பல நாட்கள் எரிந்த ஒரு தீ நகரின் பெரும்பகுதியை அழித்தது. நீரோ கிறிஸ்தவர்கள்மேல் பழிசுமத்தி அவர்களில் பலரைக் கொல்வித்ததாக வரலாற்றாசிரியர் தாசித்துஸ் எழுதுகிறார் — ரோம் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதில் அறியப்பட்ட மிக முந்தைய நிகழ்வு இது.
கலைக்களஞ்சியம் › இதற்கிடையில் உலகில்
வேதாகமத்தில் · சுமார் கி.பி. 60–62 · ரோம்
ரோமில் பவுல்
மெலித்தா தீவில் கப்பல் உடைந்த பிறகு பவுல் ரோமை அடைகிறான்; அங்கே காவலின் கீழ் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து, தன்னைக் காண வருபவர்களை வரவேற்கிறான்.
மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு, சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து, அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம். அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள். நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான். அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது: நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார். ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.அதே நேரத்தில் உலகில்
அப்போஸ்தலருடைய நடபடிகள், பவுல் சுமார் கி.பி. 60–62-இல் இரண்டு ஆண்டுகள் ரோமாபுரியில் காவலில் இருந்தபடி, வாடகை வீட்டில் வெளிப்படையாகப் போதித்ததோடு முடிகிறது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:30–31). அப்போது பேரரசர் நீரோ. கி.பி. 60-களில் உலகம் இப்படி இருந்தது.
பிரிட்டனில், ஐசெனி மக்களின் அரசி பூதிக்கா ஒரு பெரும் கிளர்ச்சியை வழிநடத்தி, லண்டனாக வளர்ந்த இளம் ரோம நகரமான லோண்டினியத்தை எரித்தாள்; பின்னர் ரோமர்கள் அவளைத் தோற்கடித்தார்கள்.
அலெக்சந்திரியாவில் பொறியாளர் ஹீரோ, நீராவியால் சுழலும் ஒரு பந்தையும், காற்றாலும் நீராலும் இயங்கும் இயந்திரங்களையும் விவரித்தார். அவர் குறிப்பிடும் ஒரு சந்திர கிரகணத்தைக் கொண்டு அவருடைய காலம் வழக்கமாகக் கணிக்கப்படுகிறது; அது கி.பி. 62-இல் நிகழ்ந்த ஒன்றோடு பொருந்துகிறது.
சீன மரபின்படி, ஹான் பேரரசர் மிங் ஒரு பொன் உருவத்தைக் கனவில் கண்டு, மேற்கே தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் பௌத்தத் துறவிகளோடும் நூல்களோடும் திரும்பி வந்தார்கள்; லுவோயாங்கில் அவர்களுக்காக வெள்ளைக் குதிரைக் கோயில் கட்டப்பட்டது — சீனாவின் முதல் பௌத்தக் கோயில்.
மத்திய ஆசியாவிலிருந்து வந்த குஷாண அரசர்கள் இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா முழுவதும் பரவிய ஒரு பேரரசைக் கட்டியெழுப்பினார்கள். ரோம், இந்தியா, சீனா ஆகியவற்றை இணைத்த வழிகளில் அவர்களுடைய நாடுகள் அமைந்திருந்தன.
சுமார் 1110-இல் தொகுக்கப்பட்ட கீவின் முதன்மை வரலாற்றுக் குறிப்பேடு, அப்போஸ்தலனாகிய அந்திரேயா தினேப்பர் ஆற்றின் வழியே மேல்நோக்கிப் பயணம் செய்து, கீவ் நகரம் எழவிருந்த குன்றுகளின் மேல் ஒரு சிலுவையை நாட்டி, அங்கே ஒரு பெரிய நகரம் தோன்றும் என்று முன்னறிவித்ததாகச் சொல்கிறது. வரலாற்றாசிரியர்கள் இதை ஒரு புராணக் கதையாகக் கருதுகிறார்கள்; அதைவிடப் பழைய ஒரு மரபு அந்திரேயாவின் ஊழியக் களமாகச் சித்தியாவைக் குறிப்பிடுகிறது.
ஆதாரங்கள்: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்