கோரேசு பாபிலோனைப் பிடித்த பின் அவனுக்காக எழுதப்பட்ட ஒரு களிமண் உருளை, நாடுகடத்தப்பட்ட மக்களையும் அவர்களுடைய தெய்வங்களின் உருவங்களையும் அவன் அவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திருப்பி அனுப்பியதை விவரிக்கிறது. அது யூதர்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை, ஆனால் எஸ்றா 1-இல் உள்ளதைப் போன்ற ஒரு கொள்கையைக் காட்டுகிறது. அது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
கலைக்களஞ்சியம் › இதற்கிடையில் உலகில்
வேதாகமத்தில் · கி.மு. 538 · பாபிலோன்
நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்பக் கோரேஸ் அனுமதிக்கிறான்
பாபிலோனைக் கைப்பற்றிய பெர்சியாவின் கோரேஸ், யூதர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி எருசலேமில் தேவாலயத்தை மீண்டும் கட்ட அனுமதிக்கிறான்.
எரேமியாவின் வாயினால் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்: பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனுடன் அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவானாக; எருசலேமில் வாசம்செய்கிற தேவனே தேவன். அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான். அப்பொழுது எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள். அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற அனைவரும் மனஉற்சாகமாகக் காணிக்கை கொடுத்ததுமல்லாமல், வெள்ளிப் பொருட்களையும், பொன்னையும் மற்ற பொருட்களையும் மிருகஜீவன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்து, அவர்களுடைய கைகளைத் திடப்படுத்தினார்கள். நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த யெகோவாவுடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் 30, வெள்ளிப்பாத்திரங்கள் 1,000, கத்திகள் 29 பொற்கிண்ணங்கள் 30 வெள்ளிக் கிண்ணங்கள் 410, மற்றப் பொருட்கள் 1,000 பொன் வெள்ளிப் பொருட்களெல்லாம் 5,400, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகும்போது எடுத்துக் கொண்டுபோனான்.அதே நேரத்தில் உலகில்
கி.மு. 539-இல் பெர்சியாவின் மகா கோரேசு பாபிலோனைப் பிடித்தான்; யூதாவிலிருந்து சிறைப்பட்டுப் போனவர்கள் வீடு திரும்பி ஆலயத்தை மீண்டும் கட்ட அவன் அனுமதித்ததாக எஸ்றா 1 சொல்கிறது. அது முதலாம் தரியுவின் காலத்தில், கி.மு. 516-இலோ 515-இலோ கட்டி முடிக்கப்பட்டது. கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் உலகம் இப்படி இருந்தது.
நல்ல ஒழுங்கு நேர்மையான ஆட்சியாளர்கள், பெற்றோர்மீதான மரியாதை, கல்வி ஆகியவற்றிலிருந்தே தொடங்குகிறது என்று கன்பூசியஸ் லூ அரசில் போதித்தார். அவருடைய மாணவர்கள் உரையாடல்கள் என்ற நூலில் தொகுத்த அவருடைய மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சீனாவின் வாழ்க்கையை வடிவமைத்தன.
புத்தர் எனப்படும் சித்தார்த்த கௌதமர் வட இந்தியாவில் போதித்தார்; அவரைப் பின்பற்றியவர்கள் பௌத்த மதத்தை நிறுவினார்கள். மரபு அவருடைய வாழ்நாளைச் சுமார் கி.மு. 563–483 என்கிறது; பல அறிஞர்கள் இப்போது அதைப் பிற்காலத்தில், சுமார் கி.மு. 480–400 என்று வைக்கிறார்கள்.
ரோம மரபின்படி, ரோம் மக்கள் தங்கள் கடைசி அரசனான செருக்குமிக்க தர்க்குவினியஸைக் கி.மு. 509-இல் துரத்திவிட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கான்சல்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள்.
அனைத்துச் சுதந்திர ஆண்களின் சபையே பொது விஷயங்களைத் தீர்மானிக்கும்படி கிளீஸ்தெனீஸ் அத்தேனேயின் குடிமக்களை மறுசீரமைத்தார் — அத்தேனிய மக்களாட்சியின் தொடக்கம் இதுவே.
எந்தப் பெர்சிய ராஜாவின் காலத்தில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதோ (எஸ்றா 6:15), அந்த முதலாம் தரியு, சித்தியர்களுக்கு எதிராக ஒரு பெரும் படையோடு தானியூப் ஆற்றைக் கடந்தான். ஹெரோடோட்டஸின்படி, சித்தியர்கள் புல்லை எரித்தபடியே புல்வெளியின் ஊடே பின்வாங்கினார்கள்; பெர்சியர்கள் திரும்பிப் போனார்கள்.
மெக்சிகோவின் ஓஹாக்கா பள்ளத்தாக்கில், சப்போத்தெக் மக்கள் சமன்செய்யப்பட்ட ஒரு மலை உச்சியில் மோன்தே ஆல்பானைக் கட்டத் தொடங்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அது அவர்களுடைய தலைநகராக இருந்தது.
ஆதாரங்கள்: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்