முதலாம் செர்க்சஸ் (கி.மு. 486–465) கிரேக்கத்தின்மேல் படையெடுத்து, கி.மு. 480-இல் சலாமிஸில் தன் கப்பற்படையை இழந்தான். அவனுடைய மகன் முதலாம் அர்தசஷ்டா (கி.மு. 465–424) சூசானில் நெகேமியா சேவித்த ராஜா.
கலைக்களஞ்சியம் › இதற்கிடையில் உலகில்
வேதாகமத்தில் · கி.மு. 445 · எருசலேம்
நெகேமியாவும் மதில்களும்
பெர்சிய ராஜாவின் பானபாத்திரக்காரனான நெகேமியா, எருசலேமின் இடிந்த மதில்களை இரவில் பார்வையிட்டு, அவற்றை மீண்டும் கட்டுவதில் மக்களை வழிநடத்துகிறான்.
நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு, நான் சில மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் எழுந்து நகரத்தைச் சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமிற்காகச் செய்யவேண்டிய காரியத்தை என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகத்தைத் தவிர வேறொரு மிருகமும் என்னுடன் இருந்ததில்லை. நான் அன்று இரவு பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் புறப்பட்டு, வலுசர்ப்பக் கிணற்றைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன மதிலையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன். அந்த இடத்தைவிட்டு ஊற்றுவாசல் அருகிலும், ராஜாவின் குளத்தின் அருகிலும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோவதற்கு வழி இல்லாதிருந்தது. அன்று இரவிலேயே நான் ஆற்றோரமாகப் போய், மதிலைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாக வந்துவிட்டேன். நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காவது, ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காவது, வேலைசெய்கிற மற்றவர்களுக்காவது ஒன்றும் தெரிவிக்கவில்லை. பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருப்பதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடப்பதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி அவமானம் அடையாமலிருக்க, எருசலேமின் மதிலைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள். ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களை கேலிசெய்து, எங்களை அவமதித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்யப்போகிறீர்களோ என்றார்கள். அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்வார்; அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பெயர்சொல்லப்பட ஒன்றும் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன்.அதே நேரத்தில் உலகில்
பெர்சிய ராஜாவாகிய முதலாம் அர்தசஷ்டாவின் பானபாத்திரக்காரனான நெகேமியா கி.மு. 445-இல் எருசலேமுக்கு வந்து அதன் மதில்களை மீண்டும் கட்டினான். ஒரு தலைமுறைக்கு முன், எஸ்தர் புத்தகத்தின் ராஜாவாகிய அகாஸ்வேரு வழக்கமாக முதலாம் செர்க்சஸோடு அடையாளம் காணப்படுகிறான். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் உலகம் இப்படி இருந்தது.
நெகேமியா எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டிக்கொண்டிருந்தபோது, பெரிக்கிளீஸின் கீழ் அத்தேனே தன் அக்ரோபோலிஸ் மீது கி.மு. 447-இல் தொடங்கப்பட்ட பார்த்தினோனைக் கட்டிக்கொண்டிருந்தது.
கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோட்டஸ் மேற்குலகின் முதல் பெரிய வரலாற்று நூலான வரலாறுகளை எழுதினார். அதன் 4-ஆம் புத்தகத்தில் அவர் சித்தியர்களையும், நைலுக்கு அடுத்தபடியாக மிகவும் வளம் தரும் ஆறு என்று அவர் அழைக்கும் போரிஸ்தெனீஸ் — தினேப்பர் — ஆற்றையும் விவரிக்கிறார். அதன் முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள ஒல்பியாவுக்கு அவர் ஒருவேளை சென்றிருக்கலாம்.
அஸ்வானில் உள்ள எலிபன்டைன் தீவில், யூத வீரர்கள் பெர்சியர்களுக்குச் சேவை செய்தார்கள்; அவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆலயமும் இருந்தது. கி.மு. 407-இல் அவர்கள் அரமேய மொழியில் எழுதிய கடிதங்கள், சமாரியாவின் ஆளுநரும் நெகேமியாவின் எதிரியுமான சன்பல்லாத்தின் மகன்களைக் குறிப்பிடுகின்றன (நெகேமியா 2:10).
சீனாவில் பழைய ஒழுங்கு சிதைந்து ஏழு போட்டி அரசுகளாகப் பிரிந்தது. கலக்கம் நிறைந்த இந்தக் காலத்தில், “நூறு சிந்தனைப் பள்ளிகளின்” சிந்தனையாளர்கள் — கன்பூசியஸைப் பின்பற்றியவர்கள், மோசியைப் பின்பற்றியவர்கள், தாவோ ஆசிரியர்களைப் பின்பற்றியவர்கள் — எப்படி வாழ வேண்டும், எப்படி ஆள வேண்டும் என்று விவாதித்தார்கள்.
ஆதாரங்கள்: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்