 2:12
    வசனங்கள்
    கலா 2:12எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
  • சிறைக்காவலன் பவுலுக்கும் சீலாவுக்கும் உணவு பரிமாறுகிறான்அப் 16:34
    வசனங்கள்
    அப் 16:34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.
  • அவிசுவாசி உன்னை அழைக்கிறானா? உனக்கு முன் வைக்கப்படுவதை உண்1 கொரி 10:27
    வசனங்கள்
    1 கொரி 10:27அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்