Bible Explorer செயலியைப் பெறுக

ஆராயுங்கள் › தலைப்புகள் › வீடுகள்

அன்றாட வாழ்க்கை

வேதாகமத்தில் வீடுகள்

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்-இன் 38 பகுதிகள், வரி வரியாக.

  • கல்வீடுகள், கேதுரு உத்திரங்களும் தேவதாரு மச்சுகளும்ஆமோ 5:11, உன்னத 1:17
    வசனங்கள்
    ஆமோ 5:11நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.
    உன்னத 1:17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
  • சுவர்கள் சாந்தால் பூசப்பட்டனலேவி 14:42, தானி 5:5
    வசனங்கள்
    லேவி 14:42வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
    தானி 5:5அந்த நேரத்தில் மனித கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதியது; எழுதின அந்தக் கையை ராஜா கண்டான்.
  • பத்து முழமும் எட்டு முழமுமான பெரிய விலையுயர்ந்த கற்களால் அஸ்திபாரம்1 இராஜா 7:9–10
    வசனங்கள்
    1 இராஜா 7:9–10இவைகளெல்லாம், உள்ளேயும் வெளியேயும், அஸ்திபாரம்முதல் மேல் கூரைவரை, வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவின்படி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்டது. அஸ்திபாரம் 15 அடி கற்களும், 12 அடி கற்களுமான விலையுயர்ந்த பெரிய கற்களாக இருந்தது.
  • சாலொமோன் தன் அரண்மனையைக் கட்டப் பதின்மூன்று வருடங்கள் எடுக்கிறான்1 இராஜா 7:1
    வசனங்கள்
    1 இராஜா 7:1சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க 13 வருடங்கள் சென்றது.
  • தாவீது கேதுரு வீட்டில் வாழ்கிறான்2 சாமு 7:2
    வசனங்கள்
    2 சாமு 7:2ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான்.
  • பலகை பதித்த வீடுகள்ஆகாய் 1:4
    வசனங்கள்
    ஆகாய் 1:4இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மேல்தளமுள்ள உங்கள் வீடுகளில் குடியிருக்கவேண்டிய காலம் இதுவோ?
  • ராகாபின் வீடு பட்டணத்தின் மதிலோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறதுயோசு 2:15
    வசனங்கள்
    யோசு 2:15அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள்.
  • சபைகள் விசுவாசிகளின் வீடுகளில் கூடினஅப் 12:12, ரோமர் 16:5, கொலோ 4:15, பிலே 1:2
    வசனங்கள்
    அப் 12:12அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
    ரோமர் 16:5அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
    கொலோ 4:15லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
    பிலே 1:2பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்களுடைய உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவிற்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபை விசுவாசிகளுக்கும் எழுதுகிறதாவது:

மேல்தளங்கள்

  • ராகாப் தன் மேல்தளத்தில் பரப்பியிருந்த சணல்தட்டைகளுக்குள் வேவுகாரரை மறைக்கிறாள்யோசு 2:6
    வசனங்கள்
    யோசு 2:6அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
  • சாமுவேல் மேல்தளத்தில் சவுலோடு பேசுகிறான்; சவுல் அங்கே தூங்குகிறான்1 சாமு 9:25–26
    வசனங்கள்
    1 சாமு 9:25–26அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே சவுலோடு பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
  • மாலையில் தாவீது அரண்மனையின் மேல்தளத்தில் உலாவுகிறான்2 சாமு 11:2
    வசனங்கள்
    2 சாமு 11:2ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
  • பண்டிகைக்காக மேல்தளங்களிலும் முற்றங்களிலும் கூடாரங்கள் கட்டப்படுகின்றனநெகே 8:16
    வசனங்கள்
    நெகே 8:16அப்படியே மக்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் வளாகங்களிலும், தேவனுடைய ஆலயவளாகங்களிலும், தண்ணீர்வாசல் வெளியிலும், எப்பிராயீம்வாசல் வெளியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
  • பெலிஸ்தரின் கோவிலின் மேல்தளத்தில் ஏறக்குறைய மூவாயிரம் பேர்நியா 16:27
    வசனங்கள்
    நியா 16:27அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம் 3,000 பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  • நண்பர்கள் கூரையைத் திறந்து ஓடுகள் வழியாக ஒரு திமிர்வாதக்காரனை இறக்குகிறார்கள்மாற் 2:4, லூக் 5:19
    வசனங்கள்
    மாற் 2:4மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
    லூக் 5:19மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.
  • உள்ளறைகளில் காதோடு பேசியவை வீட்டின்மேலிருந்து அறிவிக்கப்படும்லூக் 12:3
    வசனங்கள்
    லூக் 12:3ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.

அறைகளும் கதவுகளும் ஜன்னல்களும்

  • ராஜாவாகிய எக்லோன் தன் குளிர்ந்த மேலறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறான்நியா 3:20
    வசனங்கள்
    நியா 3:20ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.
  • எலியா விதவையின் வீட்டின் மேலறையில் தங்குகிறான்1 இராஜா 17:19
    வசனங்கள்
    1 இராஜா 17:19அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து:
  • பஸ்காவுக்காக ஆயத்தமாகத் தளவாடங்கள் போட்ட பெரிய மேலறைமாற் 14:14–15
    வசனங்கள்
    மாற் 14:14–15அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
  • அழுவதற்காக யோசேப்பு தனியறைக்குப் போகிறான்ஆதி 43:30
    வசனங்கள்
    ஆதி 43:30யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினதால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
  • அகசியா தன் மேல்வீட்டின் ஜன்னல் கிராதியிலிருந்து விழுகிறான்2 இராஜா 1:2
    வசனங்கள்
    2 இராஜா 1:2அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் ஜன்னலிலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
  • சிசெராவின் தாய் ஜன்னல் கிராதி வழியாகப் பார்க்கிறாள்நியா 5:28
    வசனங்கள்
    நியா 5:28“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள்.
  • ஐத்திகு ஜன்னலில் தூங்கி மூன்றாம் மாடியிலிருந்து விழுகிறான்அப் 20:9
    வசனங்கள்
    அப் 20:9அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌.

நியாயப்பிரமாணத்தில்

  • புதிய வீட்டின் மேல்தளத்தைச் சுற்றிக் கைப்பிடிச்சுவர் வேண்டும்உபா 22:8
    வசனங்கள்
    உபா 22:8“நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.
  • நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதப்படுகின்றனஉபா 6:9
    வசனங்கள்
    உபா 6:9அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
  • வீட்டில் பூஞ்சணம்: கற்கள் மாற்றப்பட்டு, சுவர்கள் சுரண்டப்பட்டு மீண்டும் பூசப்படுகின்றனலேவி 14:40–45
    வசனங்கள்
    லேவி 14:40–45பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக. “கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
  • மதிலுள்ள பட்டணத்தில் விற்ற வீட்டை ஒரு வருடத்திற்குள் மீட்டுக்கொள்ளலாம்லேவி 25:29–30
    வசனங்கள்
    லேவி 25:29–30“ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். ஒரு வருடத்திற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருடத்திலும் அது விடுதலையாகாது.
  • மதிலில்லாத கிராமங்களின் வீடுகள் யூபிலி வருடத்தில் உரிமையாளர்களுக்குத் திரும்பும்லேவி 25:31
    வசனங்கள்
    லேவி 25:31மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும்.
  • புதிய வீட்டைக் கட்டி இன்னும் பிரதிஷ்டை செய்யாதவன் போரிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுகிறான்உபா 20:5
    வசனங்கள்
    உபா 20:5அன்றியும் அதிபதிகள் மக்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யவேண்டியதாகும்.

கூற்றுகள்

  • ஞானமுள்ள மனிதன் தன் வீட்டைக் கன்மலையின்மேல் கட்டுகிறான் (உவமை)மத் 7:24–27, லூக் 6:48
    வசனங்கள்
    மத் 7:24–27ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
    லூக் 6:48ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
  • ஞானத்தினால் வீடு கட்டப்படும்நீதி 24:3
    வசனங்கள்
    நீதி 24:3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
  • ஞானமுள்ள ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டைக் கட்டுகிறாள்நீதி 14:1
    வசனங்கள்
    நீதி 14:1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்